Sri Mahalakshmi Upasagar
மகான் ஜாதகம் சொல்லும் அற்புதங்கள் ? Mahan birth chart Miracles notable points 5
தமிழகத்தில் தோன்றிய மகான் காஞசி பெரியவர் என்றழைக்கப்படு ம் சந்திரசேகர சுவாமிகளின் ஜாதகத்தினை பார்ப்போம்
ஒருவர் பிறக்கும் போது அமைந்த ஜாதகம் எந்த துறையில் சிறப்பினை பெறும் என்பதை லக்னம் வைத்து கண்டு பிடித்து விடலாம்.
ஒருவரின் பிறப்பு லக்னத்திற்கு எந்த பாவம் பார்க்கப் பட வேண்டுமோ அந்த பாவத்தினை லக்னமாக கொண்டு பலன் அறியப்பட வேண்டும்.
12 லக்னங்களில் கிரகங்கள் எந்த கோணத்தில் சிறப்பினை பெறுகிறதோ அந்த துறையில் யோகம் பெற்று விடுகிறார்கள்.
மகான் காஞசி பெரியவர் ஜாதகத்தின் விவரம்
லக்னம் சிம்மம்
ரிஷபத்தில் – சூரியன் குரு புதன்
கன்னியில் – சனி கேது
விருச்சிகத்தில் – சந்திரன்
மகரத்தில் – செவ்வாய்
மீனத்தில் – சுக்கிரன் ராகு
சிம்ம லக்னத்தில் பிறந்த இவருக்கு செவ்வாய் சுக்கிரன் உச்சம் பெற்றிருக்கிறார்கள்.
லக்னாதிபதி சூரியனுக்கு கேந்திர கோணத்தில் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
சூரியனுக்கு 11ல் சுக்கிரன்
சூரியனுக்கு 9ல் செவ்வாய்
சூரியனுக்கு கோணத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதே வலிமையான அமைப்பாகும்.
எனவே செவ்வாய் வலிமையானவர் என்று எடுத்து கொள்ள வேண்டும்.
செவ்வாய் உச்சம் பெற்றதால் ருசக யோகத்தில் அதிக பலனைத் தருவார்.
12 லக்னங்களில் எதாவது ஒரு வீட்டிற்கு ருசக யோக பலத்தில் பலன்களை வெளிப்படுத்துவார் செவ்வாய்.
செவ்வாய் எந்த வீட்டிற்கு மிக மிக பலம் வாய்ந்தவராக மாறுவார்.
அதனை கண்டு பிடிக்க வேண்டும்
சிம்ம லக்னத்தின் பாக்கிய ஸ்தானத்திற்கு செவ்வாய் ருசக யோகத்தினை தருகிறார்.
சிம்ம லக்னத்தின் முக்தி ஸ்தானத்திற்கு செவ்வாய் ருசக யோகத்தினை தருகிறார்.
மகான் இவருக்கு பாக்கியம் மிக சிறப்பினை பெற்றது, பாக்கியம் சிறப்படைந்ததால் ஆன்மீகம் இவருக்கு வாழ்க்கை பாதையாயிற்று
அடுத்ததாக முக்தி ஸ்தானத்திற்கு அதிக பலம் கிடைக்கிறது.
செவ்வாய் ருசக யோகம் பெற்று பாக்கியம் ஸ்தானம் மற்றும் முக்தி ஸ்தானம் இரண்டையும் பார்வையிடுகிறார்.
இப்போது பாக்கியமா அல்லது முக்தி பலமா ?
பாக்கியாதி செவ்வாய் 6ல் அமர்ந்து முக்தியினை பார்வையிடுகிறார்.
9மிடத்தோன் 12மிடத்தினை பார்வையிடுவதால் முக்தியே பலம் பெறுகிறது,
எனவே முக்தி பலமான அமைப்பில் இருப்பதால் 12ம் வீட்டினை லக்னமாக வைத்து யோகத்தினை அளவிட வேண்டும்.
மகான் ஜாதகம் சொல்லும் அற்புதங்கள் ? Mahan birth chart Miracles notable points 5
அப்படி பார்க்கும்போது 12ம் வீடு அதாவது முக்தி லக்னமாக கடகம் வருகிறது,
முக்தி லக்னத்திற்கு லக்ன யோகர்கள் குரு செவ்வாய்.
இவர்களில் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்கிறார்.
உச்சம் பெற்ற செவ்வாய்க்கு ஐந்தில் குரு அமர்திருக்கிறார்.
முக்தி லக்னத்தின் யோகர்கள் குரு செவ்வாய் வலு பெற்றார்கள்.
முக்தி லக்னமான கடகத்திற்கு 9ல் சுக்கிரன் மாளவ்யா யோகத்தினை
பெறுகிறார்.
மாளவ்யா யோகம் பெற்ற சுக்கிரன் குருவோடு பரிவர்த்தனை பெற்றது சிறப்பான அமைப்பாகும்.
முதல் நிலை பூஸ்டிங் கிரகங்கள் சுக்கிரன் சனி
2ம் நிலை பூஸ்டிங் கிரகங்கள் குரு செவ்வாய்
பூஸ்டிங் கிரகங்கள் ஜாதகத்தில் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தால் அந்த கிரகங்கள் மிகுந்த வலிமை பெற்று விடும்.
பூஸ்டிங் கிரகங்கள் வலிமை பெற்றால் அவர்களெல்லாம் உலக புகழ் பெறுவார்கள்.
மகான் இவருக்கு பூஸ்டிங் கிரகங்கள் சனி சுக்கிரன் ஒருவருக்கொருவர் தொடர்பில் பரஸ்பர பார்வை பெற்றிருக்கிறார்கள்
மற்றொரு பூஸ்டிங் கிரகங்கள் செவ்வாய் குரு ஒருவருக்கொருவர் தொடர்பில் பரஸ்பர பார்வை பெற்றிருக்கிறார்கள்
,முக்தி ஸ்தானமான கடகம் பரிபூர்ணமாக செவ்வாய் பார்வை பெற்றிருக்கிறார்.
விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றிருக்கிறார்.
ஆனால் சந்திரன் நின்ற வீட்டு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதால் சந்திரனை நீச்ச பங்கம் பெற்று நீச்ச பங்க ராஜயோகம் பெறுகிறார்.
முக்தி தரும் சந்திரன் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றது அற்புதம்.
முக்தி ஸ்தான லக்னமே மிக முக்கியம் என்பதால் 12ம் இடம் வலுப் பெற்றதை பார்க்க வேண்டும்.
முக்தி லக்ன யோகரான செவ்வாய் மற்றொரு யோகரான குருவின் பார்வை பெற்று முக்தியினை பார்க்கிறார்.
அப்படியே முக்தி ஸ்தானாதிபதியான சந்திரனை நீச்ச பங்கம் பெற வைக்கிறார்.
முக்தி ஸ்தானதிபதி சந்திரனோடு குரு பரஸ்பர பார்வை பெற்று குரு சந்திர யோகத்தினை வெளிப்படுத்துகிறார்
மகான் ஜாதகம் சொல்லும் அற்புதங்கள் ? Mahan birth chart Miracles notable points 5
மகான்களின் ஜாதகத்தில் 3 6 8 12 இடங்கள் வலு பெறும்.
ஒருவருடைய ஜாதகத்தில் 3 6 8 12 இடங்கள் மற்றவர்களுக்கு புலப்படாத ரகஸ்யங்களை இவர்களுக்கு அடையாளம் காட்டும் இடமாகும்.
மகான் இவருடைய சிம்ம லக்னத்தில் 3ன் அதிபதி சுக்கிரன்
6ன் அதிபதி சனி
8ன் அதிபதி குரு
12ன் அதிபதி சந்திரன்
இவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பினை வைத்துக்கொண்டால் மற்றவர்கள் கண்ணுக்கு புலப்படாத ரகஸ்யங்கள் இவர்களுக்கு எளிதாக புலப்படும்.
இவருக்கு 3 ம் அதிபதி சுக்கிரனும் 6ம் அதிபதி சனியும் பரஸ்பர பார்வை பெறுகிறார்கள்.
8ம் அதிபதி குரு 6ம் அதிபதி சனி, 12ம் அதிபதி சந்திரனை பார்வையிடுவதால் தொடர்பு கிடைக்கிறது,
8ம் அதிபதியும் 6ம் அதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள்.
ஆக
இவருக்கு 3 6 8 12 அதிபிகள் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்ததால் இறைவன் கண்ணுக்கு தெரிந்தார்.
உலகம் போற்றும் மகான் நிலை பெற்றார்.
துறவு நிலை பெறுவதற்கு சனி சந்திரன் தொடர்பே காரணமாகிறது,
மகான் இவருக்கு சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்து கன்னியில் அமர்ந்த சனியின் பார்வையினை பெறுகிறார்.
சனியின் பார்வை சந்திரன் மீது விழுந்தால் முற்றும் துறந்த துறவியாவார்.
சனியின் மீதும் சந்திரன் மீதும் குருவின் பார்வை விழுவதால் அவர் முற்றும் துறந்தாலும் சகல வசதிகளுடன் கூடிய மடாதிபதி தலைவர் ஆனார்.
பத்தாம் வீட்டில் பலமமான கிரக அமைப்புகள் அமைந்து லக்னாதிபதியே தலைமையேற்றதால் மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது,
இவருக்கு மடத்தின் பொறுப்புகள் இருந்த போதிலும் சனி சந்திரன் தொடர்பால் எதன் மீதும் பற்றின்றி இருந்தார்.
ஆசைகளற்ற நிலையில் இருந்ததால் முக்தி மீது தீரா பற்று வைத்தார்.
முக்தி லக்னமான கடகத்தின் அதிபதி சந்திரன் . சந்திரனின் அதிபதி அன்னை காமாட்சி அருள் பெற்றதால் முக்திக்கு வழி கிடைத்தது.
சூரியன் சிவன் அம்சம். எனவே சிவனின் அருளையும் காமாட்சி அருளையும் எளிதாக இவரால் பெற முடிந்டதது,
இவருடைய ஜாதகத்தில் முக்தி என்னும் 12மிடம் வலு பெற்றதால் மகான் நிலை பெற்றார்.
No fear from Good Friend Planet for one’s Ascendant.
Check your Ascendant and who are the good friends and do goods things.
But be cautious about bad Planets, and they are very dangerous to give adverse results.
For further reports regarding your future just click link