மேஷம்
Aries
Welcome to
GokulamAstrology
உங்களுக்கான கணிப்பைப் படிக்க + ஐகானைக் கிளிக் செய்க
28.9.2020 முதல் 4.10.2020
♈︎ மேஷம் ராசி
இந்த வாரம் உங்கள் ராசிக்கு சந்திரன் நடமாடும் நட்சத்திரங்கள் சொல்வதென்ன நாள் வாரியான பலன்கள்
28.9.2020 அவிட்டம் | பணவருவாய் திருப்தி தரும், பிள்ளைகள் வழியில் நன்மைகள் கிடைக்கும் பதட்டமான நாளாக இருக்கும் |
29.9.2020 சதயம் | குடும்பத்தில் வாக்குவாதம் சலசலப்பு காணப்படுகிறது. கையிறுப்பு கரைகிறது |
30.9.2020 பூரட்டாதி | பயணம் வெளியிடம் செல்வீா்கள். பூா்விக வழியில் ஒரு செய்தி வரும் |
1.10.2020 உத்திரட்டாதி | உத்யோகம் தொழிலில் சிரமம் காண்பீா்கள். சில செலவினை தவிா்க்க முடியாது தவிப்பீா்கள் |
2.10.2020 ரேவதி | கடன் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்துவீா்கள்.உடல் நலம் சிரமம் காட்டும் |
3.10.2020 அசுவணி | வாகனம் வழி சில முடிவினை எடுப்பீா்கள். தாயாாாின் ஆலோசனைகள் நல்ல பலன் தரும் |
4.10.2020 பரணி | குடும்ப செலவினை செய்வீா்கள். பற்றாக்குறை அகலும். சில ஆடம்பர செலவும் அடங்கும் |
பரிகார தெய்வம் | வணங்க வேண்டிய தெய்வம் : கணவன் மனைவி பிரச்னைகள் தீர மதுரை மீனாட்சி வழிபாடு தேவை |
மேஷம் ராசி
செப்டம்பர் 2020 மாத பலன்கள்
1.9.2020 முதல் 30.9.2020 வரை
குடும்பம்
சென்ற மாதம் காணப்பட்ட நெருக்கடிகள் இந்த மாதம் மாற்றம் காணும். ஆனாலும் ராகு குடும்பத்தில் வந்தமர்வதால் மாத இறுதியிலிருந்து குடும்பத்தில் நெருக்கடிகள் தொடங்கும். ஆனாலும் குருவின் பார்வை குடும்பத்தில் விழுவதால் எதனையும் சமாளிப்பீர்கள்.
பணவருவாய்
இந்த மாதம் ஆரம்பத்தல் பண நடமாட்டமும் மாத இறுதியில் பண நெருக்கடி அதிகரிக்கும். சின்ன தேவைகள் கூட முயற்சியின் பேரில்தான் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இனங்களில் தடை தாமதம்.
கணவன் மனைவி
களத்திரகாரன் சுக்கிரன் கடகத்திற்கு செல்வதால் கணவன் மனைவி அன்பாய் வெளியிடங்களுக்கு செல்வீர்கள். வீடு வாகனம் வழியில் சில முடிவினை எடுப்பீர்கள். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு மற்றவர்களுக்குஉதவிகளை செய்வீர்கள். மாத இறுதியில் ஒருவருக்கொருவர் புரிதலின்றி வாக்கு வாதங்கள் எழும்.
வீடு வாகனம்
சென்ற மாதம் காணப்பட்ட தடைகள் இந்த மாதம் விலகும். சுக்கிரன் 4ல் வலுவாக அமைவதால் வீடு வாகனம் வழியில் தேவைப்படும் பணத்தினை சிரமத்திற்குபின் கிடைக்கும். வங்கி கடன் தொடர் முயற்சி தேவைப்படும். சுக்கிரன் நடமாட்டத்தால் வீடு வாகனம் நிலம் வழியில் ஆதாயம் காணப்படுகிறது,
உத்யோகம்
பணியில் ஆர்வமின்றி இருப்பீர்கள். எதிர்பார்த்த இடமாற்றம் தாமதமாகும். ஆனாலும் சுக்கிரனின் உதவியால் சில பணிகளில் முன்னேற்றமும் ஆதாயமும் கிடைக்கும்.
தொழில்
முதலீட்டுக்கான பண உதவிகள் வந்து சேரும். உறவினர்கள் நண்பர்கள் என பலஇடங்களிலிருந்து உதவிகள் வரும். பெண்களின் உதவியால் ஒரு பணி ஒன்றினை முடிப்பீர்கள்.
பிள்ளைகள்
போட்டிகளில் வெற்றி நினைத்த இடத்தில் சேர்க்கை என நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
உடல் நலன்
உடல் நிலையில் கவனம் தேவை சில்லரை உபத்ரவம் மருத்துவ உதவி நாடுவீர்
பொது
கடந்த மாதத்தினைக் காட்டிலும் இந்த மாதம் தெளிவான சிந்தனையில் ஆக்க பூர்வமான பணிகளை மேற் கொள்வீர்கள். பண நடமாட்டம் அதிகரிக்கும். குடும்ப நிலவரம் அமைதி காணும். ஆனாலும் 21.9.2020ல் ராகு கேது பெயர்ச்சி நடந்த பின் நிலமைகள் பின்னடைவினை அடையும்.
பரிகாரம்
தினம் காகத்திற்கு அன்னம் வைத்து வரவும். ஶ்ரீ ஆஞநேய பெருமானை வணங்கி வாருங்கள்
புரட்டாசி மாதப் பலன்கள்
17.9.2020 முதல் 16.10.2020
மேஷம் ராசி
புரட்டாசி மாதம் கிரகங்கள் அமைவிடம்
சூரியன் | கன்னி மாதம் முழுவதும் |
குரு | தனசு மாதம் முழுவதும் |
சனி | மகரம் மாதம் முழுவதும் செப் 29 முதல் வக்ர நிவர்த்தி |
செவ்வாய் | மேஷம் அக்டோபம் 5 முதல் மீனம் வக்ரத்தில |
புதன் | கன்னி செப்டம்பர் 23 முதல் துலாம் மாதம் முழுவதும் |
சுக்கிரன் | கடகம் செப்டம்பர் 27 முதல் சிம்மம் மாதம் முழுவதும் |
ராகு கேது | மிதுனம் – தனசு செப் 23 முதல் ரிஷபம் விருச்சிகம் இந்த மாதம் முழுவதும் |
சந்திரன் | 2.25நாட்கள் வீதம் அனைத்து வீடுகளும் |
புரட்டாசி மாதம் எப்படி இருக்கும் பொதுப் பலன்கள்
பண வருவாய் | பண வருவாய் திருப்தி தரும். வங்கி கடன் வீட்டு கடன் வாகன கடன் வழி முன்னேற்றம் காட்டும். தாயாரின் உதவி கிடைக்கும். அலுவலக கடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, |
குடும்பம் | கலகலப்பாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சிலர் குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவார்கள். |
கணவன் மனைவி | மகிழ்ச்சியடையும் நிகழ்வினை சந்திப்பீர்கள். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். சில சமயம் பதட்டமான காரியங்களை சந்திந்தாலும் நிதானத்தினை கடை பிடித்து சமாளிப்பீர்கள் |
உத்யோகம் | பணியில் உள்ளவர்க்ள் பணிச்சுமை உணர்வார்கள். சில பாதிப்புகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். சிலருக்கு மாற்றங்கள் வரும் ஆனால் நடைமுறை படுத்தமாட்டார்கள். தள்ளிப் போகும். |
தொழில் | கலைத்துறையினர் ஒட்டல் மளிகை டிராவல்ஸ் ஆடம்பர பொருட்கள் ஆபரணம் இரும்பு தொடர்பான தொழிலில் உள்ளோர் நன்மை பெறுவார். |
உடல் நலன் | கை கால் வலிகள் கழுத்து வலிகள் போன்ற சிறுஉபாதைகள் சிலருக்கு வந்து போகும். வாகனங்களில் எச்சரிக்கை அவசியம். |
மாணவர்கள் | படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் கல்லூரி பள்ளிகள் கிடைப்பதில் தடைகளிருந்தாலும் மீறி உதவிகள் கிடைக்கும். |
பரிகாரம் | ஶ்ரீ மதுரை மீனாட்சி வழிபாட்டால் தடைகள் விலகும் |
ஜோதிட செய்திகள் - Astro Accurate News - 2
கோகுலம் ஜோதிடம் வழங்கும் ஜோதிட செய்திகள் செப்டம்பர் 2020
இந்த மாதம் ராகு கேது பெயர்ச்சி கொண்டாட்டங்கள்
18 மாதங்கள் ராகு மிதுனத்தில் அமர்ந்தும் கேது தனசுவில் அமர்ந்தும் பலருக்கும் பலவித கஷ்டங்கள் நஷ்டங்கள் என சோதனைகளையும் வேதனைகளையும் கொடுத்திருக்கும்.
அப்பாடா ஒரு வழியாய் ராகு கேது 21.9.2020 அன்று இடம் மாறி அமரப்போகிறார்கள்.
ராகு மிதுனத்திலிருந்து பின்னோக்கிய நகர்வில் ரிஷபத்திற்கு வர இருக்கிறார்.
கேது தனசு தனசுவிலிருந்து பின்னோக்கிய நகர்வில் விருச்சிகத்திற்கு வர இருக்கிறார்.
இனிமேல் எல்லோருக்கும் பிரச்னைகள் ஒய்ந்து நன்மைகளை மட்டும் பெறப் போகிறோமா ?
நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை எதிர்பார்த்துவிட முடியாது,
பின் எதற்காக இப் பெயர்ச்சியினை முக்கியமாக பார்க்கிறோம்.
சில ராசிக்காரர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ராகு கேது அமர்ந்திருந்த இடம் பாதகமானதாக இருந்ததால் கடும் துன்பம் கொடுத்தது,
சில ராசிக்காரர்களுக்கு கடந்த 18 மாதங்களாக ராகு கேது அமர்ந்திருந்த இடம் சாதகமானதாக இருந்ததால் நன்மைகளை பெற முடிந்தது,
அந்த நிலை இப்போது மாறப் போகிறது, அப்படி என்னமாதிரியான பலன்களை நாம் எதிர்பார்க்கலாம
மேஷத்திற்கு என்ன நன்மைகள்
பிள்ளைகளுக்கு நல்ல கல்லூரி பள்ளி கிடைக்கும்.
வேலை கிடைக்கும். திருமணம் நடக்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த கசப்புணர்வு அகலும்
உடன் பிறந்தவர்களிடையே இருந்த பிணக்கு அகலும்
ராசிக்கு என்ன நன்மைகள்
குடும்பத்தில் நெருக்கடிகள்
சுப - ஆடம்பர - குடும்ப செலவுகள்
மனநிம்மதியினை கெடும்.
தாயார் உடல் நிலை பாதிக்கும்
வீடு வாகனம் நிலம் இவைகளில் பின்னடைவினை தரும்
உடல் நலனில் கவனம் தேவை.
சிலருக்கு அறுவை சிகிச்சை.
ரிஷபத்திற்கு என்ன நன்மைகள்
தாயார் உடல் நலம் காணும்
வீடு வாகனம் நிலம் அனுகூலம் தரும்
தேவையற்ற செலவுகள் கட்டுக்குள் வரும்
உத்யோகம் தொழில் முன்னேற்றம்
ரிஷபத்திற்கு என்ன தீமைகள்
பொதுவான நெருக்கடிகள்
உயர் கல்வி தடை மூத்தவர்கள் வழி சண்டை
மனநிம்மதியினை கெடுக்கும். தாயார் உடல் நிலை பாதிக்கும்
வீடு வாகனம் நிலம் தொடர்பான தடை தாமதம் ஏற்படும்
உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு அறுவை சிகிச்சை.
சார்வரி வருடப் பலன்கள்
மேஷம் ராசி
பொதுப்பலன்கள்
சிறப்பு பலன்கள் | சார்வரி ஆண்டு குரு 9ல் அமர்ந்த லக்னம் 3மிடம் 5மிடம் ஆகிய வீடுகளை பார்ப்பதால் வரவினை விட செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் குறிப்பான உடன் பிறந்தவர்கள் வழியில் செலவினம் இருக்கும். பிள்ளைகளை பள்ளி கல்லூரியில் சேர்ப்பீர்கள். சனியின் ஆதிக்கம் 10 இருப்பதால் உத்யோகம் தொழில் இவைகளில் கடும் பணிச் சுமை இருக்கும். மாற்றங்கள் தாமதப்படும். சனியின் பார்வை விழும் இடங்களான 12மிடம் 4மிடம் மற்றும் 7மிடம் ஆகிய இடங்களில் சற்று பின்னடைவான பலன்களைத்தான எதிர்பார்க்க முடியும் இந்த ஆண்டு சிக்கனம் முக்கியத்துவம் பெறும். உடல் நிலை கவனிக்க வேண்டி வரும். கணவன் மனைவி உறவில் சிறு பிணக்குகள் வந்து அகலும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். தெசா புக்தி பாதகமாக உள்ளவர்கள் கடும் சிக்கலை சந்திக்க நேரிடும். 3மிடத்தில் ராகு மனதில் நெருக்கடிகளை கொடுப்பார். பிள்ளைகள் வழியில் மன உலைச்சல் இருக்கும். ஆனால் அக்டோபர் மாதத்திற்கு பின் நிலமை மாறும் பிள்ளைகள் வழியில் நல்ல முடிவினை எடுப்பீர்கள். |
பண வருவாய் | அக்டோபர் 2020 வரையில் பண வருவாய் திருப்தி தரும். நவம்பர் டிசம்பர் பண நெருக்கடி தலை எடுக்கும். சனவரி சற்று மாறுதல் தெரியும். பெப்ரவரி கடுமையான பண நெருக்கடி ஆண்டு இறுதியில் பண வருவாய் மகிழ்ச்சி தரும். |
குடும்பம் | செப்டம்பர் மாதம் வரையில் குடும்பத்தில் கலகலப்பான நிகழ்வுகள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் உண்டு, செப்டம்பருக்கு பின் குடும்பத்தில் நெருக்கடிகள் தோன்றும். பயனற்ற பயணங்கள் சிரமம் தரும். |
உத்யோகம் | கடுமையான பணிச்சுமை இருக்கும். ஜீன் ஜீலை ஆகஸ்ட் மாதங்களில் பணியிடத்தில் கவனம் தேவை. ஆகஸ்ட் மாதம் பணியிடத்தில் பொல்லாப்பு வரும். எச்சரிக்கை. சனவரி மாதம் பணியிடத்தில் தேவையில்லாத பிரச்னைகள் எழும். மற்ற மாதங்களில் பணிச்சுமை இருந்தாலும் சமாளிப்பீர்கள் |
தொழில் | சில முடிவினை எடுக்க முயற்சி செய்து தடைகளை கண்டு துவல்வீர்கள். ஆகஸ்ட் சனவரி மாதங்களில் கவனமான செயல்கள்பாடுகள் தேவைப்படும். டிசம்பருக்கு பின் புதிய முயற்சிகள் தவிர்க்க. |
வழக்கு | அக்டோபர் நவம்பர் மாதங்களில் சாதகமற்ற நிலை காணப்படுகிறது, மற்ற மாதங்களில் சாதகமான நிலை காணப்பட்டாலும் கடும் முயற்சியின் பேரில் காரியங்கள் முடியும் |
மாணவர்கள் | படிப்பதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். புதிய கல்லூரியில் பள்ளியில் சேர்வதும் உண்டு, சலுகைகள் கிடைக்கும். அதிக செலவிடல் நேரிடும் |
பெண்கள் | அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் எதிலும் ஆர்வமின்றி இருப்பீர்கள். மற்ற மாதங்களில் மகிழ்ச்சி புதிய நண்பர்கள் சேர்க்கை உறவினர்களுடன் மகிழ்ச்சியினை பகிர்தல் உண்டு |
வணங்க தெய்வம் | ஶ்ரீ முருகன் வழிபாட்டால் நன்மைகள் கிடைக்கும். |
மேஷம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி நாள் 20.11.2020
தனசு ராசியிலிருந்து மகரத்திற்கு பிரவேசம் ஆகிறார்.
மகரத்தில் ஓர் ஆண்டு காலம் அங்கு உள்ள நட்சத்திரங்களான உத்திராடம் 3 பாதம் திருவோணம் 4 பாதம் அவிட்டம் 2 பாதம் என பயணிப்பார்.
குரு கிரகமானது ஒரு வீட்டிற்கு ஒரு ஆண்டு என நகர்தலின் வேகத்தினைக் கொண்டதாகும்
குருவினைப் பற்றிய பொதுவான கருத்துக்கள்
குரு ஒரு சுபக் கோள் இது பொதுவான குணம்
நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்வார்
மேஷம் கடகம் சிம்மம் விருச்சிகம் தனசு மீனம்
நீங்கள் இந்த லக்னங்களில் பிறந்திருந்தால் நன்மை செய்யமாட்டார்
ரிஷபம் மிதுனம் கன்னி துலாம் மகரம் கும்பம்
அவர் தனசு மற்றும் மீனத்தில் ஆட்சி பலம் பெறுவார். அவர் ஆட்சி பலத்தில் இருக்கும்போது மிதுனம் கன்னி தனசு மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.
அவர் கடகத்தில் உச்சம் பெறுகிறார். அவர் உச்ச பலத்தில் இருக்கும் போது மேஷம் துலாம் விருச்சிகம் மகரம் மீனம் ராசிக்காரர்கள் ஹம்ச யோகத்தினை பெறுவார்கள்.
அவர் மகரத்தில் நீச்சம் பெறுகிறார். அவர் நீச்ச பலத்தில் இருக்கும் பொதுவாக அனைத்து ராசிக்காரர்களின் சுபத் தன்மை பலமானது குறையும்.
குரு எந்த வீட்டில் அமர்கிறாரோ அந்த வீடு பலமிழக்கும்
இவருக்கு 5 7 9 என்று மூன்று பார்வைகள். அதனால் அவர் பார்க்கும் வீடுகள் பலம் பெறும். அந்த வீடுகளிலிருந்து நல்ல யோக பலன்களை எதிர்பார்க்கலாம்.
குருவின் மகர ராசி பிரவேசம்
20.11.2020 அன்று மகர ராசிக்குள் பிரவேசம் செய்கிறார்.
இங்கு அவர் நீச்ச பலம் பெறுகிறார்.
அடுத்த ஒரு ஆண்டிற்கு இவரிடமிருந்து வலுவான நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது
ஆனால் குருவிற்கு கேந்திரத்தில் சந்திரன் வரும் நாட்களில் அல்லது செவ்வாய் உச்சமடையும் போது அதனால் குரு நீச்ச பங்கம் பெற்று அவர் யோகப் பலன்களை வாரி வழங்குவார்.
செவ்வாய் சந்திர கேந்திரம் பெறும் போதும் குரு நீச்ச பங்கம் பெற்ற அதனால் யோகம் கிடைக்கும்.
செவ்வாய் கடகத்தில் நீச்சம் பெறும் போது குரு செவ்வாய் பரஸ்பர பார்வையில் விபரீத ராஜயோகம் கிடைப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது
இந்த அமைப்பானது அடிக்கடி வரும் என்பதால் இந்த கால கட்டத்தில் திடீர் திடீரென அனைவருக்கும் யோகப் பலன்கள் கிடைக்கும்.
மேஷம் ராசிக்கு மகர குரு பலன்கள்
குருவினால் மேஷ ராசிக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கப் போகிறது என்று பார்ப்போம்
மேஷத்திற்கு பத்தில் குரு பதவியினை பறிப்பான் என்பது பழமொழி
உங்களுக்கு 9 பாக்கியம் மற்றும் 12 விரையம் என்னும் வீடுகளை சொந்தமாக்கி பலன்களை தரக் கூடியவர்.
குருவின் நீச்ச தன்மையானது விரையாதிபத்யம் இணைந்து தொழில் உத்யோகம் வழியில் பாதிப்புகளை கொடுக்கக் கூடியது
கேதுவின் பார்வை பத்தில் விழுவதால் குருவின் பலவீனம் இன்னும் அதிகரிக்கிறது,
குருவின் பார்வையானது குடும்பத்திற்கும் மன நிம்மதிக்கும் மற்றும் போட்டி ரோகம் கடன் வீட்டிற்கும் கிடைக்கிறது,
குருவின் பலமிழந்த பார்வைகள் பெரிய அளவில் நன்மைகளை தந்துவிடாது,
ஆனாலும் குடும்பத்தில் வந்தமர்ந்த ராகுவினை குரு பார்வையிடுவதால் ராகுவினால் குடும்பத்தில் ஏற்பட இருக்கும் பிரச்னைகளை சரிசெய்வார்.
ராகு குடும்பத்தில் கடும் விரையச் செலவுகள் வீண் பிரச்னைகள் சண்டை சச்சரவுகள் கடும் பொருளாதார நெருக்கடிகள் தரக்கூடியவர்.
இப்படி பல்வகை தொல்லைகளை கொடுக்க ராகு எத்தனிக்கும் போது அதனில் குரு தலையிட்டு பிரச்னை வளராமல் பார்த்துக் கொள்வார்
எனவே குருவின் பார்வையால் குடும்பத்தில் மிதமான மகிழ்ச்சி உண்டு, தள்ளிப் போன சுப நிகழ்ச்சிக்கு காலம் கணிந்து வருகிறது,
பணவருவாய் சிரமத்தின் பேரில் கிடைக்கும். உங்களின் வாக்கு மற்றவர்களால் மதிக்கப்படும்
அடுத்ததாக நான்காம் வீட்டிற்கு சனியின் பார்வை விழுவதால் ஏற்படுகிற பாதிப்புகளை குறைத்து மன நிம்மதி தொல்லைகளற்ற பயணங்கள் தருவார்.
புதிய வாகனம் கடன் வாங்கி வாங்குவீர்கள். நிலம் வாங்கலாம். வீடு கட்ட விரும்பியவர்களின் ஆசைகள் நிறைவேறும்.
தாயாரின் உடல் நலன் பெறும். மன நெருக்கடிகள் குறைந்து தெளிவான சிந்தனை கிடைக்கும்
ஆறாம் வீட்டினை பார்ப்பதால் கடன் விவகாரங்களில் குறுக்கு வழியில் கடனை பெறுவீர்கள். உடல் நலன் பாதிப்படைந்தால் நீங்களே மருந்து வாங்கி சாப்பிட நேரிடும்.
போட்டிகளில் சிரமத்தின் பேரில் வெற்றிகளை சொந்தமாக்கிக் கொள்வீர்கள்.
குரு பெயர்ச்சியில் குடும்பம் வாகனம் மன நிம்மதி கடன் ரோகம் போட்டிகள் என தொடர்புடைய இனங்களில் மாறுதல்களும் முன்னேற்றமும் காணலாம்.
குருவினால் ஏற்படக் கூடிய பாதிப்புகள்
குருவின் பத்தாம் இட பிரவேசானது உத்யோகம் தொழிலில் கடும் சிரமத்தினை கொடுக்கும். சிலர் பணியில் மாற்றங்களை சந்திக்க நேரிடும்.
சிலர் இருக்கும் வேலையினை விட்டு வேறு வேலைக்கு முயற்சி செய்வதால் பலன் இல்லை. கவனம் தேவை.
தொழிலில் இருப்போர் வேறு தொழிலை செய்ய விரும்பி குழப்பம் அடைவார்கள். ஆனால் இந்த காலத்தில் எந்த புதிய முயற்சியும் வேண்டாம்.
பண வருவாய் வந்தாலும் கடும் விரையச் செலவினை செய்ய நேரிடும். எதனை செய்தாலும் யோசித்து செலவிட வேண்டும். சிலருக்கு சுப விரையச் செலவேற்படும்.
பயணங்களில் கவனம் வேண்டும். விபத்துக்கள் பயணத் தடைகள் வெளியிடங்களில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,
சிலர் தேவையற்ற சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்க நேரிடும்.
பரிகாரங்கள்
திரு செந்தூர் முருகனை வழிபட்டு வரவும்
வியாழன் கிழமைகளில் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று
சிவனாலாயத்தில் நல்லெண்ணை விளக்கேற்றி வழிபடவும்.
மேஷம்:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய மேஷ ராசியினரே! இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் அயன சயன போக ஸ்தானத்தில் இருக்கிறார். அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் மறையும். உத்யோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். மேலிடத்தின் மூலம் உங்களுக்கு நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும். பெண்களுக்கு காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த வீண் பிரச்னைகள் நீங்கும். அரசியல் துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: முருகனுக்கு அரளி மாலை சமர்ப்பித்து வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்.
மேஷ ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி 2020-22
ராகு மிதுனத்திலிருந்து நகர்ந்து ரிஷபத்திற்கும் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கும் வரப் போகிறார்கள்.
யார் இந்த ராகு கேது
இவர்கள் கிரகங்களா ?
இல்லை இவர்கள் கிரகங்களில்லை
சூரியனை பூமி சுற்றி வரும் வட்டப்பாதையினை சந்திரன் சுற்றி வரும் வட்டபாதையானது ஒரிடத்தில் வெட்டுபடும். அந்த தெற்கு புள்ளியே கேது என்கிறோம். அதற்கு நேர் எதிரில் வடக்கு புள்ளியினை ராகு என்கிறோம்.
உண்மையில் ராகு கேது கிரகங்களேயில்லை.
ஆனால் இந்த வெட்டுப்புள்ளிகள் கிரகங்களைக் காட்டிலும் வலிமையானவை என்பதை மறக்க கூடாது
பொதுவாக தீய கிரகங்கள் 3 6 11 வீடுகளில் அமர்ந்தால் தீய பலன்கள் குறையும். அவ்வாறு தீய பலன்கள் குறைவதால் ராசிக்கு வரவேண்டிய நன்மையான பலன்கள் தேடி வரும்.
மேஷ ராசிக்கு 2மிடத்திற்கு வரும் ராகு 8மிடத்திற்கு வரும் கேது என்ன பலன்களை கொடுப்பார்கள் என்பதை பார்ப்போம்
ராகு தனது பார்வையால் மேஷ ராசிக்கு 12மிடத்தினையும், 4 மிடத்தினையும் 8மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.
2மிடத்தில் அமர்ந்ததால் குடும்பத்தில் நெருக்கடி வீடு மாற்றம் வாக்கு தவறுதல் பண நெருக்கடி ஏற்படும்
4மிடத்தினை ராகு பார்வையிடுவதால் பலன்கள் வாகன செலவினம் வாகனம் விற்று விடுதல் தாயார் வழியில் மருத்து செலவினம் கண்ட நேரத்திற்கு வீடு வருவதால் உரிய நேரத்தில் உணவருந்தாது தவித்தல் மனக்குழப்பம் உண்டாம்
8மிடத்தினை பார்வையிடுவதால் பிரயாணத்தில் கவனம் தேவை நீண்ட நாள் ரோகத்தில் உள்ளவர்கள் கவனமுடன் உடல் நிலையினை கவனித்துக் கொள்வது நலம்
கேது தனது பார்வையால் மேஷ ராசிக்கு 10மிடத்தினையும் 6 மிடத்தினையும் 2 மிடத்தினையும் வசப்படுத்துவதால் என்ன பலன்கள் உங்களை நாடி வரும் என்பதை பார்ப்போம்.
2மிடத்தினை கேது பார்வையிடுவதால் குடும்பத்தில் தடுமாற்றங்களும் குடும்ப தேவைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களும் காண்பீர்கள். எதிர்பார்த்த பணம் வருவது தடைபடும்.
10மிடத்தினை கேது பார்வையிடுவதால் பணியில் சிரமம் உண்டாகும். சிலருக்கு பணியிழப்பு பணியில் தண்டனைகள் அபராதங்கள் போன்றவற்றினை சந்திக்க நேரிடும். தொழில் சிரமம் கொடுக்கும். சிலர் தொழிலை மாற்ற நினைத்த தவறான முடிவினை எடுக்க துணிவார்கள்.
6மிடத்தினை பார்வையிடுவதால் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். வழக்குகள் தொல்லை தரும்.
கவனிக்க வேண்டிய பலன்கள்
குரு பெயர்ச்சிக்கு பின் உத்யோகம் தொழில் இவைகளில் அதிக கவனமும் ஆழ்ந்த பரிகாரமும் தேவை.
பரிகாரம்
கணபதியை வழிபட்டு வரவும்
ஹனுமான்
Click The + Icon To Read Your Prediction
28.9.2020 முதல் 4.10.2020
♈︎ Aries
Weekly predictions on the basis of Moon movement through the houses from 28.9.20 to 4.10.20
28.9.2020 Dhanishta | Finance is very good. Favorable results through your children. However you will be tension all the day. |
29.9.2020 Shatataraga | There will be quarrels in the family along with the family members. Expenses high and dissolving the money. |
30.9.2020 Purva Bhadrapada | Likely there is possible of journey. A news from native will gives boost you. |
1.10.2020 Uttara Bhadrapada | You will find difficulty in profession and business. Suffering cannot afford some cost. |
2.10.2020 Revati | You will face some problems in loan matters. Pay attention in your health issues. |
3.10.2020 Ashvini | Make some decisions regarding vehicles. Mothers advise give some results. |
4.10.2020 Bharani | You will do family expenses to get rid of the shortage. In your expenses luxury things also included. |
Remedy for relief | Do pray Madurai Meenatchi for avoiding couples unnecessary quarrels. |
OCTOBER 2020 MONTHLY PREDICTIONS
1.10.2020 முதல் 31.10.2020
ARIES
Planetary Position during October 2020
Sun | Hastha 6.10.20 Chithira 20.10.20 Swati till end of month | Virgo Till 16.10.2020 thereafter Libra |
Jupiter | Purva Ashadha 29.10.20 Uthara Ashadha till end of month | Sagittarius entire month |
Saturn | Uthara Ashadha till end of month | Capricorn entire month |
Mars | Ashvini 17.10.20 Revati till end of month | Aries Till October 5th thereafter Pisces |
Mercury | Swati 24.10.20 Chitra till end of month | Libra entire month |
Venus | Maga 6.20.30 Purva Phalguni till end of month | Leo till 22.10.2020 thereafter Virgo |
Rahu Kethu | Mrigashirsha/ Jyeshtha | Taurus - Scorpio entire month |
Moon | Moves entire stars | 2.25 days each house for entire month |
Finance | Cash flow satisfactory for the entire month. The expected money will come. 2nd half of the month you will face some debt problems. |
Family | Throughout the month family will be fine. You will purchase household articles |
Couples | Married couples face some problems with them due to Mercury in the 7th house. 2nd half of the month the situation improves and you may expect favorable events. |
Profession | You will face heavy workload in working place. There will be delay in transfers expecting loans and deals. |
Business | You will be hard working but less productive during this month. However certain expecting deals may be delayed |
Health | Your life partner faces some illness during this month will cause medical expenses. |
Children | This is favorable month for children and they will get good job seeking admission in college and schools there will be favorable results. |
Remedy | Pray Madurai Meenatchi Amman daily and will get good health results from your life partner |
Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.
In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.
Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.
In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.
Aries:
You might be able to start something new this month. Your confidence level and self-esteem may help you to get success. Your luck is likely going to back your efforts and give you an amazing time. Employees are likely to get a promotion. This month may prove great for your career and business. Your seniors may appreciate your dedication to your work. It is advisable for businessmen to be cautious during the first half of this month. This month might be full of joyous moments for your relationships. You may have an amazing time with your family members; though a shift in your partner’s behavior may disappoint you. This month may prove a little challenging for your business. If you have a partnership business, you must be cautious with your business partner. If you already are in a relationship, you may get amazing time with your loved one. Unmarried people may get attractive proposals during this month. If you want to propose to your loved one, this month may give you a positive result. You may face some issues in your career during this month. Government employees awaiting for their transfers may get one during this month. If you are planning to initiate something new, you may find this month in your favor. People involved in the IT field may get a significant achievement.
In order to focus more on your studies during this month, eliminate negative thoughts from your mind.
Hanuman
Get in Touch
தொடர்ப்புக்கு
Here for you
Call us between 8AM - 8PM. We are there for your support
Know Your Astrologer
Shri Mahalakshmi Upasakar
For Appointments
+91 9442276278