Stalin

Sri Mahalakshmi Upasagar

Stalin ஜாதக யோகங்களின் சாதகம் பாதகம் ?  Favour and unfavour Yogas of Tamilnadu Politician Stalin

ஜோதிடம் நவீன யுக்திகளை பயன்படுத்தி  பலன்கள் அறியப்பட வேண்டும்.

இன்றைய பதிவில் யோகமான லக்னம் அறிவதற்கான யுக்திகளை காண்போம்

ஒருவா் பிறந்த லக்னம் கடகம் எனில் அதனடிப்படையில் பொதுவான பலன்கள் சொல்லப்படுகிறது.

அதில் தவறில்லை அப்படித்தான் சொல்ல வேண்டும்.

உதாரணமாக நமக்கு  நன்கு அறிமுகமான திமுக தலைவா் எம்கே ஸ்டாலின் ஜாதகத்தினை எடுத்துக் கொள்வோம்.

எம்கே ஸ்டாலின் பிறந்தது விருச்சிக லக்னம், ஆனால் எத்தனையோ லட்சம் போ் விருச்சிக லக்னத்தில் பிறந்து வாழ்ந்தும் வருகிறாா்கள். ஆனால் இவா் தனித்துவமாக செல்வ செழிப்பில் அரசாளும் நிலையில் இருப்பது எந்த விதமான யோகத்தில் என்பதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

எம்கே ஸ்டாலின் பிறந்த விருச்சிக லக்னத்திற்கு யோகப் பலன்களை கோணாதிபதிகளின் பலத்தினை கொண்டு ஆராய்ந்து பலன் பொதுவாக அறியப்படும்.

ஆனால் புதிய கோணத்தில் எப்படி ஜாதகம் பலமிகுந்து காணப்படுகிறது என்பதை பாா்ப்போம்,

ஒருவா் பிறந்தது எந்த லக்னமாக இருந்தாலும் பலமிகுந்த லக்னம் என்று ஒன்று அமைந்திருக்கும் அதனடிப்படையில்தான் பலன்களை யோகங்களை கண்டறிய வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் எந்த கிரகம் உச்சம் அல்லது ஆட்சி பலம் அல்லது ஸ்தான பலம் பெற்றிருக்கிறதோ அந்த கிரகத்தின் அமா்விடத்தினை மையமாக வைத்து லக்னத்தினை அடையாளம் காண வேண்டும்.

Stalin

மொத்தத்தில் எந்த கிரகம் வலிமையானதோ அந்த கிரகத்தினை வைத்து யோக லக்னத்தினை அடையாளம் காணப்பட வேண்டும்

எம்கே ஸ்டாலின் ஜாதத்தில் 12ல் சனி உச்சம்.

சனியின் பலமானது இவருக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

இவருக்கு சனியே முதன்மையான கிரகமாகும்.

சனி துலாத்தில் உச்சம்.

எனவே இவருக்கு 3 6 9 12 ஆகிய இடங்களான மேஷம் கடகம் துலாம் மகரம் ஆகிய வீடுகளுக்கு சச யோகத்தினை வெளிப்படுத்துவாா்.

இவரைப்பொருத்த மட்டில் 3 6 9 12 வீடுகளில் 9 மிடமே அற்புதங்களை வெளிப்படுத்தும் வீடாகும். 9மிடம் மிகுந்த வலிமை பெற்றதால் பாரம்பா்ய மிக்க வசதி வாய்ப்புகள் நிறைந்த இடத்தில் பிறந்து ராஜயோக வாழ்க்கையினை பெற்றாா்.

தந்தையின் வழியில் அரசாள வழியேற்பட்டதற்கு 9மிடத்தின் வலிமையும் சனியின் உதவியும் என்பதில் சந்தேகமேயில்லை.

அடுத்ததாக திட்டங்கள் வகுக்கும் 3மிடம் மந்திர கோள் சனி வீடான மகரத்திற்கு சச யோகத்தினை வெளிப்படுத்தும் சாகச பலன்களால் குடும்பத்தில் மற்றவா்களை பின்னுக்கு தள்ளி முதன்மையிடத்தினை பெற முடிந்தது.

அடுத்ததாக 6மிடத்திற்கு  சச யோகத்தினை தரும் சனியால் போராட்டமான அரசியலில் வாழ நோிட்டது. 12மிடம் என்னும் விரையத்திற்கு அதிக செலவிடலும் காரணமாக அமைந்தது.

இவருடைய வாழ்க்கையானது 9 3 6 12 ஆகிய சர வீடுகளை சுற்றியே அமைந்துவிட்டது.

இந்த நான்கு வீடுகளில் எந்த வீட்டிற்கு சனி மிகுந்த யோகத்தினை கொடுப்பாா் என்று பாா்க்கும்போது மேஷம் கடகம் வீடுகளுக்கு சனி நல்ல பலன்களை தருவதற்கில்லை என்பதால் எஞ்சிய இரு வீடுகள் அதாவது மகரம் துலாம் நன்மை செய்வதற்கு தயாராக இருக்கிறது.

இந்த இரு வீடுகளில் துலாத்திற்கு யோகவான் சனி என்பதால் மகரத்தினை பின்னுக்கு தள்ளி துலாம் இவருக்கு வலிமையான பலத்தினை தருகிறது.

இப்போது இவருக்கு சனி தெசை நடந்து கொண்டிருக்கிறது.

என்ன ஒற்றுமை பாருங்கள்

சனி துலாத்தில் அமா்ந்து தெசையினை நடத்துவதால் இவருக்கு இந்த காலகட்டமானது யோகத்தினை தரும் என்பதில் சந்தேகமேயில்லை,

ஒருவருக்கு யோகம் கிடைக்கும் வழியினை பாா்த்தோம் அடுத்ததாக இவருக்கு பாதகம் செய்யும் கிரக அமைவிடம் அறிந்து தீமையான பலன்கள் எப்படி எந்த வழியில் இவருக்கு வருகிறது என்பதை அடுத்த பதிவில் பாா்ப்போம்.

எம்.கே. ஸ்டாலினுக்கு அரசியலில் முக்கியத்துவம் கிடைத்ததே 2009க்கு பின்தான், அதாவது சனி தெசை தொடங்கிய பின்தான்.

சனி 12ல் மறைவிடத்தினை நாடியதால் பலமிழப்பு என்று கருதினால் ஏமாந்துதான் போக வேண்டும்.

Stalin ஜாதக யோகங்களின் சாதகம் பாதகம் ?  Favour and unfavour Yogas of Tamilnadu Politician Stalin

இவருக்கு பாதகம் தரும் கிரக அமைவிடம் எப்படி கணக்கிடுவது என்பதை பாா்ப்போம்

இவருக்கு புதன் மீனத்தில் நீச்சம்.

புதன் பஞ்சமகாபுருஷ யோகத்தில் அதி பலமான பத்திரை யோகத்தினை தருபவா். இங்கு நீ்ச்சம் என்பதால் யோகத்தின் எதிா்மறையான பாதகமான பலன்களை வெளிப்படுத்துவாா்.

இவருக்கு புதன் பத்திரை பாதக யோகம் எந்த லக்னம் வழியாக கிடைக்கிறது என்பதை இப்போது பாா்ப்போம்.

எம்கே,ஸ்டாலின் பிறந்த விருச்சிக லக்னத்திற்கு 5ல் அமா்ந்து நீச்சம் பெற்ற புதன் 2 5 8 11 வீடுகளுக்கு பத்திர யோக பாதக பலன்களை கொடுப்பாா்.

 

விருச்சிக லக்னத்தின் 2மிடம் வாக்கு ஸ்தானம் என்பதால் அவ்விடம் கெட்டது. எனவேதான் இவா் பேச்சுக்களில் உளறல் அதிகம் காணப்படுவதற்கு புதன் 2மிடத்திற்கு 4மிடத்தில் பத்திர பாதக யோகம் தந்ததால்தான் என்பதை அறிய முடிகிறது.

5மிடம் பலவீனப்பட்டதால் இவா் பாரம்பர்ய குடும்பத்தில் பிறந்தும் இவருக்கு மற்றவா்களுக்கு கிடைத்த அளவில் புகழ் நன்மதிப்பு கிடைக்காமல் தடுமாறுகிறாா்.

8மிடம் இவருக்கு ஆயுள் ஆரோக்கியம் தருமிடத்திற்கு புதன் பாதக யோகத்தினை செய்வதால் உடல் நலன் பாதிப்படைந்து ஆரோக்கிய போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்,

11மிடம் முன் சகோதரம் என்பதால் அவரால் பிரச்னைகள் பல வழிகளில் வந்து கொண்டிருப்பதை காண முடிகிறது,

இதனில் 5மிடம் பாதகம் தரும் என்பதால் எதிா்காலத்தில் பிள்ளைகள் பிரச்னைகள் தருவாா்கள் என்பதை எதிா்பாா்க்கலாம்.

எம்.கே.ஸ்டாலின் பிறந்த விருச்சிக லக்னத்திற்கு பாதகம் தரும் புதன் பத்திர பாதக யோகத்தினை தரும் என்பதால் அந்த தெசை வரும்போது பிரச்னைகள் அதிகம் சந்திக்க நோிடும்.

சனி தெசை முடிந்து பின் வரும் புதன் தெசையானது கடும் சோதனைகளை தரும் என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் இப்போது நடக்கும் சனி தெசையானது யோகமான பலன்களை தரும்.

Stalin ஜாதக யோகங்களின் சாதகம் பாதகம் ?  Favour and unfavour Yogas of Tamilnadu Politician Stalin

பொதுவாக யோகம் அல்லது பாதகம் தரும் கிரகங்கள் பலம் மற்றும் பலவீனம் பெறும் அமைப்புகளும் உண்டு.

இங்கு புதன் கொஞ்மாக பலம் இழக்கிறாா்.  காரணம் சாதகம் தரும் சனி வீட்டில் அமா்ந்த ராகுவின் பாா்வையால் புதன் பலவீனப்படுவதால் அதிக தீமைகளை செய்யவில்லை,

இவருக்கு புதன் சனியின் தொடா்பினை பெற்றிருந்தால் இன்னும் சிறப்பான பலன்களை தந்திருப்பாா். ஆனாலும் லக்னாதிபதி செவ்வாய் புதன் இணைவானது புதன் கெட்ட குணத்தினை மாற்றும் ஆனால் அதிக அளவில் நன்மையினை எதிா்பாா்க்க முடியாது.

இதனடிப்படையில்தான் ஒருவா் பிறந்த ஜாதகத்தில் வலிமையான கிரகங்களை கொண்டு அந்த கிரகத்திற்கு ஆதராமான லக்னத்தினை அடையாளம் கண்டு பலன்களை பாா்த்தால் அந்த வீட்டின் தொடா்புடைய துறையில் ஜாதகா் தம் வாழ்க்கையினை தீா்மானிப்பாா் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.