இந்தியா

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

இந்தியா போரினை சந்திக்குமா ? Will India Face War Victory Secrets 10

நம் அண்டை நாடுகள் பாகிஸ்தான் சீனா எப்போதுமே எதிரிகளாகவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன.

அண்டை நாடுகளுடன் நடைபெற்ற முக்கியமான போர்கள்

1962ம் ஆண்டு சீனாவுடன் போர்

1965ம் ஆண்டு  பாகிஸ்தானுடன் போர்

1967ம் ஆண்டு  சீனாவுடன் போர்

1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர்

1999ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர்

1962ம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடன் நடந்த போரில் பின்னடைவினை சந்தித்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போர்களிலும் வெற்றியினை பெற்றது,

எந்த ஒரு விஷயத்திற்கும் போர் ஒரு தீர்வாகாது.

ஆனாலும் சில சமயம் போரினை தவிர்க்க முடியாது போய்விடுகிறது.

இந்தியா

 நம் நாட்டின் ஜாதகம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்

நம் நாடு  உதயம் ஆனது  15.8.1947

பிறந்த நேரம்   இரவு  12.01 மணி

இடம் டெல்லி

பிறப்பு லக்னமாக  ரிஷபம் வருகிறது

லக்னாதிபதி  சுக்கிரன் 3ல் வலிமையாக அமர்ந்திருக்கிறார்.

3மிடத்தில் சந்திரன் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கிறார்

3மிடத்தில் சனி சுக்கிரன்ட சூரியன் ஆகியோரும் இணைந்துள்ளனர்

2மிடத்தில் செவ்வாய் அமர்ந்து 5மிடம் 8மிடம் 9மிடம் பார்வையிடுவதால் போர்களை சந்திக்க வேண்டியதாகிறது

ரிஷபத்தில் ராகு யோகத்தினை தரும் ராகு ஆகும்

6ல் குரு விபரீத யோகத்தினை வெளிப்படுத்தும் கிரகமாகும்

கிரகங்கள் அமைந்திருக்கும் நிலை யோகம் தரும் வண்ணமே இருக்கிறது

ஒரு ஜாதகத்தில் பூஸ்டிங் கிரகங்கள் வலிமை கொடுக்கும்

பூஸ்டிங் கிரகங்கள் எனப்படும் யோகம் இருந்தால் ஒரு ஜாதகம் மிக உன்னதமான சிறப்பினை பெறும் எனலாம்.

இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சனி இணைவானது கடகத்தில் இரு ப்பது பிரமாதமான அமைப்பாகும்.

இந்த அமைப்பானது இந்தியாவின் நுண்ணறிவானது உலகோர் பாராட்டும் நிலையினை பெறும் அமைப்பாகும்.

டெக்னாலஜி  துறையில் அபாரமான திறமையினை வெளிக் காட்டும்

குரு துலாத்தில் அமர்ந்து செவ்வாயினை பார்வையிடும் அமைப்பானது பூஸ்டிங் யோகமாகும்.

இந்த யோகமானது மற்றவர்களை அழிக்கும் யோகமாகும்.

வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்த செவ்வாய் குருவின் பார்வை வாக்கு பலத்தினை காட்டுகிறது

இப்போது இந்தியாவிற்கு என்ன தெசை நடக்கிறது

நம் நாட்டின்  ஜாதகப்படி சந்திர   தெசை  12.9.2015 முதல் 11.9.2025 வரை நடைபெற இருக்கிறது,

சந்திர தெசை இந்தியாவினை பொருத்த மட்டில் நல்ல தெசைதான்

3மிடத்து சந்திரன் ஆட்சி பலம் பெற்று 9மிடத்தோடு தொடர்பினை பெற்றதால் இந்தியாவின் மீண்டெழும்

சந்திரன் சனி சுக்கிரன் சனி இணைவிருப்பதால் இந்த தெசை முழுவதும் நல்ல பலன்களாக நடைபெறும்

நம் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்

2025 வரையில் சந்திர தெசை நடந்து முடிந்த பின் செவ்வாய் தெசை.

அடுத்த 7 வருடங்களுக்கு அதாவது 2032 வரையில் நடைபெற இருக்கிறது,

இந்தியாவிற்கு செவ்வாய் தெசையானது சற்று கடுமையான கால கட்டமாகவே இருக்கும்.

அந்த காலத்தில் போர்களை சந்திக்க வேண்டி வரும். சில இழப்புகள் எதிர்நோக்கும்.

பொருளாதாரத்தில் கடுமையான வீழ்ச்சி சந்திக்க நேரிடும்

2032க்கு பின் பாரதம் மீண்டெழும்

2032 முதல் 2050 வரையிலான ராகு தெசையில் உலக அளவில் வல்லரசு நாடாகும்.

இந்தியா போரினை சந்திக்குமா ? Will India Face War Victory Secrets 10

1962 ம் ஆண்டு  போரின் போது தெசை விவரம்

1962ம் ஆண்ட நடந்த   சீனா போரின் போது இந்தியாவிற்கு சனி  தெசையில் ராகு புக்தியில் சந்திர அந்தரம்.

சனி – ராகு – சந்திரன்  கூட்டணி

ஜாதகத்தில் யோகங்களை தரக் கூடிய இடங்கள் 5மிடம் மற்றும் 9மிடமான பாக்கிய ஸ்தானம்.

இவ்விரு இடங்கள் மீது சனி செவ்வாய் இருவரின் பார்வையும் விழுகிறது

சனி செவ்வாய் எங்கு பார்த்தாலும் அந்த இடம் பாதிப்படையும்.

சனி தெசையினை பற்றி சொல்ல வேண்டுமானால் சனி கடகத்தில் அமர்ந்திருந்தாலும் தெசா லக்ன பாதகாதிபதியான சுக்கிரன் தெசையினை சிரமத்துக்குள்ளாக்குவார்

1965 ம் ஆண்டு  போரின் போது தெசை விவரம்

1965ம் ஆண்டு நடந்த   பாகிஸ்தான் போரின் போது இந்தியாவிற்கு சனி  தெசையில் குரு புக்தியில் ராகு அந்தரம்.

சனி – குரு – ராகு   கூட்டணி

இந்த முறை ரிஷப லக்னத்தின் விரைய பாவத்தினை சனி குரு பார்வையிட்டதால் இந்தியாவிற்கு போரினால் கடும் செலவினம் ஏற்பட்டது,

ஆனால் போரில் வெற்றி பெற்றது,

காரணம் 6ல் உள்ள குரு சுக்கிரனின் பாதக தன்மையினை வென்றிட உதவியது,

1971 ம் ஆண்டு  போரின் போது தெசை விவரம்

1971ம் ஆண்டு நடந்த   பாகிஸ்தான் போரின் போது இந்தியாவிற்கு புதன் தெசையில் சுக்கிரன் புக்தியில் கேது அந்தரம்.

புதன் – சுக்கிரன் – கேது   கூட்டணி

இந்த முறை ரிஷப லக்னத்தின் பாக்கய பாவத்தினை சனி சுக்கிரன் கேது செவ்வாய் பார்வையிட்டதால் இந்தியாவிற்கு போரினால் கடும் செலவினம் ஏற்பட்டது,

இந்தியாஆனால் போரில் வெற்றி பெற்றது,

காரணம் 5மிடத்து புதனின் உதவியால் போரினை வென்றிட உதவியது,

சந்திர தெசா லக்னம் என்ன சொல்கிறது ?

இப்போது இந்தியாவிற்கு சந்திர தெசை நடந்து கொண்டிருக்கிறது

இந்தியாவின் ஜாதகப்படி சந்திர   தெசை  12.9.2015 முதல் 11.9.2025 வரை நடைபெற இருக்கிறது

சந்திர தெசையில் சனி புக்தி 13.12.2019 முதல் 13.7.2021 வரையில் நடைபெறும்

சந்திரன் – சனியில் – சுக்கிரன்  அந்தரம் 7.7.2020 முதல் 11.10.2020 வரை

சந்திரன் – சனியில் – சூரியன்  அந்தரம் 12.10.2020 முதல் 8.11.2020 வரை

சந்திரன் – சனியில் – சந்திரன்  அந்தரம் 9.11.2020 முதல் 7.12.2020 வரை

சந்திரன் – சனியில் – செவ்வாய்  அந்தரம் 8.12.2020 முதல் 30.1.2021 வரை

வருகின்ற காலத்தில் இந்தியா சந்திக்க உள்ள கிரக தெசையின் படி  பார்க்கும் போது சந்திரன் சனியில் செவ்வாய் சற்று பின்னடைவான பலன்களை கொடுக்கும்.

எனவே சந்திரன் சனி செவ்வாய் இணையும் காலத்தில் சீனா கடும் நெருக்கடிகளை இந்தியாவிற்கு கொடுக்க வாய்ப்புள்ளது,

இந்தியா போரினை சந்திக்குமா  என்றால் சந்திக்கும். அது 8.12.2020 முதல் 30.1.2021 காலத்தில் நடக்கும்.

சிறிய அளவிலான போர் என்றாலும் 29.12.2020 முதல் 3.1.2021 வரையலான 6 நாட்கள் மிக மிக கடுமையான நாட்களாக கருத வேண்டியுள்ளது,

இந்தியா போரினை சந்திக்குமா ? Will India Face War Victory Secrets 10

இருப்பினும் நம்நாடு போரை விரும்பாது,

ஒரு போரினால் வெற்றிகள் சொந்தமானாலும் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பினை ஈடு செய்ய பல ஆண்டுகள் ஆகும்.

ஒரு நல்ல கிரகத்தினைக   கண்டு பயமில்லை.

எதிரி கிரகத்தனைக்  கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஜாதகரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.