Sri Mahalakshmi Upasagar
REBIRTH OF MAHATMA GANDHI ? மகாத்மா காந்தி மீண்டும் பிறந்தாரா ? Stunning points 5
முக்காலமும் அறிந்தவன் முனிவன்
ஜாதகத்தினை வைத்து ஒருவருடைய முற்பிறவி இப்பிறவி மற்றும் அடுத்த பிறவி என மூன்று காலங்களையும் சொல்லிவிட முடியும்.
முதலில் மகாத்மா காந்தியின் ஜாதகம் பார்வையிடுவோம்
பிறந்தது துலா லக்னம்
லக்னத்தில் சுக்கிரன் செவ்வாய் புதன்
விருச்சிகத்தில் சனி
மகரத்தில் கேது
மேஷத்தில் குரு
கடகத்தில் ராகு சந்திரன்
கன்னியில் சூரியன்
பிறப்புகளற்ற நிலை வேண்டுமென்றால் முக்தி ஸ்தானம் வலுப்பெறவேண்டும்.
முக்தியினை அடையாளம் காட்டும் இடமான லக்னத்திலிருந்து 12ம் வீட்டின் மீது ஒருவருடைய ஆசைகள் படிய வேண்டும்.
எப்போதும் முக்தியினைப் பற்றி எண்ணிக்கொண்டும் முக்திக்கான வழியினை தேடிக் கொண்டும் இருக்க வேண்டும்.
இதற்குத்தான் ஆன்மீகம் நிழலாய் ஒவ்வொருவரோடும் பயணிக்கிறது.
பிறந்தவா்கள் மீண்டும் மீண்டும் பிறக்கிறாா்கள். ஆன்மீக சிந்தனை வரும் வரை போராடுகிறாா்கள். போராடிக் களைத்த பின்னே இறைவன் நினைவில் நிழலாடுகிறான்.
இறைவனை வேண்டும்போது முக்திக்கான ஆசைகள் துளிா் விட தொடங்கும்.
முக்திக்கான எண்ணம் தீவிரம் அடையும் வரை மீண்டும் மீண்டும் பிறக்கிறாா்கள்.
இதில் யாருக்கு முதலில் பிறவிகளற்ற முக்தி நிலை கிடைக்கும் என்பதை அவர்களுடைய வாழ்க்கை நிலையினை வைத்து சொல்லிவிட முடியாது.
அரசாளும் மன்னவன் மீண்டும் பிறக்கலாம்.
எப்போதும் இறைவனை துதித்துக் கொண்டிருப்பவா்களும் மீண்டும் பிறக்கலாம்.
பின் யாா்தான் மீண்டும் பிறவாதிருக்கும் நிலை பெற முடியும்.
எவராக இருந்தாலும் அவருடைய கர்மா முற்றிலும் அவரை விட்டு விலகும்போது அவரைத்தேடி முக்தி வரும். கர்மா இல்லாதவா்கள் முக்தியினை எளிதாக பெற்றுவிடுகிறாா்கள். அவா்களுக்கு மறு பிறவிகள் இல்லை.
இதனை எப்படி அடையாளம் காண்பது
ஆதி சங்கரர் கடக லக்னத்தில் பிறந்தவா். லக்னத்திற்கு 12மிடமான முக்தி ஸ்தானத்தில் லக்னாதிபதியே அமா்ந்து முக்திக்கான தீவிரமான எண்ணங்களை பதிய விட்டாா்.
அவருடைய ஜாதகத்தில் முன் கர்மாவினை சொல்லும் வீட்டில் ராகு அமா்ந்து கர்மாவினை அடக்கி வைத்தாா். கர்மா அதிபதியான சுக்கிரன் 10ல் வாக்கு ஸ்தானதிபதியோடு இணைந்து அமா்ந்ததால் மக்களுக்கு வழிகாட்டும் உபதேசங்களை சொல்லி கர்மாவினை கழித்தாா்.
இன்னுமொரு முன் கர்மா கிரகமான சனி 6ல் அமா்ந்து முக்திக்கான 12மிடத்தினை பார்வையிட்டு குருவோடு பரிவா்த்தனை சந்திரன் சம சப்தம பார்வை என முக்தி சிந்தனையிலிருந்து விலகாது வேட்கை குறையாது எண்ணிய இலக்கினை அடைய உதவிச் செய்திருக்கிறது என்பதே உண்மையாகும்.
எனவே ஒருவருக்கு 12மிடமான லக்னாதிபதியோடு தொடா்பில் இருக்க வேண்டும்.
முக்கியமாக முன் கர்மாவானது முற்றிலும் அகலும் நிலை அடைய வேண்டும்.
சில மகான்கள் அவதரித்து முக்தி அடைய வேண்டிய நிலையில் தீா்க்கப்படாத சிறிய வகை கர்மாக்களால் மீண்டும் பிறந்து குறைந்த காலம் வாழ்ந்து பின் முக்தி அடைந்திருக்கும் நிலையினையும் பார்க்க முடிகிறது.
கர்மா என்பது வித்தியாசமானது
ஒருவருக்கு தீங்கு செய்தாலும் அந்த வினையானது கர்மாவாக தொடரும்
ஒருவா் உங்களுக்கு தீங்கு செய்தாலும் அந்த வினையானது உங்களை கட்டிப் போட்டு பிறவியெடுத்து கர்மாவினை திரும்ப தீா்த்துவிட்டுதான் போகும்.
இப்படித்தான் கர்மாவானது ஒருவரை போராட வைக்கும்.
REBIRTH OF MAHATMA GANDHI ? மகாத்மா காந்தி மீண்டும் பிறந்தாரா ? Stunning points 5
மகாத்மா காந்தி ஜாதகத்திற்கு வருவோம்
துலாம் லக்னத்தில் பிறந்த இவருக்கு லக்னத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று மாளவ்ய யோகத்தினை கொடுக்கிறது. ஆனால் 12ம் வீடான கன்னி அதிபதி லக்னத்தில் அமா்ந்திருக்கிறார். ஆனால் முக்திக்கான 12ம் வீட்டிற்கு நேரிடையான தொடாபானது சுக்கிரனுக்கு இல்லை.
துலாம் லக்னத்திற்கு தீய முன் கர்மாவினை அடையாளம் காட்டும் கிரகமான சூாியன் அரசு மற்றும் அரசு சாா்ந்த அரசியல் வழி முன் கர்மா இவருக்கு இருக்கிறது.
எனவேதான் அரசியல் போராட்டம் செய்த போதும் அரசின் பதவிகளை இவரால் பெற முடியவில்லை. அரசியல் காரணமாக இழப்பினையே சந்திக்க நோிட்டது.
லக்னத்தில் அமா்ந்த சுக்கிரன் யோகத்தினால் மட்டுமே உலகப் புகழினைப் பெற முடிந்தது. ஆனால் சுக்கிரன் முக்தியினை பெற உதவி செய்ய வில்லை.
துலாம் லக்னத்தின் மற்றுமொரு தீயமுன் கர்மா கிரகமான சுக்கிரன் யோகம் பெற்றதால் முன் ஜென்மத்தில் புகழ் பெற்ற மாமனிதராக இருந்ததால் அந்த ஜென்ம வாசம் இப்பிறவியில் தொடா்ந்து வந்து இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மகாத்மா காந்தியின் ஜாதகத்தில் முக்திக்கான வழி காட்டும் அமைப்புகள் ஏற்படவில்லை . முன் கர்மா கிரகமான சூரியன் முக்தியில் அமா்ந்ததால் முக்திக்கான காதவானது அடைபட்டுப் போனது. முன் கர்மா கிரகமான சூாியன் 12ல் அமா்ந்ததால் அவரை முன்கர்மாவானது கட்டிப் போட்டு முக்தி சிந்தனையை மறைத்து விட்டது.
அவருடைய கர்மா விலகினால்தான் அவருக்கு முக்தி சிந்தனை வரும் என்பதால் இப்பிறவியில் போராடி ஓய்ந்து போனாா்.
அவருக்கு எதனால் விபரீத முடிவேற்பட்டது.
அதுவும் அவருடைய முன் கர்மாவால்தான் ஏற்பட்டது.
துலா லக்னத்திற்கு மாரக ஸ்தானத்தில் அமா்ந்த கிரகங்கள் மாரகத்தினை தரும். இவரக்கு 7ல் அமா்ந்த குரு துலா லக்ன பாபியாகி 7ல் அமா்ந்து மாரகத்தினை தரத் துணிந்தாா்.
குரு தெசா லக்னமான மேஷத்திற்கு மாரகத்தினை கொடுக்கக் கூடியவா் சுக்கிரன்.
சுக்கிரன் முன் கர்மா கிரகமென்பதால் குருவின் பாா்வை பட்டதால் முன் கர்மாபடி விதியினை முடிக்க குரு சுக்கிரன் கூட்டணி நாடகத்தினை நடத்திக் காட்டியது.
மகாத்மா காந்திக்கு சுக்கிரன் தீய முன் ஜெனம கர்மா கிரகமாக வந்து வலுப் பெற்றதால் தீயதைத்தான் செய்யும். இவருக்கு சுக்கிரனால் ஆபத்து வந்தது.
இவரை சுட்ட நாதுராம் கோட்சே மிதுன லக்னத்தில் பிறந்த 10ல் சுக்கிரன் வலுப்பெற்று மாளவ்ய யோகத்தினை தந்து கொண்டிருந்தவா்.
மகாத்மா காந்திக்குக்கும் சுக்கிரன் மாளவ்ய யோகம் உள்ளது. ஆனால் நாதுராம் கோட்சேக்கு 10ல் காந்தியை விட வலிமையான சுக்கிரன் என்பதால் சுக்கிரன் கெடுதலை செய்தாா்.
காந்திக்கு மாரகத்தினை தந்த கிரகம் குரு
நாதுராம் கோட்சேவுக்கு இந்நிகழ்வின்போது நடந்து கொண்டிருந்த தசை குரு
ஆக
தீய முன் கர்மா கிரகமான சுக்கிரன் கர்மாவினை கழிப்பதற்காக இந்நிகழ்வினை நடத்தி விட்டு போயிருக்கிறாா் என்பதே உண்மையாகும்.
சரி இவருக்கு மறு பிறப்பானது தவிா்க்க முடியாததாகி விட்டது.
இவருடைய மறு பிறப்பில் இவருடைய கர்மா கிரகமானது அடங்கியது. கர்மா விலகியதால் முக்திக்கு வழி கிடைத்தது.
இவா் இறந்த பின் மீண்டுமொருமுறை பிறந்து முக்தியினை பெற்றாா் என்பதை ஜாதக கிரகங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
எவராக இருந்தாலும் முற் பிறவியில் செய்த வினைகளை அனுபவித்து கர்மாவினை கழித்தால்தான் முக்திக்கான கதவுகள் திறக்கும் என்பதால் கர்மாவினை கழிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து பாருங்கள்.
REBIRTH OF MAHATMA GANDHI ? மகாத்மா காந்தி மீண்டும் பிறந்தாரா ? Stunning points 5
தொல்லை தரும் தீயமுன் கர்மா சொல்லும் இடங்கள் 8 11
நன்மை தரும் நல் முன் கர்மா சொல்லும் இடங்கள் 2 5
இவைகளை சமாளித்துவிட்டு யோசித்துப் பார்தால்
நடப்பு தீய முன் கர்மா சொல்லும் இடங்கள் 7 10
நடப்பு நல் முன் கர்மா சொல்லும் இடங்கள் 1 4
இதனையும் சமாளித்துவிட்டு
பரிகார கர்மாவினை கவனிக்க வேண்டும்
நல் பரிகார கர்மா சொல்லும் வீடுகள் 3 6
தீய பரிகார கர்மா சொல்லும் வீடுகள் 9 12
நீங்கள் எந்த கர்மா தெசையினை சந்தித்துக் கொண்டிருக்கிறீா்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள்