லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar
மகரம் சாதிக்குமா ? –Capricorn competitive planets 2
மகரம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்
லக்னத்தின் அதிபதி சனி
மகரம் மாணிக்கமாக சாதிக்குமா என்று பார்ப்போம். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் குரு இவர்களுக்கு முகம் திருப்பிக் கொள்கின்ற நிலை.
தேவ குருவின் உதவியின்றி அசுர குருவின் உதவியோடு சாதிக்க வேண்டும். இது எப்படி ?
சனி நிர்வகிக்கும் வீடு 1 2
லக்னத்தின் 1ம் – 2ம் வீட்டு அதிபதியான இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுடைய 2ம் வீட்டின் குணங்களை கொண்டவர்கள்.
சனி லக்னாதிபதி என்பதால் சுயமாக உழைத்து முன்னுக்கு வருபவர்களாகத்தான் இருப்பார்கள்.
2மிடத்து அதிபதியாக சனி வருவதால் கடுமையான உழைப்பால் பணம் ஈட்டுவீர்கள்.
கடும் முயற்சியில் குடும்பத்தினை நடத்திச் செல்வதிலும் திறம்பட செயல்படுபவர் என்றே குறிப்பிடலாம்.
லக்னத்திற்கு சனி 1ம் வீட்டில் ஆட்சி பெற்றால் அல்லது 10மிடத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் கிடைக்கிறது.
இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் சனி சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.
ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று விடுகிறது;
சனி இவர்களுக்கு தனசு மீனம் மேஷம் துலாம் மிதுனம் மகரம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
குரு நிர்வகிக்கும் வீடு 3 – 12
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் 3மிடம் என்னும் சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.
இவர்கள் ரொம்ப யோசித்து முடிவெடுத்து சொன்னாலும் மற்றவர்கள் இவர்கள் யோசனையினை ஏற்பதற்கு தயங்குவார்கள்.
குரு விரையாதிபதயாகவும் வருவதால் இவர்கள் செலவிடுவதில் கொஞசம் யோசிப்பார்கள்.
இவர்கள் ஆன்மீக வழியில் அதிக செலவிடுதலை மேற்கொள்வார்கள்.
லக்னத்திற்கு குரு 7மிடத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் கிடைக்கிறது.
இந்த யோகம் ஆன்மீக நாட்டத்தினை கொடுத்து ஆன்மீக குருவாக மாற்றும்.
குரு இவர்களுக்கு தனசு மீனம் மிதுனம் சிம்மம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 4 – 11
லக்னத்திற்கு 4 மற்றும் 11ம் அதிபதி செவ்வாய்
இவர்கள் வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆனால் செவ்வாய் இவர்களுக்கு முன் கர்மா கிரகம் என்பதால் அதிக விலை கொடுத்து சொத்துக்களை வாங்கி கர்மாவினை கழிக்க நேரிடும்
11ம் இடம் முன் கர்மா வீடென்பதால் மற்றவர்களுக்காக சொத்துக்களை வாங்கி கொடுப்பதும் நடக்கும்.
செவ்வாய் இவர்களுக்கு மேஷம் விருச்சிகம் ரிஷபம் மிதுனம் கன்னி ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 5 – 10
லக்னத்திற்கு 5 மற்றும் 10ம் அதிபதி சுக்கிரன்
கேந்திராதிபதியாகவும் கோணாதிபதியாகுவும் வரும் சுக்கிரன் அதி யோகர்.
பூர்வபுண்ணியத்தினை அடையாளம் காட்டும் இடமான ரிஷபம் மிக முக்கியமான ஆன்மீகம் விளக்கம் தருமிடமாகும். பிள்ளைகள் பற்றிய தெளிவான காட்டுதல்களையும் குறிக்குமிடமாகும்.
இந்த லக்னக்கார்களின் பிள்ளைகள் தொடர்பான கல்வி செலவினங்கள் அதிகமேற்படும். பொதுவாக பிள்ளைகள் திருமணம் கல்வி மேற்படிப்பு என செலவிடவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.
பத்தாமிடம் இவர்களுக்கு கல்வி தொடர்பான நிறுவனங்கள் வாகன நிறுவனங்கள் சுக்கிரன் தொர்டபான ஆடம்பர நிறுவனங்கள் தொடர்புயை இடங்களில் பணி அமைந்து விடும்.
லக்னத்திற்கு 5ம் வீட்டில் அல்லது 10ம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் கிடைக்கிறது.
சுக்கிரன் இவர்களுக்கு மேஷம் விருச்சிகம் ரிஷபம் துலாம் மீனம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம் சாதிக்குமா ? –Capricorn competitive planets 2
புதன் நிர்வகிக்கும் வீடுகள் 6– 9
லக்னத்திற்கு 6 மற்றும் 9ம் அதிபதி புதன்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ன் கடுமையான கர்மா கிரகமாகும்.
எல்லா லக்னக்காரர்களும் 8 மற்றும் 11ம் அதிபதியானவர் முன் ஜென்ம கர்மா என்ன என்பதையும் கர்மாபடி என்ன இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதையும் கூறும் இடமாகும்.
பாக்கியம் என்னும் சொத்துக்கள் நிலங்கள் வீடுகள் என அனைத்து சுகங்களும் வரும். ஆனால் முன் கர்மா கிரகமான புதன் தொடர்பினை பெறுவதால் கர்மா தொடர்புடைய சொத்துக்கள் வரும்.
இவர்களுக்கு முன் கர்மாபடி பிறர் சொத்துக்கள் திடீரென வந்து சேரும். சிலர் சொத்துக்களை பினாமி பெயரில் வாங்கி மற்றவர்களுக்கு கர்மா படி உதவிட நேரிடும்.
புதுன் இவர்களுக்கு ரிஷபம் கன்னி துலாம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
சந்திரன் நிர்வகிக்கும் வீடு 7
லக்னத்திற்கு 7ம்அதிபதி சந்திரன்
களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி சந்திரன் என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுக்கும். துணையை நேசிப்பவராகவும் காதல் மணத்தில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்கள்.
சந்திரன் ஒரு சலன கிரகம் என்பதால் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.
இவர் மாரகாதிபதியாகவும் வருவதால் இவரிடம் கவனமமாகத்தான் இருக்க வேண்டும்.
சந்திரன் இவர்களுக்கு ரிஷபம் கன்னி துலாம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
சூரியன் நிர்வகிக்கும் வீடு 8
லக்னத்திற்கு 8ம் வீட்டு அதிபதி சூரியன்
சூரியன் முன் கர்மா வீடான 8ம் இடத்திற்கும் சொந்தமாக வருவதால் இவர்களுடைய தந்தை வழி முன் கர்மா படி தீர்க்க வேண்டிய கர்மாவிற்காக இவர்களது தந்தையாக வந்து கர்மாவினை கழிக்க நேரிடும்.
இவர்களுக்கு குடும்ப வழி கர்மாவும் இணைந்தே இருக்கும். இந்த லக்னக்காரர்கள் குடும்ப பொறுப்பு மொத்தமும் தன் கையில் எடுத்துக் கொள்வதையும் பார்க்க முடியும்.
சூரியன் இவர்களுக்கு தனசு மீனம் மிதுனம் சிம்மம் ஆகிய வீடுகளில் அமர்ந்தால் நற்பலன்கள் கிடைக்கும்.
மகரம் சாதிக்குமா ? –Capricorn competitive planets 2
கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்
இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் புதன் .
இவர்கள் வலிமை பெற்றால் வலுத்த யோகம் கிடைத்து விடும். ஆடம்பரமான சொகுசு நிறைந்த பணிகளில் ஆர்வமிருக்கும்.
கிரகங்கள் வலு வடைந்டதால் பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்