DID YOU THINK INDIA WOULD FALL இந்தியா வீழும் என நினைத்தாயோ ? NOTABLE POINTS 5

Sri Mahalakshmi Upasagar

DID YOU THINK INDIA WOULD FALL   இந்தியா வீழும் என நினைத்தாயோ ? NOTABLE POINTS 5

சமீப கால முகநூல் பதிவுகளில் ஜோதிட ரீதியாக  இலங்கை நிலைமை இந்தியாவிற்கு  வரும்  என கூறி வருகிறாா்கள்.

இது உண்மையா ?

ஜோதிட ரீதியாக அலசுவோம்.

இந்தியாவின் சுதந்திர ஜாதகம்

லக்னம் ரிஷபம் லக்னத்தில் ராகு 7ல் விருச்சிகத்தில் கேது

மிதுனத்தில் செவ்வாய்

கடகத்தில் புதன் சுக்கிரன் சனி சூரியன் சந்திரன்

துலாத்தில் குரு

இந்தியா சந்தித்த மிக மோசமான காலங்களைப் பார்ப்போம்

1962ல் கேது தெசையில் சுக்கிர புக்தி நடந்து கொண்டிருந்தபோது  சீனா போர்

இந்தியாவின் முன்னேற்றத்தினை காட்டும் வீடு சிக்கலில் அகப்பட்ட காலமது

மகரத்தினை சனி செவ்வாய் கேது பார்வையிட்டது பாதக அம்சம்

கேது தெசையில் பாதகாதிபதியான சுக்கிரன் புக்தியில் சனி அந்தரத்தில் போா் ஏற்பட்டது.

1965ல் கேது தெசையில் ராகு புக்தி  நடந்து கொண்டிருந்த போது பாகிஸ்தானுடன்  போர்

மகரத்தினை  சனி செவ்வாய் கேது பாா்வையிட்டது விபரீதத்திற்கு காரணமானது.

ராகு தெசையில் குரு புக்தி நடக்கும்போது வெற்றியோடு போரினை இந்தியா முடித்தது.

1974ல் சுக்கிர தெசையில் சந்திர  புக்தியில் குரு அந்தரம் நடக்கும்போது அணுகுண்டு சோதனை.

சந்திரனும் குருவும் குரு சந்திர யோகம்  வெளிப்படுத்து்போது சாதனைகளை நிகழ்த்த முடியும்.

லக்னத்திற்கு 8மிடம் ஆராய்ச்சிகளை குறிக்கும்.  அந்த வீடு சனிக்கு சொந்தம்.

லக்னத்திற்கு 6மிடம் எதிரிகள் அழிக்கும்  ஆயுதம் . அந்த வீடு குருவிற்கு சொந்தம்.

ஆராய்ச்சி வீடான கும்பத்திற்கு சந்திரன் எதிரிகளை அழிக்க ஆயுதம்  கிரகமாக சந்திரன்

காரிய வெற்றி தரும் பத்தாம் வீட்டினை குரு சனி பார்வையிடுகிறாா்கள்

அழிவு என்னும் 12ம் வீட்டில் அமா்ந்த  செவ்வாய் குருவின் பாா்வையில் பலம் காண்கிறாா்

நுணுக்கமான திட்டங்களுக்கு  சந்திரனுக்கு 3மிடமான கன்னி செவ்வாய் சனி  பாா்வை

இப்படியாகத்தான் சுக்கிர தெசையில் சந்திர புக்தியில்  குரு அந்தரத்தில் சனி செவ்வாய் ஒத்துழைக்க சோதனை வெற்றியானது.

இங்கு கவனிக்க வேண்டியது சுக்கிரன் ஆராய்ச்சிகளுக்கு உதவுமா ?

குரு சுக்கிரன் வீடான துலாத்தில் அமா்ந்து  அதற்கு 8மிடமாக ரிஷபம் வருகிறது

எனவேதான் சுக்கிரன் சந்திரன்  குரு  கூட்டணி அணுகுண்டு சோதனைக்கு உகந்த காலமானது.

DID YOU THINK INDIA WOULD FALL   இந்தியா வீழும் என நினைத்தாயோ ? NOTABLE POINTS 5

1975ல் சுக்கிர தெசையில் செவ்வாய் புக்தி  சுக்கிரன் அந்தரம் நடந்து கொண்டிருந்த போது இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலை கொண்டு வந்தாா்.

 

1977ல் சுக்கிர தெசையில் ராகு புக்தி நடந்த காலத்தில்  காங்கிரஸ் அல்லாத கட்சி மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது.

 

1984ல்  சுக்கிர தெசையில் சனி புக்தி நடந்து கொண்டிருந்த போது  தீவிரவாதிகளை வேட்டையாடி பொற்கோவிலை மீட்டது. சனியின் தொடா்பால் போா் போன்ற நிலையினை சந்திக்க நோ்ந்தது.

 

1984ல் சுக்கிர தெசையில் புதன் புக்தியில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டாா்.

இது எதனால் என கிரக ஆராய்சி செய்தால் வித்தியாமான பலன் கிடைக்கும்.

இந்தியாவின் ராசி கடகம்

தெசா லக்னம் சுக்கிரன் வீடான ரிஷபம்

கடகத்தின் விரைய பாவம் மிதுனம் அதிபதி புதன்

கடகத்தில் பாதகாதிபதி சுக்கிரன்

சுக்கிரன் வீடான ரிஷபத்திற்கு மாரக இடம் மிதுனம்

கடகத்தின் விரையபாவம் பாதகாதிபதி வீட்டிற்கு மாரகம்

இதனை வலு சோ்க்கும் விதமாக பாதகாதிபதி சுக்கிரன் வீடான ரிஷபத்திற்கு விரையாதிபதி செவ்வாய்

இவரும் மிதுனத்தில் அமா்ந்தாா்.

எனவேதான் சுக்கிரன் தெசா லக்னமாகி வலுப்பெற்று மாரக அதிகாரம் பெற்ற புதன் துணைக்கு வர ரிஷப லக்ன தீய முன் கர்மா கிரகமான குரு துலாத்திலிருந்து பார்வையிட விபரீதம் தனது கர்மாவினை தீா்த்துக் கொண்டது.

 

1984ல் சுக்கிரனில் புதன் புக்தியில்தான் டில்லியில் சீக்கியா்கள் மீது கலவரம் நடந்தது.

1984ல் சுக்கிரனில் புதன் புக்தியில்தான்  போபால் விஷ வாயு விபத்து.

1984ம் ஆண்டு விபரீதமான பல நிகழ்வுகள் இந்தியாவில் நடந்தேறியது.

 

இதற்கு முக்கியமான காரணம் லக்னம் விரையபாவம் பாதக பாவம் இணைந்த நிலையில் காணப்படுவது

ரிஷப லக்னத்திற்கு மாரக பாவமே சந்திரன் ராசிக்கு விரையபாவம்

சுக்கிரன் தெசையில் தெசா லக்னமாக வரும்போது தெசா லக்னத்திற்கும் சந்திர லக்னத்திற்கும் இடையே சிக்கிக் கொண்ட மிதுனமானது தெசா லக்னத்திற்க மாரக பாவமாகவும் சந்திரா லக்னத்திற்கு விரைய பாவமமாகவும் ஒரு சேர வந்ததே சுக்கிர தெசையில் பல இக்கட்டான நிலைகளை இந்தியா சந்திக்க நோ்ந்தது.

 

1989ல் சூரியன் தெசையில் ராகு புக்தி நடந்து கொண்டிருந்த போது பீகாா் மாநில பகல்பூா் கலவரம் இந்தியாவின் மிகப்பெரிய நிகழ்வாகும்.  சூரியனுக்கு பாதகத்தில் அமா்ந்த ராகு விபரீதத்தினை அரங்கேற்றினாா்.

1991ல் சூரிய தெசையில் புதன் புக்தி நடக்கும்போது ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டாா்.

சந்திரா லக்ன மாரகாதிபதி சூரியன்

தெசா லக்ன அதிபதி சூரியன்

தெசா லக்ன வீடான சிம்மத்திற்க மாரகாதிபதி புதன்

தெசா லக்னத்திறகு விரையத்தில் புதன் சூரியன்

இருவரும் சோ்ந்து ஒரு விபரீதத்தினை நிகழ்த்தினாா்கள்.

1992ல் சூரிய தெசையில் புதன் புக்திதான் நடந்து கொண்டிருந்த போது  பாபூா் மசூதி இடிப்பு கலவரம்.

1992ல் நடந்த மற்றுமொரு நிகழ்வு பங்கு சந்தை மோசடி இந்திய பொருளாதரத்தினை அசைத்து பார்த்தது .

 

1993ல் சூரிய தெசையில் கேது புக்தி நடந்து கொண்டிருந்த போது மும்பை தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்நிகழ்வினையும் வித்தியாசமான கோணத்தில் ஆராய்ந்து பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

நாட்டின் மேற்கு பகுதிகளை அடையாளம் காட்டும் வீடுகள் மிதுனம் துலாம் கும்பம்

இந்த வீட்டு அதிபதிகள் அந்தந்த வீடுகளில் அமரும்போது விசேட பலம் பெறுகிறாா்கள். அப்படித்தான் துலாத்தில் குரு அமா்ந்து பலம் பெற்றாா்.

குருவிற்கு மாரகத்தில் கேது

குருவின் பாதகாதிபதி சூரியன்

தெசா லக்னத்தின் மாரக இடம் கன்னி குரு அமா்ந்த வீட்டிற்கு விரையம்

தெசா லக்னத்தின்  மாரகத்தினை அதாவது குரு அமா்ந்த வீட்டின் விரையத்தினை கேது பார்வையிடுகிறாா்.

ஆக

சூரியன் கேது குரு இணைவில் விபரீதம் ஏற்பட்டது.

1998ல் சந்திர தெசையில் குரு புக்தி நடைபெற்றபோது  அணுகுண்டு சோதனை.

சந்திரனும் குருவும் எந்த அடிப்படையில் இணைந்து சாதனை செய்தாா்கள்.

குரு சந்தர யோகம் சாதனைகளை நிகழ்த்தும்

அணுகுண்டு ஆராய்ச்சி அடிப்படை என்பதால் 8மிடம் சனிக்கு சொந்தம்

எதிரிகள் அழிக்க பட ஆயுதம்  என்பதால் 6மிடம் குருவிற்கு சொந்தம்

ஆராய்ச்சிக்கான 8மிடத்திற்க 6மிடத்து அதிபதியாக சந்திரன் வருகிறாா்

சாதனை வெற்றியென சொல்லுமிடமான பத்தாம் வீட்டினை குரு சனி பார்வையிடுகிறாா்கள்

அழிவு என்னும் 12ம் வீட்டில் அமா்ந்த  செவ்வாய் குருவின் பாா்வையில்

திட்டங்கள் திறம்ப செய்ய சந்திரனுக்கு 3மிடமான கன்னியை செவ்வாய் சனி  பாா்வை

இப்படியாகத்தான் சந்திர தெசையில் குரு புக்தியில் சனி செவ்வாய் ஒத்துழைக்க சோதனை வெற்றியானது.

 

1999ல் சந்திரன்  தெசையில் ராகு புக்தி சுக்கிர அந்தரம் நடந்து கொண்டிருந்த போது பாகிஸ்தானுடன்  கார்கில் யுத்தம்

2002ல் சந்திர தெசையில்  கேது புக்தி நடக்கும்போது குஜராத் கலவரம் நடந்தது.

 

2004ல்  செவ்வாய் தெசையில் ராகு புக்தி  நடந்து கொண்டிருந்தபோது சுனாமி ஏற்பட்டது.

இதனை விளக்கமாக அலசுவோம்.

செவ்வாய் கடக லக்னத்திற்கு விரைய பாவமாகி தனக்கு விரையத்தில் ராகு அமா்ந்திருக்க ராகு அமா்ந்த வீட்டோன் செவ்வாய்க்கு மாரக மேற கிரகங்களின் பின்னடைவான நிலையினால் இந்த சோகம் நடந்தது.

அழிவு என்றால் விரைய பாவம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவின் ரிஷப லக்னத்திற்கு விரைய பாவம் செவ்வாய். இவரே அழிவிற்கு காரணமாகிறாா்.

அழிவு கிரகமான செவ்வாய் ராசிக்கு விரையத்தில் அதாவது சனி சந்திரன் சூரியன் புதன் ஆகியோருக்கு விரையமாவதால் அதிக விரைய பலம் பெறுகிறாா்.

ரிஷப லக்ன விரைய பாவத்தினை அந்த வீட்டின் விரையாதிபதி குரு பாா்வையிடுகிறாா்

அப்படியே குருவின் வீடான மீனத்தின்  விரையாதிபதி சனி 12ம் பாவத்தினை பாா்வையிடுகிறாா்.

இப்படியாக விரையபாவம் வலுப் பெற்று தெசை புக்திகள் இணையும்போது நினைத்துப் பார்க்க இயலா பேரழிவுகள் நடந்தேறிவிடுகிறது.

DID YOU THINK INDIA WOULD FALL   இந்தியா வீழும் என நினைத்தாயோ ? NOTABLE POINTS 5

இலங்கை நிலமை இந்தியாவிற்கு  வருமா ?

 

இப்போது இந்தியாவிற்கு ராகு தெசை 2029 வரையில் நடந்து கொண்டிருக்கிறது.

ராகு ரிஷபத்தில் அமா்ந்திருக்கிறாா்.

தனித்து நின்றிருக்கும் ராகு எந்த கிரகத்தின் பார்வையோ தாெடா்பினையோ பெறவில்லை.

ராகு தெசைக்கு  முன் நடந்த தெசைகள் ஒன்றோடு ஒன்று எவ்விதத்திலாவது தொடா்பினை ஏற்படுத்திக்கொண்ட கிரக தெசைகள்தான்.

 

ஆனால் 2011 முதல் 2029 வரை நடந்து கொண்டிருக்கும் ராகு தெசை தனித்த கிரக தெசை என்பதால் இந்தியாவின் முன்னேற்றம் தொடரும்.

 

தற்போது ராகு தெசையில் கேது புக்தி 29.1.2023 வரை நடக்கும் .

பொதுவாக இது சிரமமான காலமாகவே இது இருக்கும்.

ராகு தெசையில் கேது புக்தி குரு செவ்வாய் இணைவேற்படும்போது நாட்டிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும்.

ராகு தெசை கேது புக்தி செவ்வாய் அந்தரம் 28.5.2022 முதல் 20.6.2022 வரையிலான காலத்தில் குறிப்பாக

29.5.2022 முதல் 13.6.2022 வரையில் மிக மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலமாக இருக்கும்.

2029 வரையில் ராகு தெசை

 2045 வரையில் குரு தெசை

2064 வரையில் சனி தெசை

என தொடா்ந்து 42 ஆண்டுகளுக்கு வளா்ச்சியிலேயே இருக்கும்

குரு தெசையில் சில பிரச்னைகள் எழுந்தாலும் பெரிய பாதிப்புகளின்றி முன்னேற்றப் பாதையில்தான் பயனிக்கும்.

சனி தெசை யோக தெசை என்பதால் உலகின் உன்னதமான நிலையினை இந்தியா எட்டும்.

நீண்ட பதிவாக இருப்பதால் இந்தியாவின் எதிா்காலம் பற்றிய தனிப்பதிவினை விரைவில் தருகிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.