லக்ன யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
சீனா இந்தியா மீது போர் தொடுக்குமா ? Will China attack India points 5
சீனாவின்வின் தந்திரமான நடவடிக்கை உலகத்தில் எவருக்கும் புரியவில்லை.
இந்தியா சீனா எல்லையில் இந்தியாவை எதற்காக படைகளை குவித்து வைத்து மிரட்டுகிறது.
சீனாதான் உலக மக்கள் அனைவரும் பாதித்திருக்கிற கொரானாவினை கொடுத்ததாக நம்பப்படுகிறது.
சீனா உலகிற்கு சீதனமா கொடுத்த கொரானாவினை கட்டுபடுத்த எந்த நாட்டாலும் முடியவில்லை. முயன்று கொண்டு இருக்கிறார்கள்.
எல்லா நாடுகளும் திணறிக் கொண்டிருக்கிறது, இந்தியாவின் நிலைமையோ இன்னும் மோசம். மத்தளத்துக்கு ரெண்டு பக்கம் இடி என்பார்களே
அது போலத்தான்.
சீனா கொடுத்த கொரானாவினை தடுப்பதற்கு மிகப் பெரிய போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது,
மறு பக்கம் சீனா எல்லையில் படைகளை குவித்து மிரட்டிக் கொண்டிருக்கிறது
இந்தியாவின் நிலையோ தர்மசங்கடம் ஒரு பக்கம் கொரானாவுடன் போராட்டம் மறுபக்கம் சீனாவுடன் போராட்டம். இரண்டு விஷயங்களுமே பொருளாதாரத்தினை மிக அதிக அளவில் பாதித்துள்ளது என்பதுதான் உண்மையான நிலை
சீனாவின் ஜாதகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்
சீனா உதயம் ஆனது 1.10.1949
பிறந்த நேரம் 15.15 மணி
இடம் பீகிங்
பிறப்பு லக்னமாக மகரம் வருகிறது
லக்னாதிபதி சனி எட்டில் சிம்மத்தினை நாடிச் சென்று மறைந்து நின்றதால் தான் ஒரு புரியாத தேசம் என சொல்கிறது,
எப்போதும் தனது நடவடிக்கைகள் மர்மங்கள் நிறைந்தது என்பதை கூடுதலாக சொல்கிறது
லக்னத்திற்கு 3மிடமான மீன அதிபதி ஆசைகளை அடையாளம் காட்டும் வீடாகும்.
லக்னத்திற்கு 12மிடமான தனசு அதிபதி ஆசைகளை விரிந்து பரந்த எல்லைகளை அடைய ஆசைப்படுவதை காட்டும் வீடாகும்.
12ல் குரு அமர்ந்த ஆசைகள் விரிந்து பேராசையானதால் அடுத்த நாடுகளை அடக்கியாள வேண்டுமென்ற எண்ணத்தினை கொடுக்கிறது.
லக்னத்தில் சந்திரன் 7ல் செவ்வாய் என பரஸ்பர பார்வை சீனாவின் நேர்மையற்ற குணத்தினைக் காட்டுகிறது.
சனி செவ்வாய் தொடர்பானது தவறான எண்ணங்களை கொடுக்கும். சனி செவ்வாய் ஒரே இடத்தினை பார்வையிட்டால் அந்த இடம் பாதிப்படையும்.
லக்னத்தின் 2மிடத்திற்கு சனி செவ்வாய் இருவரின் பார்வையும் பதிவதால் சீனாவின் வார்த்தைகளில் பொய்யும் நயவஞசகமும் இருப்பதை சொல்கிறது
ஜாதகத்தில் லக்னத்திற்கு வந்து அமர்ந்த சுக்கிரன் பஞசமகா புருஷ யோகத்தில் ஒன்றான மாளவ்யா யோகம் தருகிறது,
இந்த ஒரு யோகத்தினை வைத்துதான் சீனா வலுவான பொருளாதாரத்தினை பெற்றிருக்கிறது.
ஜாதகத்தில் மகர லக்னத்திற்கு 9ல் புதன் கன்னியில் உச்சம் பெற்றது மற்றுமொரு அற்புதமான அம்சமாகும்.
கன்னியில் புதன் உச்சமடைந்ததால் பஞசமகா புருஷ யோகத்தில் ஒன்றான பத்திரை யோகம் கிடைத்து பொருளாதார வலுவினை அதிகப்படுத்தியது,
ஜாதகத்தில் புதன் வலிமையாக இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
சுக்கிரன் புதன் பலமாக இருப்பதால்தான் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் பெறுவதுடன் கையிறுப்பும் அதிகரித்தது,
சீனா எல்லைகளை அபகரிப்பதை விடுத்து தன் நாட்டு பொருளாதார முன்னேற்றத்தினை கவனித்ததாலே விரையில் வல்லரசாகி விடலாம்.
அழிவினை தானே தேடிக் கொள்வதுதான் கெடு புத்தியுள்ளோனுக்கு கிடைத்த வரமாகும்.
சீனா இந்தியா மீது போர் தொடுக்குமா ? Will China attack India points 5
இந்தியாவுடன் போரிடுமா ?
1962 ம் ஆண்டு நடந்த இந்தியா மீது சீனா போர் தொடுத்த போது சீனாவிற்கு என்ன தெசை நடந்தது.
செவ்வாய் தெசையில் சனி புக்தியில் சந்திர அந்தரம் நடந்த போது இந்தியாவின் மீது போரினை தொடுத்தது
செவ்வாய் – சனி – சந்திரன் கூட்டணி போர் குணத்தினை காட்டியது,
செவ்வாய் சந்திரன் பரஸ்பர பார்வை கெடுதல் புத்தி கொடுத்தது
செவ்வாய் சனியின் பார்வை கும்பத்தில் பதிவது பாதிப்பினை தரும் என்று முன்னரே சொல்லியிருந்தோம்
செவ்வாய் சனியின் பார்வையானது கும்பத்தில் விழுகிறது, கும்பமானது சீன நாட்டிற்கு மேற்கு திக்கினை அடையாளம் காட்டும்.
எனவே சனி செவ்வாய் பார்வை பதிந்த மேற்கு திக்கில் தனது கெடு எண்ணத்தினை செலுத்தியது,
இப்போது சீனாவிற்கு என்ன தெசை நடக்கிறது
சீனாவின் ஜாதகப்படி புதன் தெசை 25.9.2019 முதல் 24.9.2036 வரை நடைபெற இருக்கிறது,
புதன் தெசை சீனாவினை பொருத்த மட்டில் நல்ல தெசைதான்
ஆனால் புதன் 8மிடத்து அதிபதி சூரியன் இணைவினையும் கேது இணைவினையும் ராகுவின் பார்வையினையும் பெற்றிருக்கிறது,
கடந்து சென்ற சனி தெசையில் அதாவது கடந்த 19 ஆண்டுகளாக பிரபல யோகத்தினை பெற்றது.
சனி துலாம் மற்றும் ரிஷப வீடுகளை பார்த்ததும் சுக்கிரனை சனி பார்வையிட்டதால் பூஸ்டிங் கிடைத்த சுக்கிரன் யோகங்களை அள்ளி கொடுத்தான்
ஆனால் இப்போது புதன் சுபர் பார்வை எதுவும் பெறவில்லை
புதன் தீய கோள் கேது ராகு இணைவினை பெற்றது பாதிப்பு தரும்
அட்டமாதிபதி சூரியன் இணைவானது தடைகளை சந்திக்க வைக்கும்.
போர் குணம் வருமா ?
புதன் தெசையில் புதன் புக்தி 25.9.2019 முதல் 202.2022 வரையில்
புதன் – புதன் – சந்திரன் அந்தரம் 25.9.2020 முதல் 8.12.2020 வரை
புதன் – புதன் – செவ்வாய் அந்தரம் 9.12.2020 முதல் 28.1.2021 வரை
புதன் தெசா லக்னம் என்ன சொல்கிறது ?
புதன் லக்னத்திற்கு கடுமைகள் அதிகம் செய்யக் கூடிய செவ்வாய் அந்தரம் 9.12.2020 முதல் 28.1.2021 வரை நடைபெற இருக்கிறது,
அந்த காலத்தில் சீனாவின் மூர்க்கத்தனம் வெளிப்படும்.
சீனாவின் அண்டை நாடுகளுடன் போரினை சிறிய அளவில் செய்ய துணியும்.
புதன் புதன் செவ்வாய் காலமான 9.12.2020 முதல் 28.1.2021 வரை சீனாவின் கெடு புக்தி விபரீதமான எண்ணங்களை சீனாவிற்கு கொடுக்கும்.
அந்த காலத்தில் இந்தியா மீது சிறிய அளவில் போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது
சீனா இந்தியா மீது போர் தொடுக்குமா ? Will China attack India points 5
சீனாவின் எதிர்காலம் எப்படி ?
புதன் தெசை மறைவிட அதிபதி சூரியனோடு இணைவினை பெற்றதால் உலக நாடுகளின் தடைகளை எதிர் கொள்ள நேரிடும். அதனால் கடும் பாதிப்பினை சீனா சந்திக்கும்.
லக்னாதிபதி சனி புதனுக்கு 12ல் மறைவுற்றதால் இந்த காலத்தில் சீனா தனிமை படுத்தப்படும்.
நடைபெற இருக்கும் புதன் தெசையில் ஆடும் ஆட்டம் அனைத்தும் ஆடி அடி பட்டு உதைபட்டு பின் அடங்கும்.
ஆனாலும் புதன் புதன் செவ்வாய் காலமான 9.12.2020 முதல் 28.1.2021 வரை போர் சிந்தனைகள் எழுந்தாலும் அதன் பின்னர் அதன் ஆட்டம் அடங்கும்.
பெப்ரவரி 2021க்கு பின் போர் எண்ணங்கள் குறையும்.
போர் எண்ணங்களை கொடுக்கும் கிரகங்களான சனி செவ்வாய் பார்வையானது பத்தாம் வீடு 2ம் வீடு என விழுவதால் அந்த பார்வை நிரந்தரம்.
உலக நாடுகளுக்கு சீனா ஒரு நிரந்தர தொல்லைதான்
அக்டோபர் 21க்கு பின் பெப்ரவரி 22க்குள் சீனாவின் தலைமை மாறும்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்