சசிகலா

Sri Mahalakshmi Upasagar

சசிகலா அரசியல் எதிர்காலம்  நிஜமா நிழலா ? Political future of Sasikal light or dark ? points 3

தமிழக அரசியலில் ஜெயலலிதா சகாப்தத்தில் நிழலில் இயங்கி வந்த சசிகலா நிஜத்தில் ஜொலிப்பாரா ?

அவருடைய ஜாதகம் என்ன சொல்கிறது

சசிகலா

பிறந்தது சிம்ம லக்னம்

சிம்மத்தில் சூரியன்

கன்னியில் சுக்கிரன்

துலாத்தில் சனி

தனசுவில் ராகு செவ்வாய்

மீனத்தில் சந்திரன்

மிதுனத்தில் குரு கேது

கடகத்தில் புதன்

சிம்மத்தில் பிறந்தவர்கள் அரசியலில் பிரபலமாக முன்னேறுவது மிகவும் சிரமமாகும்.

சிம்மம் லக்னத்தின் யோகர்கள் என்று அடையாளம் காட்டப் படும் கிரகங்கள் குரு செவ்வாய்.

முதல் யோகர்
ஆனால் குரு சிம்ம லக்னத்தின் 5ம் இடத்திற்குரியவராக நன்மைகள் செய்வார்.

அதே சமயம் குரு சிம்ம லக்னத்தின் 8ம் அதிபதயாகவும் வருகிறார். 5மிடத்துக்குரிய நல்ல பலன்களை கொடுக்கும்போத 8மிடத்து தீய பலன்களையும் கொடுப்பார்.

அடுத்த யோகர் செவ்வாய்

சிம்ம லக்னத்தின் கேந்திராதிபதியாக வருபவர் நன்மைகளை தருவார். ஆனால் ஸ்திர  லக்ன பாதகாதிபதியாக வருபவர் செவ்வாய்.

இப்படியாக இரண்டு யோகர்களும் நன்மகளை தீமைகளை கலந்தே கொடுப்பார்கள்.

இருவரில் அரசியலில் செல்வாக்கினை தரக்கூடிய கிரகமான செவ்வாய் பாதகாதிபதி ஆதிபத்யம் பெறுவதால் நல்ல பலன்களை கொடுக்க மாட்டார்.

எனவே தான் சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் மிகப் பெரிய அரசியல்  லாபத்தினை பெற தகுதியில்லாதவர்களாக இருக்கிறார்கள்.

சிம்ம லக்னத்தில் பிறந்து அரசியலில் யோகத்தினை பெற்ற சிலரின் ஜாதகத்தினை ஆய்விடும்போது கிடைக்கப் பெற்ற அரிய தகவல்களை பார்ப்போம்.

சிம்ம லக்னத்தில் பிறந்த அரசியல்வாதிகளின் ஜாதகத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்

முலாயம் சிங் யாதவ் ஜாதகத்தில் 8ல் மீனத்தில் சூரியன் புதன் இணைந்து இருப்பதுடன் புதன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றிருக்கிறார்.

பன்சிலால் அரியானா முதலமைச்சரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்.

சித்தார்த் சங்கர்  ரே வெஸ்ட் பெங்கால்  முன்னாள் முதலமைச்சரின் ஜாதகத்தில் மூன்றில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்.

சங்கர் தயார் சர்மா ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்.

மத்திய மத்திரியாக இருந்த நிலமணி ரௌட்ரே ஜாதகத்தில் பத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்

அந்துலே மகாராஷ்ட்ரா   முன்னாள் முதலமைச்சரின் ஜாதகத்தில் ஆறில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்

மத்திய மத்திரியாக இருந்த ஆர் கே தவான் ஜாதகத்தில் 12ல் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்

உத்திரபிரதேச முன்னாள் எம்எல்ஏ எம்பியாக இருந்தவர்  ரேவதி ராமன் சிங் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்

சுப்ரமணிய சுவாமி  ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன் புதன் இணைந்தே இருக்கிறார்கள்.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் அரசியலில் பிரபலம் அடைவதற்கு சூரியன் புதன் இணைவானது முக்கியம் என்பது தெளிவாக தெரிகிறது,

சசிகலா ஜாதகத்தில் சூரியன் லக்னத்தில் அமர்ந்திருக்க புதன் 12ல் மறைந்திருக்கிறார். எனவே இவருக்கு அரசியல் பதவி வராது எனலாம்.

 

சசிகலா அரசியல் எதிர்காலம்  நிஜமா நிழலா ? Political future of Sasikal light or dark ? points 3

சிம்ம லக்னத்தில் பிறந்து அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் ஜாதகத்தில்  செவ்வாய் பத்தாம் இடத்து சுக்கிரன் தொடர்பினை பெற்றிருக்கிறது.

முலாயம் சிங் யாதவ் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த வீட்டு அதிபதியான சனியை செவ்வாய் பார்க்கிறார்.

பன்சிலால் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த வீட்டு அதிபதியான புதனோடு  செவ்வாய் இணைந்திருக்கிறார்.

சித்தார்த் சங்கர்  ரே ஜாதகத்தில் சுக்கிரன் செவ்வாய் வீட்டில் அமர்ந்திட செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.

சங்கர் தயார் சர்மா  ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன்  வீட்டில் அமர்ந்து சுக்கிரன் வீட்டினை பார்க்கிறார்.

நிலமணி ரௌட்ரே ஜாதகத்தில்  சுக்கிரன் 9ல் அமர்ந்திட செவ்வாய் பார்வையிடுகிறார்.

அந்துலே  ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் வீட்டில் அமர்ந்திட குரு செவ்வாய் சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.

ஆர் கே தவான் ஜாதகத்தில் பத்தில் சுக்கிரன் மாளவ்யா யோகத்தில் இருப்பதை செவ்வாய் பார்வையிடுகிறார்.

ரேவதி ராமன் சிங் ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த வீட்டதிபன் புதன் இணைவினை செவ்வாய் பெற்றிருக்கிறார்.

சுப்ரமணிய சுவாமி  ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த வீட்டதிபன் புதனை செவ்வாய் பார்வையிடுகிறர்.

சிம்ம லக்னத்தில் பிறந்த அரசியல் பிரபலங்களின் ஜாதகத்தில் செவ்வாய் பத்தாமிடத்து அதிபதி சுக்கிரன் எதாவது ஒரு வகையில் தொடர்பினை பெறவேண்டும்.

அவ்வாறு செவ்வாய் சுக்கிரன் தொடர்பினை  பெற்றால் யோகர் செவ்வாய் பத்தாமிடத்தினை மிளிர செய்து விடுகிறார்.

சசிகலா

சசிகலா ஜாதகத்தில் செவ்வாய் தனசுவில் அமர்ந்திருக்க சுக்கிரன் கன்னியில் அமர்ந்திருக்கிறார்.

சுக்கிரன் அமர்ந்திருக்கும் வீட்டதிபதியான புதனை தனசு செவ்வாய் 8ம் பார்வையாய் பார்வையிடுகிறார்.

இந்த அமைப்பானது அரசியிலில் செல்வாக்கினை தந்து விடும் எனபதால்  இவருக்கு அரசியல் செல்வாக்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது,

சிம்ம லக்னத்தில் பிறந்து அரசியல் செல்வாக்கு பெற்றவர்கள் ஜாதகத்தில்  குரு சனி நெருக்கத்தில் நடமாடிக் கொண்டிருக்கிறார்.

முலாயம் சிங் யாதவ் ஜாதகத்தில் கும்பத்தில் குரு மீனத்தில் சனி  என நெருக்கத்தில் சஞசரிக்கிறார்கள்.

பன்சிலால் ஜாதகத்தில் மீனத்தில் குரு அமர்ந்து விருச்சிக சனியை பார்வையிடுகிறார்.

சித்தார்த் சங்கர்  ரே ஜாதகத்தில் சிம்மத்தில் குரு சனி  இணைந்தே அமர்ந்திருக்கிறார்.

சங்கர் தயார் சர்மா  ஜாதகத்தில் கும்பத்தில் குரு மீனத்தில் சனி  என நெருக்கத்தில் சஞசரிக்கிறார்கள்.

.நிலமணி ரௌட்ரே கடகத்தில் குரு சிம்மத்தில் சனி  என நெருக்கத்தில் சஞசரிக்கிறார்கள்.

அந்துலே  ஜாதகத்தில் மேஷத்தில் குரு அமர்ந்து தனசு சனியை பார்வையிடுகிறார்.

ரேவதி ராமன் சிங் ஜாதகத்தில் மேஷத்தில் குரு சனி  இணைந்தே அமர்ந்திருக்கிறார்.

சுப்ரமணிய சுவாமி  ஜாதகத்தில் மீன குரு மேஷத்தில் சனி என அமர்ந்திருக்கிறார்கள்

சசிகலா அரசியல் எதிர்காலம்  நிஜமா நிழலா ? Political future of Sasikal light or dark ? points 3

சிம்ம லக்னத்தில் பிறந்த அரசியல் பிரபலங்களின் ஜாதகத்தில் குரு சனி ஆகிய பெரிய கிரகங்கள் பெரும்பாலும் நெருக்கத்தில் சஞசரிக்கிறார்கள்.

சசிகலா

சிலருக்கு 150 டிகிரி அளவிற்கு நெருக்கம் இருக்கிறது

இந்த அமைப்பானது அரசியிலில் செல்வாக்கினை தந்து விடும் எனபதால் சசிகாலா ஜாதகத்தில் குரு சனி அமைவிடம் பார்ப்போம்.

இவருக்கு குரு மிதுனத்திலும் சனி உச்ச பலத்தில் துலாத்திலும் அமர்ந்திருப்பதால் 150 டிகிரி அளவிற்கு நெருக்கம் இருக்கிறது,

இந்த அமைப்பானது இவருக்கு பாசிட்டிவான அமைப்பாகும்.

சிம்ம லக்னத்தில் பிறந்த அரசியல் பிரபலங்களுக்கு அவர்கள் பிறந்த ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்தாம் வீட்டினருகே கேது அல்லது ராகு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அமைப்பானது சசிகலா ஜாதகத்தில காணப்படுகிறது, ரிஷபம் பத்தாமிடத்திற்கு அருகே மிதுனத்தில் கேது நடமாடிக் கொண்டிருக்கிறார்.

சசிகலா ஜாதகத்தினைப் பொருத்த மட்டில் அவருடைய ஜாதகம் எப்படி சிம்ம லக்ன அரசியல் பிரபலங்களோடு தொடர்பினை பெற்றுள்ளது என பார்ப்போம்

சூரியன் புதன் இணைவானது இல்லை என்பதால் அரசியலில் மிகப் பெரிய ஆதாயம் பெறுவதற்கில்லை.

செவ்வாய் சுக்கிரன் தொடர்பிருப்பதால் அரசியலில் ஈடுபாடும் அதனால் செல்வாக்கும் பெறலாம்

குரு சனி தொடர்பிருப்பதால் அரசியலில் மற்றவர்களால் மதிக்கப்படுவார்.

இவருடைய அரசியல் எதிர்காலத்தினை  அடுத்த பதிவில் பார்ப்போம்.

No fear from Good Friend Planet for one’s Ascendant.

Check your Ascendant and who are the good friends and do goods things.

But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results. 

 For further reports regarding your future  just click  link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.