லக்ன யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
மீனம் சாபமா வரமா ? – Blessed Pisces planets 2
மீனம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்
லக்னத்தின் அதிபதி குரு
மீனம் குட விளக்கா அல்லது குல விளக்கா என்று பார்ப்போம்.
மற்றெந்த லக்னத்தாரினை விட இந்த லக்னத்தார் முக்கியமான கிரகங்களின் உதவியினை பெற முடியாமல் தவிப்பார்கள்
எனவேதான் மீனம் லக்னத்தில் உதித்தவர்கள் கடும் போராட்டங்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடுகிறது
இதற்கு காரணம் குரு புதன் இருவரும் கேந்திராதிபத்ய தோஷம் பெற்றால் உதவ மாட்டார்கள்.
சூரியனோ 6ம் வீட்டு அதிபதியாகி பகை பெறுகிறார்.
சுக்கிரன் சனி இவர்களுக்கு கொஞசம் கூட இறங்கி வரமாட்டார்கள்.
இவர்களுக்கு யோகத்தினை தருபவர்கள் என்றால் செவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும்தான்.
யோக தெசையயே செவ்வாய்க்கு 7 வருடம் சந்திரனுக்கு !0 வருடம்தான். மற்றவர்களுக்கு இது கூடுதலாக இருக்கும்.
குரு நிர்வகிக்கும் வீடு 1 10
இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுடைய 10ம் வீட்டின் குணங்களை கொண்டவர்கள்.
குரு லக்னாதிபதி என்பதால் விரும்பிய பணியினை தேர்ந்தெடுத்து வளமையான வாழ்க்கையினை பெறுவதற்காக உழைப்பவர்கள்.
வாழ்க்கையில் வெகு வேகமாக முன்னேறிவிட வேண்டும் என்று பிரயாசைப்படுவார்கள். ஆனால் மிதமான வேக முன்னேற்றம் தான் கிடைக்கும் .
பத்தாம் வீட்டின் அதிபதியாகவும் குரு வருவதால் இவர்கள் சிந்தனை யோசனை திட்டம் எல்லாமே தொழிலைப் பற்றியோ உத்யோகத்தினைப் பற்றியோதான் இருக்கும்.
லக்னத்திற்கு குரு 1ம் வீட்டில் அல்லது 10ம் ஆட்சி பெற்றால் அல்லது 5மிடத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் கிடைக்கிறது.
மீன லக்னத்திற்கு மட்டுமே குரு மூன்று இடங்களில் பஞசமகா புருஷ யோகத்தில் ஹம்ச யோகத்தினை பெறும் அமைப்பு கிடைக்கிறது,
செவ்வாய் நிர்வகிக்கும் வீடு 2 – 9
இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் குரு சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.
ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று விடுகிறது.
குடும்பத்தினை திறம்பட நிர்வகிப்பதிலும் பணம் ஈட்டுவதிலும் முரட்டு தனமான நடவடிக்கையினை கொண்டவர்.
இவர்களுக்கு செவ்வாய் யோகர் என்பதால் கிரகங்களின் ஒத்துழைப்பில் எளிதாக பணத்தினை ஈட்டி விடுவார்கள்.
பாக்கியாதிபதியாக வரும் செவ்வாய் சொத்துக்களை குவிப்பதில் ஆர்வம் உள்ளவராக இருப்பார். இவர்களுக்கு மறைமுக சொத்துக்கள் அதிகமிருக்கும்.
சிலருக்கு சொத்துக்கள் இருந்தாலும் அனுபவிக்க பிள்ளைகள் இல்லாது உடன் பிறந்தவர்கள் அனுபவிக்க நேரிடும்.
லக்னத்திற்கு 9ம் வீட்டில் செவ்வாய் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் கிடைக்கிறது.
சுக்கிரன் நிர்வகிக்கும் வீடு 3 – 8
இவர்களுக்கு 3மிடம் என்னும் சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும். ஆனால் சுத்தமாக இது இவர்களுக்கு வராது,
ரொம்பவும் வெகுளியாக மற்றவர்கள் சொல் கேட்ட நடப்பவர்களாகவே இருப்பார்கள்.
புதன் முன் கர்மா வீடான 8ம் இடத்திற்கும் சொந்தமாக வருவதால் இவர்களுடைய பிள்ளைகள் வழி முன் கர்மா படி தீர்க்க வேண்டிய கர்மாவிற்காக இவர்களது பிள்ளையாக வந்து கர்மாவினை கழிக்க நேரிடும்.
இவர்களுக்கு சகோதர சகோதரி வழி கர்மாவும் கடுமையாக வாட்டும்.
இந்த வீடுகள் பலம் பெற்றால் உடன் பிறந்தவர்களின் வழி தொல்லைகள் சொத்து அபகரிப்பு என பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
மீனம் சாபமா வரமா ? – Blessed Pisces planets 2
புதன் நிர்வகிக்கும் வீடுகள் 4 – 7
லக்னத்திற்கு 4 மற்றும் 7ம் அதிபதி புதன்
இவர்கள் வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கை பிரியர்களான இவர்கள் நினைத்ததை சாதிப்பார்கள்.
சுக போக பாக்கியம் என்ற இணைவானது யோகத்தின் அடையாளமாக இருப்பதால் வசதி வாய்ப்புகள் கிரகங்களின் வலிமையினை பொருத்து வெகு சீக்கிரம் இவர்களை வந்தடையும்.
சிலருக்கு மனைவி வழி சொத்துக்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புகளேற் படும்..
லக்னத்திற்கு 4ம் வீட்டில் அல்லது 7ம் வீட்டில் புதன் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்திரை யோகம் கிடைக்கிறது.
இந்த லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் புதன் வருவதால் பாதகத்தினை செய்வதற்கும் வழிகளேற்பட்டு விடும்.
புதன் கேந்திராதிபத்ய தோஷத்தினையும் கொடுக்கக் கூடியவர் என்பதையும் மறக்கக் கூடாது,
அளவுக்கதிமான அன்பினை துணையின் மீது வைத்து அதுவே இவர்களுக்கு பிரச்னையினையும் கொடுத்து விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சந்திரன் நிர்வகிக்கும் வீடு 5
லக்னத்திற்கு 5ம் அதிபதி சந்திரன்
.பூர்வபுண்ணியத்தினை அடையாளம் காட்டும் இடமான கடகம் மிக முக்கியமான ஆன்மீகம் விளக்கம் தருமிடமாகும். பிள்ளைகள் பற்றிய தெளிவான காட்டுதல்களையும் குறிக்குமிடமாகும்.
இந்த லக்னத்தாருக்கு யோகத்தினை தரும் இரு கிரகங்களில் ஒன்றாகும். இவர்களுக்கு சந்திரன் வலுத்தால் நல் வாழ்க்கை நிச்சயம்.
சூரியன் நிர்வகிக்கும் வீடு 6
லக்னத்திற்கு 6 அதிபதி சூரியன்
இவர்களுக்கு எதிர்ப்புகள் போட்டிகள் வழக்கு போராட்டங்கள் என எதிர்கொள்ள இருக்கும் பிரச்னைகளை சொல்லக் கூடிய இடமென்றாலும் மிதமான தீய பலன்களையே தருவார்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அரசின் வழி தொல்லைகள் தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சனி நிர்வகிக்கும் வீடுகள் 11 12
லக்னத்திற்கு 11ம் மற்றும் 12ம் வீட்டு அதிபதி சனி
லாபத்தின் அதிபதியாகவும் விரையாத்தின் அதிபதியாகவும் வருவதால் சனியின் குணத்தினை கொண்ட இவர்கள் சிக்கனமாக செலவு செய்து சேமிப்பில் உயர்வார்கள்.
இருப்பினும் கடும் கர்மா வீடு என்பதால் சனியின் மூலம் சில விரையங்களை செய்ய வேண்டி வரும். இது முன் ஜென்ம கர்மாவினால் வரக் கூடியதாகும்.
மீனம் சாபமா வரமா ? – Blessed Pisces planets 2
கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்
இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் செவ்வாய் சந்திரன். இவர்கள் வலிமை பெற்றால் வலுத்த யோகம் கிடைத்து விடும். ஆடம்பரமான சொகுசு நிறைந்த பணிகளில் ஆர்வமிருக்கும். கிரகங்கள் வலு பெற்றால் பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.
பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.
கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.
ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?
ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.
அதாவது இந்த லக்னத்தாருக்கு சுக்கிரன் மற்றும் சுக்கிரன் சனியின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்