லக்ன யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
ராமர் கோவில் துவக்கம் ஜாதகம் India Ramar Temple Muhoortha Horoscope Point 10
இந்தியர்களின் மனம் கவர்ந்த கடவுள் ராமன்
உலகில் எங்கெங்கோ ராமனுக்கு ஆலயம் இருந்த போதிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது பல ஆண்டுகால கணவாகும்.
5.8.2020 அன்று ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது.
ராமர் கோவில் கட்டப்பட குறிக்கப்பட்ட நேரம் பிற்பகல் 12.15
கோவில் கட்டப்படும் நேரத்திற்குரிய ஜாதகம்
துலாம் லக்னம்
கும்ப ராசி
3மிடத்தில் தனசுவில் குரு கேது
4மிடத்தில் மகரத்தில் சனி
5மிடத்தில் கும்பத்தில் சந்திரன்
6மிடத்தில் மீனத்தில் செவ்வாய்
9மிடத்தில் மிதுனத்தில் சுக்கிரன் ராகு
10மிடத்தில் கடகத்தில் சூரியன் புதன்
ராகு தெசை இருப்பு 16 வருடங்கள் 26 நாட்கள்
துலாம் லக்னத்தில் உதயம் என்பதால் உலக மக்களின் பொதுவான கடவுள் ராமர் என்பதை சொல்கிறது,
துலாம் லக்னத்தின் சின்னமான தராசு நடு நிலையாக இருப்பது போல் அனைத்து தரப்பு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும்.
துலாம் லக்னத்தின் அதிபதியான சுக்கிரன் ஶ்ரீ மகாலகஷ்மியின் அம்சமாகும். சுக்கிரனின் லக்னத்தில் கோவில் துவக்கம் என்பது அற்புதமான லக்னம் என்பதை சொல்கிறது,
லக்னத்திற்கு உதவி செய்யக் கூடிய யோகர் சனி
சனி துலாம் லக்னத்திற்கு 4ம் வீட்டிற்கும் 5ம் வீட்டிற்கும் அதிபதியாகி கேந்திர கோணாதிபதியான சனி 4ம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்கிறார்
சனி மகரத்தில் ஆட்சி பெற்றதால் பஞச மகா புருஷ யோகங்களின் ஒன்றான சச யோகம் கிடைக்கிறது
சனி சசயோகத்தினை பெற்றதால் 4மிடம் பிரகாசமடைகிறது, அற்புதமான யோகத்துடன் சனி பார்க்கும் இடமெல்லாம் சுபிட்சம் அடைகிறது
சனியின் பார்வை முதலில் 6மிடத்திற்கு விழுகிறது, லக்னத்தின் 6மிடம் கோவில் கட்டுவதற்கான எதிர்ப்பினை காட்டும் இடமாகும்.
லக்னத்தின் அதிபாபி குருவாக வருகிறார்.
குரு 3 மற்றும் 6மிடத்தின் அதிபதியாக வருவதால் இந்த லக்னத்திற்கு உதவி செய்திட தயக்கம் காட்டுவார்.
ஆனால் சனியின் பார்வை 6ம் இடத்தில் விழுவதால் 6மிடம் சாந்தமாகிறது. குருவின் வேகம் குறைகிறது,
இந்த லக்னத்தின் மற்றொரு அசுப கிரகமான சூரியன் லக்னத்தின் பாதகாதிபதியாக வருகிறார்.
பாதகாதிபதி எப்போதும் பாதகத்தினைத்தான் செய்வார்.
ஆனால் இங்கு பாதகாதிபதியான சூரியன் கடகத்தில் அமர்ந்து துலா லக்னத்தின் யோகரான சச யோகம் பெற்ற சனியின் பார்வையினை பெறுகிறார்.
ஆக குருவின் 6ம் வீட்டினை சாந்தப்படுத்தியதைப் போல் பாதகாதிபதியினை வேகத்தினையும் சனி குறைத்து விடுகிறார்.
லக்னத்தினை பாதிக்கும் கிரகங்களான குரு சூரியன் இருவரும் சாந்தப் படுத்தப்பட்டனர்.
அடுத்ததாக யோகரான சனியின் தொடர்பில் மற்ற கிரகங்கள் வலிமை பெறுவதை பார்ப்போம்
சனி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி 4ல் அமர்ந்து சச யோகம் பெற்றதுடன் தனது பார்வையால் லக்ன பாக்கியாதிபதியான புதனை அணைத்துக் கொள்கிறார்.
கோணாதிபதியும் பாக்கியாதிபதியும் பரஸ்பர பார்வையில் இருப்பது அதி அற்புதமான அமைப்பாகும்
கோணாதிபதியான சனியின் பார்வை லக்னத்தின் மீது விழுவதும் லக்னம் சுபீட்சம் பெறுகிறது,
ராமர் கோவில் கட்டப்படும் நேரத்தின் ஜாதகத்தில் ஆயுள் பாவமானது வலிமையாக இருக்க வேண்டும்.
ஜாதகத்தின் ஆயுள் பாவமானது வலிமையாக இருக்கும் என்றால் காலத்தால் அழியாத கோவிலாக மாறும்
இங்கு ஆயுள் பாவம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம்
ஜாதகத்தில் ஆயுளினை அடையாளம் காட்டும் இடமாக ரிஷபம் வருகிறது ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன். இவரே கோவிலின் ஆயுளை தீர்மானிக்கிறார்.
சுக்கிரன் லக்னத்திற்கு 9ல் பாக்கியமேறி ராகுவின் இணைவினை பெற்றிருக்கிறார்
லக்னாதிபதியே சுக்கிரன்தான். இவரே ஆயுள் பாவத்தினையும் எடுத்துக் கொள்கிறார்
சுக்கிரன் மிதுனத்தில் அமர்ந்து குருவின் பார்வை பெற்றதால் சுக்கிரனின் தீய குணமானது குறைகிறது, ராகுவின் இணைவினால் பெற்ற தோஷத்தினையும் குருவின் பார்வையால் விலகுகிறது,
ஆயுள் ஸ்தானத்தின் யோகர்களான சனி 9ல் ஆட்சி பலம் பெற்று சச யோகத்தில் இருப்பதால் ஆயுள் தீர்க்கமாக இருக்கிறது,
ஆயுள் பலத்தினால் ராமர் கோவிலானது பல்லாண்டு பல்லாண்டு காலத்திற்கு வளமையாக இருக்கும்
ஆயுள் லக்னத்திற்கும் பாக்கியாதிபதியான சனியும் பூர்வ புண்ணியாதிபதியான புதனும் பரஸ்பர பார்வையில் தொடர்பினை பெறுவது சிறப்பாகும்.
ஆயுள் ஸ்தானம் எந்த கிரக பார்வையும் பதியாமல் தெளிவாக இருப்பதால் தடைகள் எதுவும் இல்லை
மக்களின் ஆதரவினை பெறுமா ?
மக்களின் அமோக ஆதரவினை பெறுவதற்கு கிரகங்கள் எப்படி ஒத்துழைக்கின்றன என்பதை பார்ப்போம்
லக்னத்தின்ட 7ம் இடமானது மக்களின் ஆதரவினை தரும் வீடாகும். 7ம் வீட்டின் அதிபதியானவர் லக்னத்திற்கு 6ல் அமர்ந்துள்ளார். செவ்வாய்க்கு 6மிடம் நல்ல இடமாகும்.
செவ்வாய் 6மிடத்தில் அமர்ந்து மக்கள் வசிய கிரகமான சுக்கிரனை பார்வையிடுவதும் தொடர்ந்து லக்னத்தினை பார்வையிடுவதும் நல்ல அமைப்பாகும்.
செவ்வாய் 6ம் அமர்ந்து 12ம் வீட்டினை பார்வையிடுவதால் வெளிநாட்டு மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்த சக்தி கோவிலுக்கு இருக்கிறது எனலாம்
செவ்வாய் 6ம் அமர்ந்து 1ம் வீட்டினை பார்வையிடுவதால் லக்னத்திற்கு மக்கள் வசிய சக்தியானது அபரிதமாக கிடைக்கிறது
எனவே மக்களின் அமோக வரவேற்பினை ஆலயம் பெறப்போகிறது என்பதை மறுக்க முடியாது,
ராமர் கோவில் துவக்கம் ஜாதகம் India Ramar Temple Muhoortha Horoscope Point 10
ராமர் ஆலய முகூர்த்த லக்ன தெசை சொல்வது என்ன ?
முகூர்த்த லக்னம் துலாம். ராசி கும்பம். நட்சத்திரம் சதயம்.
ராகு தெசை இருப்பில் இருப்பது 16 வருடங்கள் 26 நாட்கள்
ராகு லக்னத்திற்கு !0ல் வலுவாக நிற்பதால் ஆரம்ப தெசையானது யோக தெசையேயாகும்.
ராகு தெசையானது 1.9..2036 வரை நடக்க இருக்கிறது,
தெசா லக்னம் மிதுனமாகி மிதுன லக்னத்தின் யோகரான சனி 8ல் வலுவாக அமர்ந்து கர்ம ஸ்தானத்தினை பார்வையிடுவதால் ராகு தெசை நன்றாக இருக்கும்.
தெசா லக்னத்தின் மற்றொரு யோகரான சுக்கிரன் ராகுவுடன் இணைந்து லக்னத்தில் இருப்பது சாதகமான அம்சமாகும்.
.
ராமர் கோவில் துவக்கம் ஜாதகம் India Ramar Temple Muhoortha Horoscope Point 10
ராமர் ஆலய முகூர்த்த லக்ன பாதக அம்சங்கள்
ராமர் ஆலயம் பல தடைகளை கடந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது, இந்த லக்னத்தில் பாதக அம்சங்கள் எவை எவையென்று பார்ப்போம்
ஒரு ஜாதகத்தில் சாதகம் என்று இருந்தால் சில பாதகமும் இருக்கத்தான் செய்யும்.
லக்னத்தின் மாரகம் தடைகளை தரக்கூடியது
செவ்வாய் 2 மற்றும் 7ம் வீட்டின் அதிபதியாகி மாரகத்தனை தரும் அதிகாரத்தனையும் பெறுகிறார்.
ஆனால் 6ல் மறைந்து சனியின் பார்வையினை பெற்று வலு விழப்பதால் மாரக தோஷங்கள் தருவதற்கில்லை
ஆனாலும் செவ்வாய் ஆயுள் காரன் சுக்கிரனை பார்வையிடுவது சற்று பின்னடைவான பலனேயாகும்.
ஜாதகத்தில் பூஸ்டிங் கிரகங்கள் தொடர்பானது இல்லாதது ஒரு குறையே
இருந்த போதிலும் ராமர் ஆலய துவக்கம் நல்லவிதமாகவே இருக்கிறது,
தடைகளின்றி கட்டி முடிக்கப்படும்.
ராம் ராம்.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்