சசிகலா

அரசியல் யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

அதிமுக எதிர்காலம் எப்படி ? Future of AIADMK Notable points 2

அதிமுக கட்சி ஜாதகம் என்ன சொல்கிறது?

கட்சி உதயம் நாள் 17.10.1972

நேரம் 10.30 காலை

இடம் சென்னை

கட்சி உதய லக்னம் தனசு

ராசி மகரம்

தனசு லக்ன அதிபதி குரு லக்னத்தில் ஹம்ச யோகம் பெற்று பிரபல கட்சி என்பதை அடையாளம் காட்டுகிறது

லக்னத்திற்கு பாதக ஸ்தானத்தில் கெடு கிரகம் கேது அமர்ந்ததால் அந்த இடம் வலுவிழந்து எதிரிகளே இல்லை என்றாகிவிட்டதை அறிந்து கொள்ள முடிகிறது,

லக்னத்திற்கு யோகம் செய்வதற்கு தயாராக உள்ள செவ்வாய் பத்தில் திக் பலம் பெற்று பிரபல யோகம் தருகிறார்.

செவ்வாய் அரசியல் கிரகம். தனசு லக்னத்திற்கு யோகரான செவ்வாய் பத்தில் அசத்தல் அமைப்பாகும்

மற்றுமொரு லக்ன யோகரான சூரியன்  11ல் பிரகாசமாக அமர்ந்திருக்கிறார்.

சூரியனும் அரசியல்  கிரகமே

செவ்வாய் சூரியன் அரசியல் கிரகங்கள் இருவரும் பலம் பெற்றதால்தான் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடிகிறது,

6மிடத்தில் சனி அமர்ந்து எதிரிகளை வெல்லுவதற்கு கடின முயற்சிகளை கொடுத்து வெற்றிகளை சொந்தமாக்குகிறது

செவ்வாய் சூரியன் நன்மை செய்பவர்கள் வலுவாக இருக்கிறார்கள். தீமை செய்பவர்கள் நிலை என்ன என்பதை பார்ப்போம்

இந்த லக்னத்தாருக்கு தீமை தருபவர்கள் சுக்கிரன் சனி சந்திரன்

லக்னத்தின் கடும் பாபியான சுக்கிரன் சூரியன் வீட்டில் போய் சரண்டர் ஆனதால் தீமைகளை செய்ய முடியாது தவிக்கிறது, சுக்கிரனின் தீமை செய்யும் கைகள் கட்டுண்டது,

சனி மாரகத்தினை அடையாளம் காட்டும் கிரகம். அதாவது கட்சியின் ஆயுளுக்கு  தடைகளை தரக்கூடியது,

கட்சியின் வளர்ச்சி கட்சியின் பிளவு கட்சியின் தலைமைக்கு ஆபத்து என அடையாளம் காட்டும் கிரகமாக சனி வருகிறது.

சந்திரன் அட்டமாதிபதியாக வருவதால் கட்சியின் ஆயுளை அடையாளம் காட்டும் கிரகமான சந்தரன் 2ல் இருக்கிறார்.

இவர் மாரகத்தில் அமர்ந்ததால் வாக்கில் பாதகம் எனலாம்.

அதாவது கட்சியில் தவறாக பேச்சுக்கள்  பேட்டிகள் கொடுப்பதால் கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும்.

கட்சியினை தொடங்கியவர் எம்ஜிஆர்

அதிமுக

1972 தொடங்கிய கட்சி முதலில்  1973 திண்டுக்கல் இடைத்  தேர்தலில் போடடியிட்டு வெற்றி பெற்றது

1972ம் ஆண்டு கட்சி தொடங்கிய போது நடந்த  தெசை விவரங்கள்

சந்திர தெசை 25.5.1975 வரையில்

அட்டமாதிபதி தெசை என்பதால் எந்தவிதமான பெரிய மாற்றங்களை கட்சிக்கு கொடுக்க வில்லை

செவ்வாய் தெசை  26.5.1975 முதல் 25.5.1982 வரை

தனசு லக்னத்தின் மிக பெரிய யோகக்காரரான செவ்வாய் யோகங்களை இந்த காலத்தில்தான் அள்ளித் தந்தது,

1977ம் ஆண்டு மிகப் பெரிய திருப்பம்

செவ்வாய் தெசையில் குரு புக்தியில் சூரியன் அந்தரம் நடக்கும் போது இவர் தமிழக ஆட்சியினை பிடித்தார்.

30.6.1977ல் தமிழக  முதல்வர் பதவியினை ஆஇஅதிமு கட்சி பிடித்தது. எம்.ஜி.ஆர்  முதலமைச்சரானார்

அதன் பின் கட்சிக்கு ஏற்றம்தான்..1987 வரையில் அசைக்க முடியாத பலத்தில் கட்சி இருந்தது,

ராகு தெசை  26.5.1982 முதல் 25.5.2000 வரை

24.12.1987 ல் எம்ஜிஆர் மறைவு

அப்போது கட்சி ஜாதகத்தில் நடந்த தெசை விவரம் பார்ப்போம்

26.5.1982 முதல்  25.5.2000  வரை ராகு தெசை

ராகு தெசையில் சனி புக்தி  1.7.1987முதல் 7.5.1990 வரை நடந்தது

முன்னரே சொல்லியிருந்தோம் அல்லவா..சனி கட்சி ஜாதகத்திற்கு கெடுதல் தரும் கிரகம் என்று,..அப்படித்தான் நடந்தது

கட்சி தலைவரை ராகு தெசையில் சனி புக்தியில் இழந்தது,

சனி புக்தி முடிவிற்கு வந்த தேதியான 7.5.1990 வரையில் அதிமுக மீண்டெழுவேயில்லை.

7.5.1990  ராகு தெசையில் புதன் புக்தி ஆரம்பம்

புதன் கட்சி ஜாதக லக்னத்திற்கு 7 10க்குரியவர் வலுவாக 11ல் சூரியனுடன் அமர்ந்ததால் கட்சியினை எழுந்து நிற்க வைத்தார்.

1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியினை பிடித்தது, இப்போது முதல்வர் ஜெயலலிதா.

1996ம் ஆண்டு சனி தெசையில் சுக்கிரன் புக்தி வந்தபோது பழி வாங்கியது,

தனசு லக்னத்திற்கு சுக்கரன் கடுமையான தீய பலன்களை கொடுக்கக் கூடியவர். கட்சியினை தோல்வியிலிருந்து ஜாதகம் காப்பாற்றவில்லை.

அதிமுக எதிர்காலம் எப்படி ? Future of AIADMK Notable points 2

குரு தெசை  26.5.2000 முதல் 25.5.2016 வரையில்

தனசு லக்னத்திற்கு குரு ஹம்ச யோகத்தினை தருபவர் என்பதால் நன்மைகள் தேடி வந்தது,

 ஆனால் கேந்திராதி கேந்திரம் ஏறினால் கேந்திராதிபத்ய தோஷத்தினை தந்து விடுவார்.

எனவே குரு தெசையில் ஏற்ற இறக்கம் மாறி மாறித்தான் வரும்.

குரு தெசையில் குரு புக்தியில் 2001ல் கட்சி ஆட்சியினை பிடித்தது,

அடுத்ததாக குரு தெசையில் சனி புக்தி வருமே…சனி கட்சி ஜாதகப்படி கெடுதல் செய்யும் கிரகமாச்சே..

அப்படித்தான் நடந்தது

குரு தெசையில் சனி புக்தி 13.7.2002 முதல் 24.1.2005 வரையைில்

2001ல்  ஆட்சியினை கட்சி பிடித்தது,   முதலமைச்சரானார் ஜெயலலிதா,

அதிமுக

அவர்  மீது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கானது அவரது பதவியினை பறிந்ததது,

அந்த கால கட்டத்தில் கட்சி பலவிதமான வழக்குகளை சந்தித்தது, பல இன்னல்களுக்கு கட்சியினை கொண்டு சென்றது சனியேயாவார்.

சனி செய்த வேலையில் 2006 தேர்தலில் கட்சி வெற்றி பெற முடியாமல் போனது,

2011ல் சூரியன்  புக்தி வந்தது கட்சி ஆட்சியினை பிடித்தது. சூரியனும் செவ்வாயும் கட்சிக்கு நண்பர்கள்தானே

சூரியன் சந்திரன் செவ்வாய் ராகு என தொடர்ச்சியான நல்ல பலன்கள் கொடுக்கும் கிரகங்கள் புக்தி வந்தது,

இது வரை சனி புக்தியில்தான் கெடுதல் செய்தது, இப்போது தெசையே வருகிறது

சனி தெசை 25.5.2016 முதல் 26.5.2035 வரை

ஆகா சனி தெசை ஆரம்பம் என்ன செய்ய போகிறதோ ?

ராகு சனியில் எம்ஜிஆரை இழந்தது

இப்போது சனி தெசையில் சனி புக்தி 25.5.2016 முதல் 28.5.2019 வரை

5.12.2016 அன்று ஜெயலலிதாவை கட்சி இழந்தது

சனி தெசையில் சனி புக்தியில் பலவித பின்னடைவினை கட்சி சந்தித்தது,

இப்போது சனி தெசையில் புதன் புக்தியானது 29.5.2019 முதல் 5.2.2022 வரையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது

இந்த கால கட்டத்தில்தான் பொது தேர்தல் வரவிருக்கிறது

சனி தெசையில் லக்னத்தினை ஆராய்ந்து பார்ப்போம்

தெசாலக்னம் ரிஷபமாகி பத்தாம் வீட்டினை சனி பார்வையிடுகிறார்.  சனிக்கு 2 5 அதிபதியான புதன் 6ல் மறைந்துள்ளார்.

எனவே சனி தெசையின் புதன் புக்தி காலமான 5 .2.2022 வரை கட்சிக்கு நெருக்கடிகள் இருக்கும்.

ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே காணப்படுகிறது,

அதிமுக எதிர்காலம் எப்படி ? Future of AIADMK Notable points 2

சனி தெசையில் சுக்கிர புக்தியானது 17.3.2023 முதல் 16.5.2026 வரையில் நடைபெறும் காலத்தில் கட்சியில் பிளவு ஏற்பட்டு கட்சியிலிருந்து  சட்டமன்ற உறுப்பினர்கள் விலகுவார்கள்.

ஆனால் 2026ல் சனி தெசையில் சூரிய புக்தி வரும் போது ஆட்சியினை பிடிப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.