ரிஷபம்

Taurus

Welcome to
GokulamAstrology

உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க

28.9.2020 முதல் 4.10.2020

♉︎ ரிஷபம் ராசி

இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்

28.9.2020       அவிட்டம்

கணவன் மனைவி சில செலவினை செய்வதற்கு முனைப்பினை காட்டுவீா்கள்

29.9.2020 சதயம்

ஒரு விஷய்தில் ரொம்ப நேரம் யோசித்தும் முடிவற்கு வர முடியாமல் குடிப்பம் அடைவீா்கள்

30.9.2020  பூரட்டாதி

பணவருவாய் தர்ம காாியங்களுக்கு செலவிடுவீா்கள். எடுத்த பணியினை முடிக்க முடியாது சிரமப்படுவீா்கள்

1.10.2020 உத்திரட்டாதி

பண வருவாய் பரபரப்பான காாியங்களை செய்வீா்கள்.  நல்ல தகவல் ஒன்று கிடைக்கும்

2.10.2020

ரேவதி

அதிர்ஷ்டமான நாள் எண்ணியது நடக்கும் கவலை மறந்து போகும் எதிா்காலம் பற்றிய நம்பிக்கை கிடைக்கும்

3.10.2020 அசுவணி

கணவன் மனைவி வெளியிடம் செல்வீா்கள். நம்பிக்கையளிக்கும் வழிபாடு மேற்கொள்வீா்கள்

4.10.2020 பரணி

நம்பிக்கைதரும் செய்தியொன்றினை கேட்பீா்கள், நண்பா்கள் உறவினா்கள் பேசுவாா்கள்.

பரிகார தெய்வம்

வணங்க வேண்டிய தெய்வம் : பழனி முருகனை வழிபடுவதால் தேவையற்ற செலவினை குறைக்கலாம்

ரிஷபம் ராசி

செப்டம்பர்  2020  மாத பலன்கள்

1.9.2020 முதல் 30.9.2020 வரை

குடும்பம்

குடும்பத்தில் மகிழ்ச்சி. சுப நிகழ்ச்சி. உறவினர்கள் வருகை விருந்து என அமர்க்களமான மாதமாக இருக்கும்.  மாத இறுதியில் ராகு இடம் பெயர்ந் பின் யோகம் அதிகரிக்கும். நல்ல பலன்கள் அதிகமான அளவில் நடைபெற சூழ்நிலை உள்ள மாதமாகும்

பணவருவாய்

இந்த மாதம் பண வருவாய் திருப்தி தரும். எதிர்பாரத தன லாபம் இருக்கிறது, வங்கி கடன் அலுவலக கடன் என்று கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். மாத இறுதியில் திடீர்  அதிர்ஷ்டம் வாய்ப்பு கதவினை தட்டும்

கணவன் மனைவி

களத்திராதிபதி செவ்வாய் மேஷத்தில் விரையபாவமேறியதால் துணை வழி சில செலவுகள் அதிகரிக்கிறது,கணவன் என்றால் மனைவிக்கும் மனைவி என்றால் கணவனுக்கும் உடல் நலன் பாதிப்படைந்தாலும் குருவின் பார்வையால் நலமடையலாம். பயமில்லை.

வீடு வாகனம்

மாத முன்பகுதியில் சாதகமற்ற நிலை காணப்பட்டாலும் மாத பின்பகுதியில் சாதமான நிலைக்கு வரும். வீடு  வாகனம் நிலம் வழியில் முன்னேற்றங்களை காண முடியும்.

உத்யோகம்

மாத முன்பகுதியில் சற்ற நெருக்கடிகள் காணப்பட்டாலும் மாத பின்பகுதியில் கேதுவின் பார்வை உத்யோகத்திலிருந்து அகலும் போது உத்யோகத்தில் மாற்றங்கள் தெரிய வரும். நல்ல தகவல்கள் பெறலாம். பணி ஒதுக்கீடு கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு பணி கிடைக்கும்.

தொழில்

கேதுவின்  பார்வை பத்திற்கு விலகிய பின் அற்புதமான மாற்றங்கள் தெரிய வரும்.  கடந்த 18 மாதங்களாக பட்ட வேதனைகளை முடிவிற்கு வருகிறது,  மனதில் நம்பிக்கை வைத்தால் இழந்ததை பிடித்துவிடலாம்

பிள்ளைகள்

புதன் வலிமையான அமைப்பால் பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரி  பள்ளி கிடைத்தாலும் சூரியன் இணைவால் விரைய செலவினை தவிர்க்க முடியாது.

உடல் நலன் : சுக்கிரன் கடகத்தில் வலுவாக இருப்பதால் உடல் அரோக்கியம் காணும்.

பொது

கடந்த மாதத்தினைக் காட்டிலும் சற்று மனதளவில் நம்பிக்கை பிறக்கும். பண விவகாரத்தில் காணப்பட்ட நெருக்கடிகள் அகலப் போகின்றன. குடும்பம் தந்த தொல்லைகள் தொலையப் போகிறது, இனி நிம்மதியான காலம்தான். ராகு கேது பெயர்ச்சி பொற்காலத்தினை காட்டப் போகிறது,

பரிகாரம்

தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ பழனி முருக பெருமானை வணங்கி வாருங்கள்

புரட்டாசி மாதப் பலன்கள்

17.9.2020 முதல் 16.10.2020

ரிஷபம்   ராசி

புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்

சூரியன்

கன்னி மாதம் முழுவதும்

குரு

தனசு மாதம் முழுவதும்

சனி

மகரம்  மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி

செவ்வாய்

மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில

புதன்

கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம்  மாதம் முழுவதும்

சுக்கிரன்

கடகம்  செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும்

ராகு கேது

மிதுனம் – தனசு  செப் 23 முதல்  ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும்

சந்திரன்

 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும்

புரட்டாசி  மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்

பண வருவாய்

பண வருவாய் கணிசமாக அதிகரிக்கிறது, வங்கி கடன் கிடைக்கும். எதிர்பார்த்த  இனங்களில் பணம் கிடைக்கும்.தடைப்பட்ட நிதி விவகாரங்களில் நல்ல முடிவு கிடைக்கும்

குடும்பம்

குடும்பத்தில் கலகலப்பான சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சி தரும். குடும்ப தேவைகளின் நெருக்கடிகள் விலகும். பிள்ளைகளுக்கு திருமணம் கல்லூரி மற்றும் வேலை தொழில் கிடைத்தல் போன்ற நல்காரியங்கள் ஜயமாகும்

கணவன் மனைவி

கணவன் மனைவி மகிழ்ச்சியான மாதமாக இருக்கும். உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு மருத்துவ செலவிருக்கும். மாத பின்பகுதியில் பயணங்கள் ஆலய தரிசனம் இருக்கும்.

உத்யோகம்

இந்த மாத பின்பகுதியில் உத்யோககாரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் உத்யோகத்தில் காணப்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கும்.

தொழில்

இந்த மாத பின்பகுதியில் உத்யோககாரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் தொழிலில் காணப்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைத்துறையின் தொழில்நுட்ப கலைஞர்கள் நன்மை பெறுவார்கள். ஆடம்பர பொருட்கள் இரும்பு கழிவு பொருட்கள் உணவு ஓட்டல் கப்பல் உப்பு தொடர்பான துறைகளில் ஏற்றம் காணும்

உடல் நலன்

ஆரோக்கியம் காணும்.  உடல் அசதி காட்டும் பயணங்களில் கவனம் தேவை. பணிகளில் நிதானம் வேண்டும்

மாணவர்கள்

நல்ல மாதமாகவே காணப்படுகிறது. நினைப்பதை சாதிப்பீர்கள். விரும்பிய இடம் கிடைக்கும். எதிர்பார்த்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

பரிகாரம்

ஶ்ரீ  பழனி முருகன்  வழிபாட்டால் உடல் ஆரோக்கியம்  பெறலாம்.

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

சார்வரி வருடப்  பலன்கள் 

ரிஷபம்   ராசி

பொதுப்பலன்கள்

சிறப்பு பலன்கள்

சார்வரி ஆண்டு குரு 8ல் அமர்ந்து  2மிடம் 4மிடம் மற்றும் 6மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் வரவு அதிகரிக்கும் கடன் வீடு வாகனம் ஆபரணம் வழி செலவிற்காக கடனும் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடை தாமதம் காணும். உடல் நிலையினை கவனித்துக் கொள்ள வேண்டும். அதிக உறக்கம் தேவைப்படுகிறது

சனியின் ஆதிக்கம் 9 இருப்பதால்  இந்த ஆண்டு மற்ற கிரக தோஷங்கள் அகலும். நன்மைகள் சொந்தமாகும். .

சனியின் பார்வை விழும் இடங்களான 11மிடம் 3மிடம் மற்றும் 6மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும்

இந்த ஆண்டு எதிர்பார்த்த பண வருவாய் முயற்சியின் பேரில் கிடைக்கும். வங்கி கடன் கிடைப்பதில்  முயற்சி தேவைப்படுகிறது, நல்ல உறக்கத்திற்கு நேரத்தினை ஒதுக்கவும்

2மிடத்தில் ராகு குடும்பத்தில் கொடுத்த நெருக்கடிகள்  அக்டோபர் மாதத்திற்கு பின் சீரடையும். 8ல் இருந்த கேது உத்யோகத்தில் நிச்சயமற்ற நிலையினை தந்திருப்பார். அக்டோபர் மாதத்திற்கு பின் சீரடையும்.

பண வருவாய்

ஆகஸ்ட் டிசம்பர் மாதங்களில் பண நெருக்கடி தெரியும் மற்ற மாதங்களில் சரளமான பண வருவாய் செலவினம் மகிழ்ச்சி உண்டு

குடும்பம்

குடும்பத்தில்  சில நெருக்கடிகளை சமாளித்து கலகலப்பான அனுபவங்கள் உண்டு, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பிருக்கிறது, அக்டோபருக்கு பின் குடும்ப வழியில் பல நன்மைகளை காணலாம்.

உத்யோகம்

உத்யோகம் வழியில் நெருக்கடிகள் தோன்றி மறையும். கேதுவின் பார்வை செப்டம்பர் வரை ஜீவனத்தில் பதிவதால் நிச்சயமற்ற நிலை இருக்கும். அக்டோபர் முதல் நிலமை மாறும் .சனவரி21  முதல் யோகமான காலமாக மாறும்

தொழில்

இது வரை கண்ட தொய்வுகள் அக்டோபருக்கு பின் மாறும். சனவரி 21 முதல் நினைத்தது நடக்கும். தொழில் விரிவாக்கம் புதியதை தொடங்கள் என நன்மைகள் தேடி வரும்.

வழக்கு

நவம்பர் டிசம்பர் மாதங்களில் பின்னடைவான பலன்கள் தெரிகிறது,  சனவரிக்கு பின் நிலமை நன்றாக மாறும்

மாணவர்கள்

வருட ஆரம்பத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் ஆகஸ்ட்க்கு பின் நிலமை மாறும். சனவரிக்கு பின்  கல்வியில் சாதனைகளை நிகழ்த்துவீர்கள்.

பெண்கள்

சனவரிக்கு பின் உங்கள் திறமைகள் பளிச்சிடும். மற்றவர்கள் மதிப்பார்கள். பாராட்டுகள் கிடைக்கும்.

வணங்க தெய்வம்

ஶ்ரீ  தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும்   வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும்.

ரிஷபம்  ராசி  - குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சி நாள் 20.11.2020

தனசு ராசியிலிருந்து மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.

மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.

குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்

குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்

மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்

நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்

ரிஷபம் மிதுனம் கன்னி துலாம்  மகரம் கும்பம்

அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம்  மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.

அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும்  பொதுவாக அனைத்து  ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.

குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்

இவருக்கு 5 7 9  என்று மூன்று பார்வைகள். அதனால்  அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.

குருவின் மகர ராசி பிரவேசம்

20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.

இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.

அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது

ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.

செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.

செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது

 இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும்  யோகப்  பலன்கள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கு  மகர குரு பலன்கள்

குருவினால்  ரிஷப ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்

ரிஷபத்திற்கு ஒன்பதில் குரு பாக்கியத்தினை பறிப்பான். சொத்துக்களை அழிப்பான். வெளிதேசம் செல்ல வைப்பான்.

அதைத்தான் ஒடினவனுக்கு ஒன்பதில் குரு என்பார்கள்.

உங்களுக்கு 8 ஆயுள் மற்றும் 11 லாபம் என்னும் வீடுகளை சொந்தமாக்கி பலன்களை தரக் கூடியவர்.

உங்களை பொருத்த மட்டில் முன் கர்மா கிரகம் குருவேயாவார்.

குருவின்  நீச்ச தன்மையானது அஷ்டமாதியின் தன்மையோடு இணைந்து தடைகள் தாமதங்கள் தந்தாலும் சனியின் உதவியால் சமாளிப்பீர்கள்.

கேதுவின் பார்வை ஒன்பதில் விழுவதால் குருவின் பலவீனம் இன்னும் அதிகரிக்கிறது,

குருவின் பார்வையானது  ஜென்மத்திற்கும்   செயல்திட்டங்களுக்கும் மற்றும்  பூர்வ புண்ணியத்திற்கும் கிடைக்கிறது,

குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,

ஆனாலும் ஜென்மத்தில் வந்தமர்ந்த ராகுவினால் கடுமையான மன உலைச்சல் மன நெருக்கடி குழப்பம் என வர இருப்பதை குரு பார்வையிடுவதால்  சரிச் செய்வார்.

ராகு தனது பார்வையால் தர இருக்கும் பண நெருக்கடி செயல் திட்டங்கள் பொன்றவற்றில் மாறுதலான பலன்களை குரு கொடுக்க செய்வார்.

குருவினால் கிடைக்கக் கூடிய நன்மைகள்

 குருவின் பார்வையால் இது வரை தடைப்பட்ட செயல்கள் இனி உங்களுக்கு நன்மைகளை தரும்.  விலகியவர்கள் விரும்பி வருவார்கள்.

நினைப்பதை முடிப்பீர்கள். உங்களின் திட்டங்கள் மற்றவர்களால் பாராட்டப்படும். இழந்த கௌரவம் மீண்டெழும்.

ஆலய வழிபாடு நீண்ட பயணங்கள் குல தெய்வ வழிபாடு வேண்டுதல் நிறைவேற்றல் பரிகாரங்களை செய்தல் உண்டாம்.

பிள்ளைகளின் கல்விக்கான திட்டமிடலை சரியான கோணத்தில் செய்து முடித்தல். பிள்ளைகளுக்கான கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டு,

உத்யோகம் தொழிலில் சில நன்மைகள் எதிர்பார்க்கலாம்.  வெளிநாட்டு பணி எதிர்பார்த்திருந்தவர்கள் கிடைக்கப் பெற்று வெளிநாடு செல்வார்கள்.

வெளிநாடு பயணத்தினை தள்ளிப் போட்டவர்கள் இப்போது செல்ல வாய்ப்பேற்படும்.

சிலர் இருக்கும் வேலையினை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வதில் பலன் கிடைக்கும்

எதிர்பாராத பண வருவாய் திகைப்படையச் செய்யும்.

குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்

குருவின் ஒன்பதாம் இட பிரவேசானது பாக்கியத்தில் சில தடைகளை தருகிறது,  ஒன்பதில் சனி அமர்ந்திருப்பதால் குருவின் ஆதிக்கம் குறையும்.

இருந்தபோதிலும் குறைந்த அளவில் குருவின் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.

ஒன்பதிற்கு கேதுவின் பார்வை பதிவதால் பூர்விக வழியில் சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும். சிலர் சொந்த ஊர் விட்டு வெளியேறுவர்

இன்னும் சிலர் பூர்விக சொத்தினை விற்று பிற இனத்தில் முதலீடு செய்வார்கள்.

கணவன் மனைவி இடையே இருந்த பிணக்குகள் தீர்ந்தாலும் மனதில் எதோ குறை இருந்து கொண்டேயிருக்கும்.

பரிகாரங்கள்

திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்

வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று

சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்

மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.

ரிஷப ராசிக்கான  ராகு கேது பெயர்ச்சி 2020-22

ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.

யார் இந்த ராகு கேது

இவர்கள் கிரகங்களா ?

இல்லை இவர்கள் கிரகங்களில்லை

சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம்.  அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.

உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.

ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது

பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.

ரிஷப ராசிக்கு 1மிடத்திற்கு வரும் ராகு 7மிடத்திற்கு வரும் கேது என்ன பலன்களை கொடுப்பார்கள்  என்பதை பார்ப்போம்

ராகு தனது  பார்வையால் ரிஷப ராசிக்கு 11மிடத்தினையும், 3 மிடத்தினையும் 7மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

1மிடத்தில் அமர்ந்ததால்  மனதில் இனம் புரியாத நெருக்கடி மனக்குழப்பம் எதிலும் முடிவெடுப்பதில் தடுமாற்றம் ஏற்படும்.

3மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பலன்கள் மனதில் தைர்யம் குறையும் செய்கிற பணியில் தடுமாற்றங்கள். இளைய சகோதர் சகோதரி வழியில் ஏமாற்றங்கள் வரும். திட்டமிடல் குழப்பம் காணும்.

11மிடத்தினை ராகு பார்வையிடுவதால் நல்ல பலன்கள் எதிர்பார்க்கலாம். இது வரையில் தடைபட்ட வருவாய் வருவதற்கான வழிகள் ஏற்படும்.  உத்யோகம் தொழிலில் செல்வாக்கு பெறுகும்.  திடீர்  அதிர்ஷ்ட வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்புண்டு,

கேது தனது பார்வையால் ரிஷப ராசிக்கு 9மிடத்தினையும் 5 மிடத்தினையும் 1 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.

1மிடத்தினை கேது பார்வையிடுவதால் ராகு தரும் மனக்குழப்பங்களை ஆலய வழிபாடு மூலம் சரிச் செய்வார்.  ராகு தரும் தீய பலன்களை கட்டு படுத்துவதுடன் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

9மிடத்தினை கேது பார்வையிடுவதால் நீண்ட பயணங்கள் வெளிநாடு செல்லுதல் புண்ணிய நதி நீராடல் ஆலய தரிசனம் உண்டாம்.

5மிடத்தினை பார்வையிடுவதால் இறை வழிபாட்டில் நாட்டம் செல்லும்.  ஆன்மீக பெரியோர்களின் தொடர்பும் வழிகாட்டுதல்களும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் இருக்கும்.

கவனிக்க வேண்டிய பலன்கள்

குரு பெயர்ச்சிக்கு பின் உத்யோகம் தொழில் இவைகளில் அதிக கவனமும் ஆழ்ந்த பரிகாரமும் தேவை.

பரிகாரம்

நாகங்கள் அணிந்த கணபதியை வழிபட்டு வரவும்

மகா விஷ்ணு

Click The + Icon To Read Your Prediction

28.9.2020 முதல் 4.10.2020

♉︎ Taurus

Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20

28.9.2020       Dhanishta

Couples will show initiative to do some expenses

29.9.2020 Shatataraga

You will not finalize your plan even spending lot of time. There will be confusion in your mind

30.9.2020  Purva Bhadrapada

You will spend money for donations. In some of work you will feel very hard to complete it.

1.10.2020 Uttara Bhadrapada

Money floating gives happy. You are much busy all the day. A good news will reach you

2.10.2020

Revati

Lucky day. You planning give good results. You will be very much confident about your future.

3.10.2020 Ashvini

Couples spend time in market places. Further they visit temples for prayers

4.10.2020 Bharani

Favorable news will reach you. You spend time for telephonic speech with friends

Remedy for relief

Do pray Madurai Meenatchi  for avoiding couples unnecessary quarrels.

OCTOBER 2020 MONTHLY PREDICTIONS 

1.10.2020 முதல் 31.10.2020

TAURUS

Planetary Position during October 2020

Sun

Hastha 6.10.20

Chithira 20.10.20

Swati till end of month

Virgo Till 16.10.2020 thereafter Libra

Jupiter

Purva Ashadha 29.10.20

Uthara Ashadha till end of month

Sagittarius entire month

Saturn

Uthara Ashadha till end of month

Capricorn entire month

Mars

Ashvini 17.10.20

Revati till end of month

Aries Till October 5th thereafter Pisces

Mercury

Swati 24.10.20

Chitra till end of month

Libra entire month

Venus

Maga 6.20.30

Purva Phalguni till end of month

Leo till 22.10.2020 thereafter Virgo

Rahu Kethu

Mrigashirsha/

Jyeshtha

Taurus -  Scorpio entire month

Moon

Moves entire stars

2.25 days each house for entire month

Finance

Cash flow satisfactory for the entire month.  Unexpected money will come from brothers. Friends will help to improve your finance. . 2nd half of the month the situation will be little hard. However you will manage.

Family

Well good during the first half of the month. You will get good news about marriages. . 2nd half of the month the situation will be unfavorable due to unexpected spending money.

Couples

Ist half of the month you will enjoy. You will gift valuables to your life partner. Purchase of new dress and jewels make happy of life partner

Profession

Saturn will move to favorable position from this month will boost your profession and certain good news will get soon

Business

Because of Saturn the struggling period gone and you will get good results in coming days

Health

Venus in strong position gives good health entire month

Children

Mercury helps you to achieve your target regarding your children. But you will not defend the expensive admissions

Remedy

Pray Palani Murugan daily and will get good results regarding children’s education new profession etc.,

Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.

In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.

Maha Vishnu

Get in Touch

தொடர்ப்புக்கு

For Appointments Call 📞+919442276278
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support​

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

Keep in touch
Here for you

Call us between 8AM - 8PM. We are there for your support

Know Your Astrologer

Shri Mahalakshmi Upasakar

For Appointments

+91 9442276278