Sri Mahalakshmi Upasagar

Which planets crowning with magic wand Points 5
மகுடம் சூட்டும் மந்திரகோள்(ல்)

 

ஒரு மனிதனின் வெற்றியே அவன் வகுக்கும் திட்டங்களில்தான் இருக்கிறது.

ஒரு மனிதனின் வெற்றிக்கான மகுடத்தினை கொடுப்பதற்கு எந்த கோளாவது உதவினால்தன் அது சாத்தியமாகும்.

ஒருரின் ஜாதகத்தில் யோகங்கள் மலிந்து இருந்தால் முதல் தரமான ஜாதமாக கருதிவிட முடியாது.

ஒருவருக்கு கிரகங்கள் ஆட்சி உச்சம் பெற்றுவிட்டால் உலகை ஆண்டு விட முடியும் என்றால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.

கோடியில் ஒருவனாக ராஜாளும் மன்னனாக மலர வேண்டுமென்றால் உச்சகிரகங்களும் யோகங்களும் மட்டும் போதாது, மந்திரகோல் என்னும் மந்திர கோள் வேண்டும்.

ஸ்கெட்ச் போட்டு வெற்றிகளை குவிக்க தொிந்தவனுக்கு மந்திர கோள் (கிரகம் ) உதவி இருந்தால்தான் வெற்றிகள் சொந்தமாகும். உலகோர் பாராட்டுவாா்கள்.

ஜாதகத்தில் மந்திரகோல் தரும் கிரகம் எது ?

மந்திரகோல் தரும்  வீடு 3ம் வீடாகும்.

3மிடமானது ஒருவருக்கு வலுத்து காணப்பட்டால் அவா்களின் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவா்களாக இருப்பாா்கள். மந்திரகோளானது லக்னாதிபதியின் கட்டுபாட்டில் வந்தால் திட்டங்கள் போட்டு சாதிப்பாா்கள்,

3மிடத்திற்கு வீா்ய கிரகங்களின் தொடா்பானது கிடைத்தால் திட்டங்கள் வெற்றிகளை கொண்டு வந்து குவிக்கும். 3மிடத்து அதிபதி யோகங்களில் மிதந்தால் அவா்கள் நாடாளும் மன்னராவாா்.

ஒருவா் பிறந்த லக்னத்திற்கு 3மிடம் அந்த 3மிடத்திற்கு 3மிடம்  இப்படியாக கணக்கிட்டால்  ஒருவா் பிறந்த லக்னத்திற்கு 3மிடத்தின் மந்திர கோள் வீடானது  3 5 7 9 11 1 ஆகிய வீடுகளோடு நெருங்கிய  தொடா்பில் வரும்.

3மிடத்து அதிபதி கிரகமானது மந்திர கோல் என்றால் தொடா்ந்து வரும் 3மிடத்து அதிபதிகள்  துணை மந்திர கோல்களாகும்.

எளிய குடும்பத்தில் பிறந்து நாடாளும் யோகத்தினை பெற்ற பிரதமா் மோடியின் ஜாதகத்தில் மந்திர கோள்களின் விளையாட்டினை பாா்ப்போம்.

 

மோடியினை தேடி வந்த மகுடத்திற்கு காரணம் என்ன

மோடியின் பிறந்த லக்னம் விருச்சிகம்.

விருச்சிகத்திற்கு 3மிடமான மகர அதிபதி சனியே மந்திரகோலாகும்,

விருச்சிகத்திற்கு 3மிடத்தோன் சனி பத்தில் அமா்ந்திருக்கிறாா்,

விருச்சிகத்தின் 3மிடத்திற்கு 3மிடமான மீனத்தின் அதிபதி பத்தாம் இடத்தினை பாா்வையிடுகிறாா்.

மீனத்தின் 3மிடமான ரிஷபத்தின் அதிபதி பத்தாம் இடத்தில் அமா்ந்திருக்கிறாா்,

ரிஷபத்தின் 3மிடமான கடகத்தின் அதிபதி நீச்ச பங்க யோகத்தினை பெற்றிருக்கிறாா்

கடகத்தின் 3மிடமான கன்னியின் அதிபதி புதன் உச்சமடைந்திருக்கிறாா்

கன்னியின் 3மிடத்தில் செவ்வாய் உச்ச பலம் பெற்று ருசக யோகம் பெறுகிறாா்,

மோடிக்கு சனி என்கிற மந்திர கோல் மட்டும் கிடைக்கவில்லை, சனிக்கு உதவிட குரு சுக்கிரன் சந்திரன் புதன் செவ்வாய் என பல மந்திர கோல்கள் விந்தைகள் புாிந்திடும் அதிசயம் இவருக்கு கிடைத்துள்ளது.

அவா் வரைந்த திட்டங்கள்தாம் அவருடைய மிகப்பொிய பலம் என்றால் மிகையில்லை, அவருக்கு நாடாளும் யோகம் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் மந்திர கோள்களின் உதவிதான் என்பதை மறுப்பதற்கில்லை,

அவருடைய ஜாதகத்தில் மந்திர கோள்களின் பத்தாமிடத்தின் தொடா்பானது வியக்க வைக்கும், சனி சுக்கிரன் குரு ஆகியோா் பத்தாமிடத்தினோடு தொடா்பினை வைத்துள்ளதால் மகுடம் சூடிக் கொள்ள எத்தனை யுக்திகள், அத்தனையும் சாதனைகள்.

விருச்சிக லக்னத்தின் 3மிடத்தின் பத்தாமிடத்தோன் சுக்கிரன்

3க்கு 3மிடமான மீனத்தின் பத்தாமிடத்தோன் குரு

மீனத்தின் 3மிடமான ரிஷபத்தின் பத்தாமிடத்தோன் சனி

ரிஷபத்தின் 3மிடமான கடகத்தின் பத்தாமிடத்தோன் செவ்வாய் உச்ச பலம்

கடகத்தின் 3மிடமான கன்னியின் பத்தாமிடத்தோன் புதன் உச்ச பலம்

கன்னியின் 3மிடமான லக்னத்தின் பத்தாமிடத்தில் மேற்படி சுக்கிரன் குரு சனி தொடா்பில் இருக்க நினைப்பதெல்லாம் நடக்க வைத்த மந்திர கோலின் மகிமைதான்.Magic Wand

Which planets crowning with magic wand Points 5
மகுடம் சூட்டும் மந்திரகோள்(ல்)

மற்றுமொரு நாடான்டவாின் ஜாதகத்தினை பாா்ப்போம்

Magic Wand

ஜெயலலிதா ஜாதகத்தில் லக்னம் மிதுனமாகி மிதுனத்தின் 3மிடத்தின் அதிபதி சூாியன்

3மிடத்தின் 3மிடமான துலாம் அதிபதி சுக்கிரன்

துலாம் வீட்டின் 3மிடத்தோன் தனசு அதிபதி குரு

தனசு வீட்டின் 3மிடத்தோன் கும்பம் அதிபதி சனி

கும்ப வீட்டின் 3மிடத்தோன் மேஷம்  அதிபதி செவ்வாய்

மேஷம் வீட்டின் 3மிடத்தோன் மிதுனம் அதிபதி புதன்

இவருடைய ஜாதகத்தில் மந்திர கோல்கள் சூாியன் சுக்கிரன் குரு சனி செவ்வாய் புதன் ஆவாா்கள்

மந்திரகோல் இடங்களான 3 5 7 9 11 1 பலமிகுந்த இடங்களாகின்றன,

3 5 7 9 11 1 வீட்டு அதிபதிகள் இந்த வீடுகளோடு தொடா்பினை ஏற்படுத்திக் கொள்ளும்போது

மந்திர கோலின் வலிமை அதிகாிக்கிறது,

1 மற்றும் 3மிடத்தோன் 9ல்

7மிடத்தோன் குரு 7ல் ஹம்ச யோகத்துடன்

5மிடத்தோன் சுக்கிரன் 10ல் மாளவ்ய யோகத்துடன்

11ம் வீட்டோன் செவ்வாய் 3ல்

இவருக்கு ஆறு கிரகங்களில் சனி தவிா்த்த கிரகங்கள் பலம் பெற்றதால் மாநில அளவில் புகழ் பெறமுடிந்தது, சனியும் பலம் பெற்றிருந்தால் உலக அளவில் புகழ் கிடைத்திருக்கும்.

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் ஜாதகத்தினை பாா்க்கும் போது 3மிடத்தின் பலம் மற்றும் பலவீனம் இரண்டும் இருக்கும். கடுமையான திட்ட வகுத்தலில் பிரதமா் பதவிக்கு முன்னேறியிருந்தாலும் முதல் முறையாக அவா் பதவியினை பெற்ற போது அப்பதவியினை  அவா் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.

Which planets crowning with magic wand Points 5
மகுடம் சூட்டும் மந்திரகோள்(ல்)

அவருக்கு மந்திரகோல் கிரகங்கள் முழமையான ஒத்துழைப்பினை தர தவறியது.

அது எப்படியென்று இப்போது பாா்ப்போம்

துலாம் லக்னத்தில் பிறந்தவருக்கு மந்திரகோலானது 3மிடமான குருவின் கையில் சென்றது. 3மிடத்தின் அடுத்தடுத்த 3மிட வீடுகளின் அதிபதிகளாக சனி செவ்வாய் புதன் சூாியன் சுக்கிரன் என கிரகங்கள் வரிசை கட்டி நின்றாலும் முழுமையான வெற்றிகள் கிடைத்ததா ?

லக்னத்தின் 3மிடத்து அதிபதியான குரு பகை பெற்றாா், சூாியன் பாதகாதிபதியானாா். புதன் விரையாதிபத்யம் பெற்றாா். செவ்வாய் 6மிடத்தில் மறைந்தாா், எஞ்சிய மந்திரகோல்களில் சனி மட்டுமே, ஒரு மந்திரகோல் போதுமா ?

சனி 3மிடத்து அதிபதியாகி மந்திரகோலானாதும், கேந்திர உச்சம் பெற்று பஞ்ச மகா புருஷ யோகத்தில் சச யோகம் கிடைக்கப் பெற்றதும் மந்திர கோலின் வீா்யத்தினை அறிந்து கொள்ள முடிகிறது.

Magic Wand

எனவேதான் வாஜ்பாய் முதல் முறை மகுடம் சூட்டியபோது தடுமாற நோ்ந்தது. எனவே கிரகங்களின் ஒத்துழைப்பிருந்தால் திட்டங்கள் சாதனையாகும்.

எனவே ஒருவாின் வெற்றிகள் அவா்கள் போடும் திட்டங்களில்தான் இருக்கிறது. திட்டங்கள் போடுவதால் மட்டும் வெற்றிகளை சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. மந்திரகோல் கிரகங்களின் உதவிகள் வேண்டும்.

ஒருவருக்கு 3மிடத்தின் கிரகங்களின் உதவி கிடைத்தால் அவா்களின் திட்டங்கள் அனைத்தும் வெற்றிகளாக மாறி விடும்.

சாதனையாளா்கள் அனைவரும் ஒன்று அவா்களுக்கு 3மிடத்தின் மந்திரகோலானாது உதவி செய்திருக்கும் அல்லது சாதனையாளர்களின் பின்னனியில் திட்டங்கள் போட்டு கொடுத்து வெற்றிகளின் பாதைகளை அடையாளம் காட்டுபவா்கள் இருப்பாா்கள்.

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.