battle black blur board game

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

கிங்  அமித்ஷா வெல்லுவாரா கரோனா – Greatest King Amitsha Boosting Planets 2

இந்திய அரசியலில் சமீப கால அரசியலில் வேகமாக முன்னேறி வரும் அமித்ஷா ஜாதகத்தினை ஆராய்வோம்;

கிங் அமித்ஷா வெல்லுவாரா கரோனாவினை ?

என்ன நடந்தது அவருடைய ஜாதகத்தில்

கன்னி லக்னத்தில் பிறந்த இவருக்கு கிரகங்களின் அமைவிடத்தினைப் பார்ப்போம்

கிங்

2மிடம் துலாத்தில் சூரியன் புதன்

4மிடம் தனசுவில் கேது

6மிடம் கும்பத்தில் சனி

8மிடம் மேஷத்தில் சந்திரன்

9மிடம் ரிஷபத்தில் குரு

10மிடம் மிதுனத்தில் ராகு

11மிடம் கடகத்தில் செவ்வாய்

12மிடம் சிம்மத்தில் சுக்கிரன்

ஜாதகத்தில் காணப்படும் ராஜயோகங்கள்

சூரியன் நீச்ச பங்க ராஜயோகம்

செவ்வாய் நீச்ச பங்க ராஜயோகம்

சந்திரன் செவ்வாய் பரிவத்த்தனை யோகம்

சூரியன் சுக்கிரன் பரிவத்த்தனை யோகம்

ஜாதகத்தில் காணப்படும்  விபரித ராஜயோகங்கள்

செவ்வாய் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறது

சூரியன் நீச்சம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கிறது

இவருடைய ஜாதகத்தில் மறைவிடங்களான 3 6 8 12 அதிபதிகள் வலுப் பெற்ற அதி விபரீத ராஜயோகத்தினை தருகிறது

3ம்  8ம்  மறைவிட வீட்டின் அதிபதி செவ்வாய்

6ம் மறைவிட வீட்டின் அதிபதி சனி

12ம் மறைவிட வீட்டின் அதிபதி சூரியன்

அரசியலில் வெற்றி பெற யார் துணை புரிந்தார்கள்

சூரியன் செவ்வாய் பலம் பெற வேண்டும். இவருக்கு சூரியன் செவ்வாய் ராஜயோகம் பெற்றிருக்கிறார்கள்.

அது போதுமா ?

6மிடம் வெற்றிகளை குவிக்கும் இடமாகும்

கன்னி லக்னத்திற்கு 6மிடத்தோன் சனி 6ல் வலுவாக இருக்கிறார்.

6ம் வீட்டிற்கு 6ல் செவ்வாய் வலுவாக இருக்கிறார்

கன்னிக்கு 6ம் வீடான கும்பத்திற்கு  6ம்கடகத்தில் செவ்வாய் வலுவாக இருக்கிறார்.

கன்னிக்கு 6ம் வீடான கும்பத்திற்கு  6ம் வீடான கடகத்திற்கு 6ல் கேது
வலுவாக இருக்கிறார்

கேதுவிற்கு 6ல் குரு அமர்ந்திருக்க அந்த குருவிற்கு 6ல் சூரியன் புதன் அமர்ந்திருக்க 6மிடம் வலுவான அஸ்திவாரம் கொண்டுள்ளது.

6மிடத்திற்கு தொடர்ச்சியாக 6மிடங்கள் கிரகங்கள் இருந்தால் இவர்களுக்கு போராட்டம் என்பது இணிக்கும் விஷயமாக இருக்கும்.

ஒருவரை எதிர்க்க முடிவெடுத்து விட்டால் அதனை முடித்து விட்டுதான் அடுத்த வேலையினைப் பார்க்கும் குணாதிசியம் கொண்டவர்கள்.

பொதுவாக ஒரு கிரகம் யோகம் பெற்றால் நல்ல பலன்கள் ஒருவருக்கு கிடைக்கும்.

ஆனால் ஓரு கிரகமானது கெட்டு நீச்சம் பங்கம் பெறும் போது ராஜயோகம் கிடைக்கும்

ஓரு கிரகமானது கெட்டு நீச்சம் பங்கம் பெற்று பரிவரித்தனை அடையும்போது  விபரீத ராஜ யோகம் கிடைக்கும்.

அப்படித்தான் இவருடைய ஜாதகத்தில் செவ்வாய் விபரீத ராஜ யோகம் தருகிறார்.

கிங்

அப்படித்தான் இவருடைய ஜாதகத்தில் சூரியன் விபரீத ராஜ யோகம் தருகிறார்.

கிங்  அமித்ஷா வெல்லுவாரா கரோனா – Greatest King Amitsha Boosting Planets 2

பூஸ்டிங் கிரகங்கள்

ஒருவருடைய ஜாதகத்தில் பூஸ்டிங் கிரகங்கள் இருந்தால் அந்த கிரகங்கள் ஜாதகரை மிக உயரமான இடத்திற்கு தடையின்றி கொண்டு சென்று விடும்.

பூஸ்டிங் கிரகங்கள் எவை எவையென்று தெரிந்து கொள்வோம்

பூமிக்கு வெகு அருகாமையில் சூரியனை சுற்றி வரும் இரண்டு கிரகங்கள் அதாவது சுக்கிரன் செவ்வாய் பூஸ்டிங் கிரகங்கள் ஆகும்.

இந்த இரண்டு கிரகங்களிலிருந்து வரும் அதிர்வலைகளே பூமியில் வாழும் மனிதர்களை தாக்கி நல்ல பலன்களையே தீய பலன்களையோ ஏற்படுத்துகின்றன.

சுக்கிரன் ஆண்களை அடையாளம் காட்டும் கிரகமாகும்

செவ்வாய் பெண்களை அடையாளம் காட்டும் கிரகமாகும்

கிங்

சனியின் அதிர்வலைகளானது தனது நண்பன் சுக்கிரன் மூலம் பூமியிலிருப்பவர்களை  வந்தடைகிறது,

சுக்கிரன் பெண்களைக்  காட்டிலும் ஆண்களுக்குண்டான பலன்களை கொடுக்கிறது,

சுக்கிரன் ஆண்களைக்  காட்டிலும் பெண்களுக்குண்டான பலன்களை கொடுக்கிறது.

பூஸ்டிங் சுக்கிரன்

சனி சுக்கிரனோடு எந்தவிதத்திலாவது தொடர்பு கொண்டால் பூஸ்டிங் அதாவது கிரக ஊக்குவிப்பு நடைபெற்று சுக்கிரன் பலம் பெற்று விடும்.

இவருடைய லக்னம் கன்னியாகி கன்னிக்கு அதி யோகரும் கோணாதிபதியுமான சுக்கிரன் பிரபல யோகத்தினை செய்யக் கூடியவர்

12ம் இடத்தில் அரசியல் கிரக வீட்டில் அமர்ந்து பலம் பெறுகிறார்

கன்னி லக்னத்தின் அதி யோகரான சனியின் பார்வையினை பெறுகிறார்.

சனி சுக்கிரனை பார்த்தாலோ தொடர்பு கொண்டாலோ அற்புதமான பலன்களை எதிர்பார்க்கலாம்.

இவருக்கு கன்னி லக்னம். கன்னி லக்னத்தில் இரண்டு யோகர்களும் பரஸ்பர கேந்திரங்களில் அமர்ந்து பார்வையிட்டு கொள்வதால் சுக்கிரன் பூஸ்டிங் பெறுகிறார்.

கிரகங்களின் தசைகள் உதவிகள்

இவருக்கு ராகு தெசையானது 20.11.2003 முதல் 20.11.2021 வரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ராகு தெசையில் சந்திர புக்தி 3.5.2019 முதல் 1.11.2020 வரையில் நடைபெறும்

ராகு தெசை – சந்திர புக்தி –சுக்கிர அந்தரம் 6.7.2020 முதல் 5.10.2020 வரை

ராகு தெசை – சந்திர புக்தி – சூரிய அந்தரம் 6.10.2020 முதல் 1.11.20

ராகு கன்னி லக்னத்திற்கு 10ல் வலுவாக அமர்ந்திருக்கிறார். ராகுவினை எந்த கிரகமும் பார்க்க வில்லை. அதுவே இவருக்கு ராகுவினால் நன்மைகளை பெற உதவியது,

ராகு தெசா லக்னமாக அமைத்துக் கொண்டு பார்க்கும்போத மிதுனத்திற்கு அதி யோகரான சனி 9ல் பஞச மகா புருஷ யோகங்கில் ஒன்றான சச யோகத்தினை பெற்று வலிமையாக யோகத்தினை கொடுத்தார்.

2015 முதல் ஏறுமுகமான காலத்தினை சந்தித்த இவர் ராகு தெசை முடிந்த பின் வரும் குரு தெசை 16 வருடங்கள் இந்தியாவின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பார்.

குரு தெசைக்கு தெசா லக்னமாக ரிஷபம் வருவதால் ரிஷபத்திற்கு யோகர்களாக சனி சுக்கிரனே வருகிறார்

கன்னி லக்னத்தின் அதி யோகரான சுக்கிரன் வீட்டில் அமர்ந்த குரு தெசையானது இவரை இந்திய பிரதமராக்கி அழகு பார்க்க தவறாது,

கன்னி லக்னத்திற்கும் அதி யோகர் சுக்கிரன் சனி

தெசா லக்னமான குரு அமர்ந்த வீட்டிற்கு அதி யோகர் சுக்கிரன் சனி ஆவார்கள்.

இவருடைய ஆட்சி காலத்தில் 2029 முதல் 2032 வரை பொற்காலமாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

கிங்  அமித்ஷா வெல்லுவாரா கரோனா – Greatest King Amitsha Boosting Planets 2

கொரானா தாக்கம் ஏன் ?

இவருக்கு கொரானா தாக்கம் ராகு தெசையில் சந்திர புக்தியில் வந்திருக்கிறது

கன்னி லக்னத்திற்கு 8மிடத்தில் சந்திரன் அமர்ந்திருக்க 10லிருந்து ராகுவின் பார்வையினை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

மேஷத்திலிருக்கும் சந்திரனை யோக  சனியும் பார்வையிடுவதால் பாதிப்புகள் இருக்காது,

ஆனால் ரோகத்திற்கு சொந்தக்காரரான சனியின் பார்வையில் நோயின் தாக்கம் வந்திருக்கிறது,

20.8.2020 க்குபின் பூரண நலம் பெறுவார்.

இவருடைய ஜாதகமானது யோகங்கள் கொண்ட அற்புதமான ஜாதகமாகும்.

 

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.