கருடன்

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

கருடன் சாமி எனைக் காக்கும் சாமி – Greatest God My Garudan  Part 1

கருடன் யார் ? அவரைப் பற்றி தெரிந்ததை அறிந்து கொள்வோம்.

ஶ்ரீ நிகமாந்த மகா தேசிகர் காஞ்சியில் பிற்நதவரென்றாலும் மனதிற்கு பிடித்தது  திருவஹிந்தபுரத்தில் வாசமிருக்கும் தேவநாதனே.

காஞசி தந்த மகான் திருவஹிந்தபுரத்தில் தவமிருந்தார். தவத்தில் கருட மந்திரம் உபதேசம் பெற்றார்.

கருட மந்திர தவத்திற்கு மகிழ்ந்த கருடன் தேசிகருக்கு காட்சி கொடுத்தார்.

தேசிகருக்கு கருடன் அன்போடு கொடுத்த ஹயக்ரீவரை பூஜித்து வந்ததார்.

கருடன்

உலகில் முதல் ஹயக்ரீவர் கோவில் திருவஹிந்தபுரத்தில்தான் தோன்றியது,

கருடனைப் பற்றி உலகுக்கு அவரே எடுத்தியம்பினார்.  உலகுக்கு கருட மந்திரத்தினை கொடுத்ததும் அவரேதான்.

எவரும் கண்டிடாத வல்லமையும்  காண்போர்

பலரும் பயம் கொண்டு பணிந்திடவே எதிர்த்த

சிலரும் காணாமல் போயினரே வணங்கிடவே

மலரும் பணிந்தளித்து வேண்டுவோம் கருடனையே

கருடனின் பராக்ரமம் அறிவோம்

அடர்ந்த கானகம் வலையிட்டு பகவலவனை மறைக்கும். விண்ணில் பயணயிக்கும் சூரியனும் கண்டும் காணாது போகும் இருளினை பிரியாத கானகம்.

நீண்ட நெடிய அடர்ந்த மரங்கள் பல கரங்கள் விரிந்து பகலவன் கதிர்களை விரட்டிக் கொண்டிருக்கும் அடர்ந்த கானகம்.

கானகத்தில் ஆயிரமாயிரம் பறவைகள் பாடி மகிழ்ந்து விளையாடும். பகலவனுக்கு கானகத்தினை பார்க்க ஆசை அது முடியுமா ?

முடியும் அது எப்போதுபறவைகளுக்கெல்லாம்  அரசன் கருடன்

காடும் மறைத்த மரமும் வளர்த்த மண்ணும்

வாடும்  பறக்கையில் துணை ஒன்றினை

நாடும் செடிகொடிகள் துவண்டு விழுகையில்

பாடும் பறவைகள் பறந்து மகிழுமே கருடனை

கருடனை ஓரே பார்வையில் பார்த்தவர்கள் எவருமில்லை. நீண்ட நெடிய உருவம். அளவிடமுடியாத பருமன்.

நீண்ட விரிந்து பரந்த இருக்கும் கடல் போன்றது கருடனின் இறக்கைகள்.

கருடன் பறந்து வந்தால் அமர்ந்த மரங்கள் மண்ணைத் தொட்டு மீளும் வண்ணம் ஆடி அடங்கும்.

அருகில் உள்ள மரங்கள் பலமாக ஆடி பயம் கொள்ளும்.

இதுவரை  கானகத்தினை எட்டிப் பார்க்க முயலும்  பகலவனை விரட்டும் மரங்களின் கரங்கள் துவண்டு விழும்.

மழையின் பெரு வெள்ளம் போல் கதிரவன் கதிர்கள் கானகம் முழுவதும் பரவி பகலவன் பார்வையில் பட்டு பொன்னிறமாய் மின்னும்.

இருளில் வழி மாறி தடம் மாறி தவித்த ஆயிரமாயிரம் பறவைகள் மகிழ்ந்து கூக்குரலிடும்.

பறவைகள் பாடும் காணம் செவியில் எதிரொலிக்கும்.

கருடன் பறக்கையில் இறக்கையிலிருந்து வெளிவரும் சத்தமானது வேதங்கள் ஒலிப்பது போல் இருக்கும்.

கருடனின் இறக்கையில் நான்கு வேதங்களும் குடியிருப்பதால் வேத காணம் வெளியே தெறிக்கிறது,

விஷம் கொண்ட நாகங்கள் கருடன் அசுர வேகம் கண்டு மனம் பயந்து மறைவிடம் நாடி ஓடும். புதறதனில் மறைந்து கொள்ளும்.கருடனை கண்டு களித்தவர்கள் எவருமில்லை.

கருடனை கண்டு வணங்கியவர்கள் பயம் கொண்டதுமில்லை.

கருடனுக்கு எதனைப் பற்றியும் கவலையில்லை.  உதிக்கையிலே அவதாரமாக உதித்தவர்.

எனவேதான் அவர் இறைவனாக மதிக்கப்படுகிறார்.

 

கருடன் சாமி எனைக் காக்கும் சாமி – Greatest God My Garudan  Part 1

அப்படியென்ன அவர் அவதார புருஷரா ?

ஆம்

சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரமே அவர்.

உலகோர் மகிழ விண்ணோர் நிலை உயர மகாவிஷ்ணு கருடனாக அவதரித்து எல்லோரையும் மகிழும்படி செய்தார்.

கருடன்

யுகங்கள் அவதாரங்களை தொடர்ந்து தந்து கொண்டுதான் இருக்கின்றன.  கருடனும் அவதார  புருஷரே. அவரது அவதார நோக்கம் பிரமிப்பூட்டும்.

விண்ணும் மண்ணும் காணா அதிசயம் அவர். அவரை  காண்போர் மட்டும் வியக்கவில்லை.

தனது அவதாரத்தினை  பரந்தாமனே  கண்டு வியந்து மகிழ்ந்தார்.   

தம் அவதாரத்தின் பராக்ரமத்தினை அறிந்து உணர்ந்து தமக்கு வாகனமாக கருடனை இருக்க பணிந்தார்.

கருவிலே  யாகங்களை ஸ்பரித்து வேதங்களை ருசித்தவன் அவன். யுகங்கள் கண்ட யாக மந்திரங்களை உண்டு களித்தவன் அவன்.

தனது வல்லமையை தாய்க்கு அர்பணித்தவான்.  தாயினை எதிர்த்தவர்களை துச்சமாக கருதியவன்.

யாவரும் போற்றும் கருடன்   யாகத்தில் உருவானது எப்படி?

ஒரு மாமுனியை  காசி மன்னனும்  காணவேயுடன்

இரு மணம்நாடும் புதல்வியோடு பணிந்துநின்று

வரு மொழி  மகிழ யாசகம் கேட்டே நின்றான்

திரு முனியும் அளித்த வரமே அவதாரமே

முனிவர்களுக்கெல்லாம் தலை முனி காச்யப முனிவராகும். 

அடர்ந்த வனத்தில் அழகிய அருவியோட தென்றல் நாளும் தாலாட்டு பாட முளைத்த ஆச்ரமம்.

அந்த ஆச்ரமம்  அருகே  காச்யப முனிவர் வனத்தில் வானுயர் அக்னி வளர்த்து யாக மந்திரங்களை அக்னிக்கு ஊட்டி வளர்த்து தானும் விண்ணோர் வாழ்த்திட உயர்ந்தவர்.

அவர் முகமே அக்னியாய்  ஒளிவீசும். தினம் தினம் யாகம். இடைவிடாத மந்திரங்கள்.  

இறைவனே மயங்கி மந்திரங்களை உண்டு மகிழ்ந்தவர்.

ஒரு சமயம் அடர்ந்த வனத்தில் காசி மன்னன் படை சூழ வந்தான். மன்னனோடு அவனுடைய அழகான புதல்விகள் வந்தனர்.

பார் புகழ் காசி  மன்னன் காச்யப முனிவரை காண அவருடைய குடிலுக்கு தனது புதவல்விகளோடுவந்தான்.

மன்னன் வந்த வேளையில் மாமுனி யாகத்தில் ஆழ்ந்திருந்தார்.

மன்னனும் புதல்வியும் மன்னனுடன் வந்தவர்களும் யாகத்தின் அருகே அமர்ந்து மந்திரங்களை கேட்டனர்.

காச்யப முனிவர் வேள்வில் ஆழ்ந்திருந்தார். மந்திரங்களை விண்ணை முட்டின.  மன்னவனும் அடக்கமாக அமர்ந்திருந்தான்.

காச்யப முனிவர் வேள்வி முடிந்து  மன்னவனை கண்டு ஆசீர்வதித்தார். மன்னனோடு வந்த குடும்பத்தினரும் முனிவரிடம் ஆசி பெற்றனர்.

காச்யப முனிவர் மன்னனை பார்த்து மன்னவனே வனம் நாடி முனிவனை தேடி வந்ததெதற்கு என்ன காரணம்.

எவர் வந்தாலும் வருவோருக்கு முக்தி  பிச்சை தரும் காசி ஆளுகின்ற பார் புகழ்  மன்னன் தட்சனே..மனதில் ஏதும் குறையுள்ளதோ என்றார்

மன்னவனும் மீண்டும் முனிவரை வணங்கி… தெய்வ ரிஷிகள் இருக்கும் இடத்தில் எப்போதும் தெய்வீக மணம் வீசிக் கொண்டிருக்கும்.

நான் நாட்டின் மன்னனெற்றாலும் மன்னனுக்கே வழிகாட்டும் மாமுனிவர் தாங்களிடம்  ஆசி பெறவே வந்தேன் என்றான்.

மன்னன் விருந்துண்டு மகிழ்ந்திருந்த வேளையில் முனிவரிடம் ஓர் யாசகம் வேண்டுமென பணிந்து கூறினார்.

வழியறியா வனத்தில் வாழும் முனிவனிடம் கொடுப்பதற்கு என்ன இருக்கிறது வேந்தே?

முயன்று பெறுவது தவம். கேட்டு பெறுவது வரம்.

யாசிப்பவருக்கு மறுதலிப்பது தவறு. நாடாளும் வேந்தனுக்கு இன்னும் அனுபவிப்பதற்கு என்ன இருக்கிறது வேந்தே என்றார் முனிவர்.

மா முனிவரே நான் நாடாளும் மன்னவனெனினும் மன்னவனையே ஆளும் மகா மகரிஷி தாங்கள்.

மன்னவனால் முடியாததை மாதவத்தால் சாதித்தவர் நீங்கள்.  உலகுக்கே வழிகாட்டும் முனிவர் தாங்கள்.

தேவர்களும் வந்திங்கு சேவிக்கும் அற்புத கோவிலாய் உங்கள் ஆச்ரமத்தினை வைத்திருக்கிறீர்கள்.

கருடன் சாமி எனைக் காக்கும் சாமி – Greatest God My Garudan  Part 1

எனது எத்தனை எத்தனையோ பிறவி ஜென்ம பாவங்களை கழுவிடவே இங்கு வந்துள்ளேன். தங்களிடம் பெற்ற ஆசீர்வதத்தால் புண்ணியமடைந்தேன்.

மகிழ்ச்சி மன்னவனே..தங்கள் பதிலில் மகிழ்வடைந்தேன்..தாங்கள் என்னிடம் எதிர்பார்ப்பது என்னவென்று கூறலாமே…

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.