man and woman bathing on running water

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

கும்பம்  மங்களமா ?   –  Charming Aquarius  planets 2

கும்பம்  லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்                    

லக்னத்தின் அதிபதி சனி 

கும்பம்  குட விளக்கா அல்லது குல விளக்கா என்று பார்ப்போம்.

இந்த லக்னத்தாரும் தேவ குருவின் உதவியின்றி அசுர குருவின் உதவியோடு சாதிக்க வேண்டும். இது எப்படி ?

சனி  நிர்வகிக்கும் வீடு 1  12

லக்னத்தின் 1ம் – 12ம்  வீட்டு அதிபதியான இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது  இவர்களுடைய 12ம் வீட்டின் குணங்களை கொண்டவர்கள்.

 சனி லக்னாதிபதி என்பதால் சுயமாக உழைத்து முன்னுக்கு வருபவர்களாகத்தான் இருப்பார்கள்.

12மிடத்து அதிபதியாக சனி வருவதால்  கடுமையான உழைப்பால்  பணம் ஈட்டுவதினால் பணம் ஈட்டும் சிரமம் அறிந்து சிக்கனமாக இருப்பார்கள்.  

எனவேதான் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வெகு விரைவில் வீடு வாகனம நிலம் என சொத்துக்களை சேர்த்து பிரபலமாகிவிடுகிறார்கள்.

லக்னத்திற்கு சனி  1ம்   வீட்டில்   ஆட்சி  பெற்றால்  அல்லது 9மிடத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் கிடைக்கிறது.

குரு  நிர்வகிக்கும் வீடு  2 – 11

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால்  குரு சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று  விடுகிறது.

குடும்பத்தினை திறம்பட நிர்வகிப்பதிலும் பணம் ஈட்டுவதிலும் நேர்மையாகவும் திறமையாகவும் ஈடுபட்டாலும் அதனில் தடைகளையும் தாமதங்களையும் எதிர் கொண்டு  வென்றெடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களுக்கு குரு முன் கர்மா கிரகம் என்பதால் முன் கர்மா படி குடும்பத்தின் பொறுப்புகளை திறம்பட கவனிக்க நேரிடும். இவர்களுக்கு குடும்ப வழி கர்மா இருக்குமென்பதால் குடும்ப வழி சிரமங்கள் இருக்கும்.

 பணம் ஈட்டுவதும் முன் கர்மா படி உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது சிரமபட நேரிடும். சிலசமயம் அதிகப்படியான பணம் கிடைத்து மகிழ நேரிடும் .

எல்லாம் முன் கர்மா விளையாட்டே

செவ்வாய்  நிர்வகிக்கும் வீடு  3 – 10

இவர்களுக்கு 3மிடம் என்னும் சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.

பத்தாம் வீட்டின் அதிபதியாகவும் செவ்வாய் வருவதால் இவர்கள் சிந்தனை யோசனை திட்டம் எல்லாமே தொழிலைப் பற்றியோ உத்யோகத்தினைப் பற்றியோதான் இருக்கும்.

கும்பம்

செவ்வாயின் பலத்தினால் நிர்வாகத்தினை திறம்பட நிர்வகிப்பதில் திறமைகளை வெளிப்படுத்தக் கூடியவர்கள். மற்றவர்களை ஆளும் வண்ணம் பணிகள் அமைந்து விடும்.

செவ்வாய் காரகமான ராணுவம் போலீஸ் நிலம் அரசாங்கம் மருந்து தொடர்புடைய பணிகளில் தொடர்பானது ஏற்பட்டுவிடும்.

லக்னத்திற்கு    10ம் வீட்டில் செவ்வாய்  ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் கிடைக்கிறது.

சுக்கிரன்  நிர்வகிக்கும் வீடுகள் 4 – 9

லக்னத்திற்கு 4 மற்றும் 9ம் அதிபதி சுக்கிரன்

கேந்திராதிபதியாகவும் கோணாதிபதியாகுவும் வரும் சுக்கிரன் அதி யோகர்

இவர்கள் வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.  ஆடம்பர வாழ்க்கை பிரியர்களான இவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.

சுக போக பாக்கியம் என்ற இணைவானது யோகத்தின் அடையாளமாக இருப்பதால் வசதி வாய்ப்புகள் கிரகங்களின் வலிமையினை பொருத்து வெகு சீக்கிரம் இவர்களை வந்தடையும்.

சிலருக்கு தாய்வழி சொத்துக்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகளேற்படும்.

மழைக்கு ஓதுங்கினா கூட மாளிகையில் ஒதுங்கும் லக்னமாகும்.

லக்னத்திற்கு   4ம்  வீட்டில் அல்லது 9ம் வீட்டில் சுக்கிரன்  ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் கிடைக்கிறது.

இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் சுக்கிரன் வருவதால் பாதகத்தினை செய்வதற்கும் வழிகளேற்பட்டு விடும்.

அளவுக்கதிமான சொத்துக்கள் அதுவே இவர்களுக்கு பிரச்னையினையும் கொடுத்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கும்பம்  மங்களமா ?   –  Charming Aquarius  planets 2

புதன்  நிர்வகிக்கும் வீடுகள் 5 – 8

லக்னத்திற்கு 5 மற்றும் 8ம் அதிபதி புதன்

.பூர்வபுண்ணியத்தினை அடையாளம் காட்டும் இடமான மிதுனம் மிக முக்கியமான ஆன்மீகம் விளக்கம் தருமிடமாகும். பிள்ளைகள் பற்றிய தெளிவான காட்டுதல்களையும் குறிக்குமிடமாகும்.

புதன் முன் கர்மா வீடான 8ம் இடத்திற்கும் சொந்தமாக வருவதால் இவர்களுடைய பிள்ளைகள் வழி முன் கர்மா படி தீர்க்க வேண்டிய கர்மாவிற்காக இவர்களது பிள்ளையாக  வந்து கர்மாவினை கழிக்க நேரிடும்.

இவர்களுக்கு குடும்ப வழி கர்மாவும் இணைந்தே இருக்கும். இந்த லக்னக்காரர்கள் குடும்ப பொறுப்பு மொத்தமும் தன் கையில் எடுத்துக் கொள்வதையும் பார்க்க முடியும்.

கும்பம்

சந்திரன் நிர்வகிக்கும் வீடு  6

லக்னத்திற்கு 6  அதிபதி சந்திரன்

இவர்களுக்கு எதிர்ப்புகள் போட்டிகள் வழக்கு போராட்டங்கள் என எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகளை சொல்லக் கூடிய இடமென்றாலும் மிதமான தீய பலன்களையே தருவார்.

சந்திரனின் துரித கதி இயக்கமானது நீடித்த ஆழ்ந்த எதிர்ப்பினை இவர்களுக்கு தராது

சூரியன் நிர்வகிக்கும் வீடு  7

லக்னத்திற்கு 7ம்அதிபதி சூரியன்

களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி சூரியன் என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுக்கும். திருமண வாழ்க்கையானது பிரகாசமாக இருக்கும்.

சூரியன் 7ம் வீடான வருவதால் துணையின் தொடர்பானது அரசு மற்றும் அரசுசார்  துறைகளில் தொடர்பினை பெற்று கொடுத்து விடும்.

இவர் மாரகாதிபதியாகவும் வருவதால் இவரிடம் கவனமமாகத்தான் இருக்க வேண்டும்.

மகரம்   சாதிக்குமா ?   –Capricorn  competitive   planets 2

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் புதன்  .

இவர்கள் வலிமை பெற்றால்  வலுத்த யோகம் கிடைத்து விடும்.  ஆடம்பரமான சொகுசு நிறைந்த பணிகளில் ஆர்வமிருக்கும். கிரகங்கள் வலு வடைந்டதால்  பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு சுக்கிரன்  மற்றும் சுக்கிரன் சனியின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.