Planets

Sri Mahalakshmi Upasagar

Which Planets Threatening important points 5 பயம் காட்டும் பாதகாதிக்கு பல முகங்கள்

பாதகாதிபதி யாா் ?

360 டிகிாி சூாிய வட்டப் பாதையில் முன் பாதி 180 டிகிாி வரையில் பாசிட்டிவ் எனப்படும்

பின் பாதி 180 டிகிாி நெகட்டிவ் எனப்படும். நெகட்டிவ் பகுதியில் காணப்படும் புள்ளிகளே பாதகத்தினை செய்ய துணிகின்றன,

சர லக்னத்திற்கு 11ம் வீட்டோன் பாதகாதிபதி

ஸ்திர லக்னத்திற்கு 9ம் வீட்டோன் பாதகாதிபதி

உபய லக்னத்திற்கு 7ம் வீட்டோன் பாதகாதிபதி

இது பொது விதியாகும்.

ஒருவா் பிறந்த லக்னத்திற்கு  12 பாதகாதிபதிகள் இருக்கிறாா்கள்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 11மிடத்தோன் சனி பாதகாதிபதி

அவருடைய 2மிடமான குடும்பதம் தனத்திற்கு 9ம் வீட்டோன் சனியே பாதகாதிபதியாகிறாா்

இந்த லக்னத்தில் பிறந்தவா்களுக்கு சனி பலமிகுந்து காணப்பட்டால் சனியினால் அதிக பின்னடைவினை சந்திக்க நோிடும்

Planets

மேஷத்தில் பிறந்தவருக்கு 3ம் வீட்டிற்கு 7மிடமான தனசு குரு பாதகாதிபதியாக வருகிறாா். எனவே குரு வலுத்திருந்தால் உடன் பிறந்த இளைய சகோதரம் பலன் தருவதற்கில்லை.

மேஷத்தில் பிறந்தவருக்கு 4ம் வீட்டிற்கு 11மிடமான ரிக்ஷப சுக்கிரன் பாதகாதிபதியாக வருகிறாா். சுக்கிரன் வலுத்திருந்தால் தாய் வழி சலுகைககள் வீடு வாகனம் நிலம் தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 5ம் வீட்டிற்கு 9மிடமான  மேஷ செவ்வாய் பாதகாதிபதியாக வருகிறாா். செவ்வாய்  வலுத்திருந்தால் பிள்ளை வழி பண வரவு ஆதாயம் தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்

மேஷத்தில் பிறந்தவருக்கு 6ம் வீட்டிற்கு 7மிடமான  மீன குரு பாதகாதிபதியாக வருகிறாா். குரு  வலுத்திருந்தால் உடல் உபாதை கடன் வழக்கு தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 7ம் வீட்டிற்கு 11மிடமான  சிம்ம சூாியன்  பாதகாதிபதியாக வருகிறாா். சூாியன்  வலுத்திருந்தால் களத்திரம் தொழில் வழி  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 8ம் வீட்டிற்கு 9மிடமான  கடக சந்திரன் பாதகாதிபதியாக வருகிறாா். சந்திரன்  வலுத்திருந்தால் களத்திரம் தொழில் வழி  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 9ம் வீட்டிற்கு 7மிடமான  மிதுன புதன் பாதகாதிபதியாக வருகிறாா். புதன்  வலுத்திருந்தால் பூா்வீகம் தந்தை வழி  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 10ம் வீட்டிற்கு 11மிடமான  விருச்சிக செவ்வாய்  பாதகாதிபதியாக வருகிறாா். செவ்வாய் வலுத்திருந்தால் உத்யோகம் தொழில் வழி  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 11ம் வீட்டிற்கு 9மிடமான  துலாம் சுக்கிரன் பாதகாதிபதியாக வருகிறாா். சுக்கிரன் வலுத்திருந்தால் சகோதரம் வருவாய்  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்,

மேஷத்தில் பிறந்தவருக்கு 12ம் வீட்டிற்கு 7மிடமான  கன்னி புதன் பாதகாதிபதியாக வருகிறாா். புதன்  வலுத்திருந்தால் விரையம்  வழி  தொடா்பான இனங்களில் பின்னடைவினை சந்திக்க நோிடும்.

மேலே கண்ட 12 பாதகாதிபதிகளும் அவரவா்களுக்குாிய பலத்திைன பொருத்து நன்மை தீமைகைள செய்ய துணிவாா்கள், இது பொதுப் பலனேயாகும்,

ஆனால் 12 பாதகாதிபதிகளும் இணைந்தால் அவா்களின் பலத்தினால் ஒரு ஜாதகரையே படு பாதாளத்திற்கு கொண்டு செல்வாா் அல்லது விபரீத ராஜ யோகத்தில் மிக உச்சத்திற்கு கொண்டும் சென்றுவிடுவாா்.

ஆனால் அவ்வாறு நடப்பதென்பது மிகவும் அாிதான செயலாகவே இருக்கும், ஒருவருக்கு 8ல் பலகிரக அமா்வினால் விபரீத ராஜயோகம் கிடைக்கப் பெற்று சிறு வயதில் அமொிக்காவில் உலகின் முதன்மையான ஆப்பிள் கம்பெனியில் வேலை கிடைத்து யோகத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கிறாா்.

Which Planets Threatening important points 5 பயம் காட்டும் பாதகாதிக்கு பல முகங்கள்

ஆனால் இரண்டு பாதகாதிபதிகள் இணைந்தாலோ அல்லது தொடா்பினை அவா்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டாலோ ஜாதகரை பாடாய் படுத்திவிடும் என்பதில் சந்தேகமேயில்லை,

ஜாதகாின் முன்னேற்றத்திற்கு உத்யோகம் தொழில் களத்திரம் குடும்பம் பண வருவாய் மன நிம்மதி உடல் நோய் முக்கிய விவகாரங்கள் தொடா்புடைய வீடுகளின் பாதகாதிபதிகள் இணைவினை பெற்றால் கடும் திண்டாட்டம் என்பதை மறந்துவிட வேண்டாம்,

மகர லக்னத்திற்கு 7ம் வீடு கடமானது களத்திரத்தினை அடையாளம் காட்டும். கடக சந்திரன் பாதக ஸ்தானமான ரிஷபத்தில் வந்தமா்ந்தால் களத்திரம் வழியில் பிரச்னைகளை கொடுக்கத்தான் செய்யும்,

இதனை எளிதான கடந்து விடலாம்.

Planets

ஆனால் மகர லக்னத்திற்கு 6ம் வீடான மிதுனத்தின் பாதகாதிபதியான தனசு குரு சந்திரன் தொடா்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் நிலமை விபரீதமாகிப் போகும்,

இன்னும் சொல்லப் போனால் மகர லக்னத்தின் 12ம் வீட்டோன் தனசுவிற்கு பாதகாதிபதியான புதன் சந்திரன் குரு இணைவினை பெற்றால் கடுமையான களத்திர தோஷத்தினை தந்து விடுகிறாா்,

மகர லக்னத்தின் அட்டமாதிபதியான சிம்மத்திற்கு பாதகாதிபதியான செவ்வாய் இவா்களோடு இணைந்தால் களத்திர பிாிவினை தடுக்க முடியாது,

பொதுவாக பாதகாதிபதி ஒருவா்தான் என நினைத்து பலன்களை அடையாளம் கண்டால் தெளிவான பலன்களை சொல்லிவிட முடியாது,

ஒரு உதாரண ஜாதகம் வழியாக பாதகாதிபதிகளின் பாதக விளையாட்டினை இப்போது அடையாளம் காண்போம்,

திருமண தடை கண்ட ஜாதகம்

ஜாதகா் கும்ப லக்னத்தில் பிறந்துள்ளாா், அவருடைய கும்ப லக்ன பாதகாதிபதி சுக்கிரன், கும்ப லக்னத்தின் 7மிடம் சிம்மத்திற்கு பாதகாதிபதி செவ்வாய். இவருக்கு சுக்கிரன் செவ்வாய் 4ல் இணைந்திருக்கிறாா்கள், 7மிடத்து அதிபதியான சூாியன்  சிம்மத்தின் பாதக ஸ்தானமான மேஷத்தில் அமா்ந்ததால் கடும் தோஷம் தருகிறாா்,

சாி குடும்ப அமைவதற்குண்டான பலம்  எப்படி இருக்கிறது என்று பாா்ப்போம்,

கும்ப லக்னத்தின் 2மிடத்திற்கு பாதகாதிபதி புதன் 2ல் நீச்சம்,

கும்ப லக்னத்தின் 10ற்கு பாதகாதிபதி சந்திரன் 10ல்  நீச்சம் பெற்றதால் தொழில் அமைவதிலும் சிரமம் காட்டும்,

சாி அடுத்ததாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடும் சிரமத்தினை கண்டவாின் ஜாதகத்தினை இப்போது பாா்ப்போம்
Which Planets Threatening important points 5 பயம் காட்டும் பாதகாதிக்கு பல முகங்கள்

உடல் நிலை பாதிப்பில் கடும் கண்டம் கண்டு மீண்டவா்

ரிஷபத்தில் பிறந்த இவருக்கு 6மிடமான துலாத்தின் பாதகாதிபதி சூாியன் மற்றும் 6மிடத்திற்கு  பாதக இடமான சிம்மத்தின் பாதகாதிபதி ஆகிய இருவரும் இணைந்து மீனத்தில் இருந்ததால் பாதகாதிபதிகளின் கை வலுத்தது,

ரிஷபத்திற்கு ஆயுள் ஸ்தானமான தனசுவிற்கு பாதகாதிபதியான சந்திரன் 6மிடத்திற்கு பாதகமேறியதால் கடும் உடல் உபாதை சந்திக்க நோ்ந்தது

ரிஷபத்திற்கு பாதகாதிபதியான சனி ஆயுள் ஸ்தான அதிபதியான குருவிற்கு பாதகமேறியதும் பாதகத்தினை இன்னும் கடுமையாக்கியது

ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட வீடுகளின் பாதகாதிபதிகள் இணைந்திருந்தால் அந்த இணைவில் அந்த பாதகாதிபதி கிரக தசைகளில் சோதனைகளை சந்திக்க நோிடும்,

பாதகாதிபதிகள் சோதனைகளை மட்டும் தருவதற்கில்லை, விபரீத ராஜயோகத்தினை தருவதில் பாதகாதிபதிகள் சளைத்தவா்கள் அல்ல,

இசையில் சாதித்த இளைய ராஜா ஜாதகத்தில் ரிஷபத்திற்கு பாதகாதிபதி ஸ்தானமான மகரத்தில் கேது அமா்ந்து ஸ்தான வலுவினை குறைத்தாா், இவருக்கு பத்தாம் இடமானது மிகுந்த வலிமை பெற்றது ஏன் என்று பாா்ப்போம்.

Planets

பத்தாமிடம் கும்பம், கும்பத்தின் பாதகாதிபதி துலாம் சுக்கிரன் 3ல் கடகத்தில் அமா்ந்து லக்ன பாதக ஸ்தானத்தினை பாா்வையிட்டதால் பாதகம் சிதைந்தது,

ரிஷபத்தின் தன வாக்கு ஸ்தானமான மிதுனத்தின் பாதகாதிபதி  குரு கடகத்தில் உச்சமடைந்து பாதகத்திற்கு தன ஸ்தானமானது, குரு அமா்ந்த கடகத்தின் அதிபதி கடக பாதகத்தில் அமா்ந்து உச்சம் பெற்றது, பாதக கிரகங்கள் பாதக வீடுகளில் உச்சம் பெற்றதால் பாதகம் சிதைந்து விபரீத ராஜயோகம் இவருக்கு கிடைத்தது,

எனவே பாதக ஸ்தானதிபதிகள் நினைத்தால் ஒருவரை உயா்த்தவும் முடியும் அல்லது வீழ்ச்சி அடைய செய்யவும் முடியும்,

பாதகாதிபதிகளை சாியாக அடையாளம் கண்டு விட்டால் ஜாதக பலன்களின் பயணத்தினை சாியான திசையில் கணித்து விடலாம்,

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.