உலக நிகழ்வுகள்
Sri Mahalakshmi Upasagar
ஜோதிட கிரகங்களை வெல்ல முடியுமா ? Will you win Planets – Exclusive points 10
கோகுலம் ஜோதிடம் வழங்கும் ஜோதிட செய்திகள் ஆகஸ்ட் 2020
இந்தியாவின் ஜாதகம் தற்போதைய நிலை
சீனாவுடன் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னைகள் தொடரும். பேச்சு வார்த்தைகள் தொடரும். ஆனாலும் திருப்தி தராது, அரசின் கவலை அதிகரிக்கும்.
பத்தில் செவ்வாயின் நடமாட்டத்தால் ராஜதந்திர நடவடிக்கைகள் பலன் தரும் என அரசின் கருத்தாக இருக்கும்.
இம்மாதத்தில் அம்மாதிரியான ராஜ தந்திர நடவடிக்கைகள் பெரிய அளவில் பலன் தராது,
இந்தியாவின் அண்டை நாடுகள் பகைமை போக்கினை கடைபிடிக்கும்
இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமடையும்.
செப்டம்பர் மாதம் நிலமை சீரடையும்.
கொரோனா கட்டுக்குள் வருமா ?
23.9.2020ல் ராகு பெயர்ச்சி வருகிறது
ராகு மிதுனத்தினை விட்டு விலகி ரிஷபத்திற்கு செல்கிறார்.
கொரோனா நிலமையானது சற்று கட்டுப்பட தொடங்கும். உடனடியாக முடிவிற்கு வருவதற்கு வாய்ப்பில்லை.
ஆகஸ்ட் மாதத்தில் பிரச்னைகளை எதிர்கொண்டேயாக வேண்டும்.
இந்தியாவின் மேற்கு தெற்கு பகுதிகளில் பாதிப்பானது அதிகரிக்கும்
இந்தியாவில் மழை மிரட்டுமா ?
16.8.2020ல் செவ்வாய் மீனத்தினை விட்டு விலகி மேஷத்தில் கால் வைக்கிறார்.
எனவே மழை பாதிப்புகள் இந்தியாவினை இந்த மாதத்தில் அதிக அளவில் பாதிக்காது,
ஆனால் மேஷத்தில் அமர்ந்த செவ்வாயினை ராகு பார்வையிடுவதால் இந்தியாவில் இந்த மாதத்தில் இரயில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,
இந்தியாவின் கிழக்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,
மேஷத்திற்கு பாதகாதிபதி பாதிப்பு உண்டா ?
சர லக்னத்திற்ன பாதகாதிபதியான சனி பத்தில் அமர்ந்த பஞச மகா புருஷ யோகத்தில் ஒன்றான சச யோகம் கிடைக்கிறது,
சச யோகம் பெற்ற சனி வலிமை பெற்றதால் பாதகத் தன்மையும் அதிகரித்து விடுகிறது
உத்யோகம் தொழிலில் எதுவும் பிடிபடாமல் நழுவும் நிலையினை சந்திக்க நேரிடும்.
என்ன செய்தால் நிலமை சீரடையும்
தினம் காகத்திற்கு அன்னம் வைத்து சிவபெருமானை வணங்கி வாருங்கள்
ரிஷபத்தினை மிரட்டும் குரு
அப்படியென்னதான் ரிஷபத்திற்கும் குருவிற்கும் பிரச்னை ?
இவர்களை யோசிக்க விடாமல் தொல்லைகளை தந்து கொண்டிருப்பது எப்போதுதான் முடிவிற்கு வரப் போகிறது,
செப்டம்பரில் கேது தனசுவிலிருந்து நகர்ந்து விருச்சிகத்திற்கு சென்றால் குருவின் தீய குணம் கொஞசம்
குறையும். ரிஷப ராசிக்காரர்கள் நிம்மதி பாதைக்கு அடியெடுத்து வைக்கலாம்.
டிசம்பரில் குரு பெயர்ச்சி நடந்தால் நன்மைகள் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
மிதுனத்திற்கு மயக்கமா ?
மிதுனம் ராசிக்காரர்கள் 7ல் குரு வந்த பின் மிரண்டுதான் போய் உள்ளார்கள். வாயை திறந்தாலே பிரச்னை ஆரம்பம்.
ராகு கேது அமர்ந்த கொடுக்கிற உபத்ரவம் தாங்க முடியல…குரு ஓரு பக்கம்..
ராகு கேது பெயர்ச்சிக்கு இன்னும் பிரச்னை அதிகமாகத்தான் இருக்கும்….
குரு பெயர்ச்சிதான் இதற்கு ஒரே தீர்வு. கவனம் உடல் உபாதை வந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை மறவாதீர்கள்
பரிகாரம் திரு செந்தூர் முருகனை தினம் வழிபட்டு வரவும்
கடகம் கலக்கமா ?
சனி வந்து 7ல் அமர்ந்து கணவன் மனைவி வாக்குவாதங்களை தொடர்கதையாக்கி வேடிக்கை பார்ப்பதற்கு எப்போதுதான் விடிவுகாலம்.
அட சூரியன் சனி பரஸ்பர பார்வை அடக்கி வாசிக்கும் போதே சிரமமமா உணர்ந்தால்..சூரியன் கடகத்தை விட்டு சென்றால்….
சுக்கிரன் பாதகாதி வேற கடகத்திற்கு வந்து சனியோடு கொண்டாட்டம் போட போகிறார்.
ஶ்ரீ ரங்கநாதனை வழிபட்டு வாருங்கள் கவலை ஒடும் பாருங்கள்
சிம்மம் சொத்தில் வில்லங்கம்
சிம்மத்தின் பாதகாதிபதியான செவ்வாய் எட்டில் ரொம்ப நாளா உட்கார்ந்த நாள்பட்ட பிரச்னைகளை வளர்த்து விடுகிறார்.
16.8.2020 க்குபின் நிலமை சீரடைந்தாலும் புது பிரச்னை எழ போகிறது, சொத்துக்களில் விவகாரம் எழும். சொத்து எது வாங்கினாலும் எச்சரிக்ககை.
கன்னி களத்திரம் கஷ்டம்பா
ரொம்ப நாளா கணவன் மனைவி பிரச்னை டிவி சீரியல் மாதிரி ஒடுதே இதற்கு தீர்வே இல்லையா…கவலை கன்னி ராசிக்காரர்களுக்கு.
16.8.2020 க்குபின் நிலமை மாறும். ஆனா உங்க உடல் நிலை பாதிக்கும்.
அதை கவனிக்கிற சாக்கில பிரச்னைகள் விலகும். எதோ ஒரு கணக்கு சரியான சரிதான் நினைப்பீங்க
துலாம் உத்யோகம் தொழில்
பாதகாதிபதி பத்தில் உட்கார்ந்து உங்களை பாடாய் படுத்துறார். எல்லாம் சரியாத்தானே போனது போன மாசம் வரைன்னு நினைப்பீங்கக.
சூரியனை சனி பாக்கறதால இந்த மட்டில் கொறைவா பிரச்னை திருப்தி படுங்க..ஆவணி வந்தா இந்த கஷ்டம் போகும்…
விருச்சிகம் கண்டமா ?
குரு ரெண்டுல அட நல்ல காலம்பான்னு நெனைச்சு ஏமாந்து இருப்பீங்களே..ரெண்டாமிடம் மாரகம்….கடும் கண்டம். அதாவது உடல் உபாதை கொடுத்து மிரட்டியிருப்பாரே..
சரி கிரகங்கள் எல்லாம் எதோ காரண காரியத்திற்குதான் செய்யும். அது போகட்டும்.
பரிகாரங்களை செஞசு வந்திருந்தா இந்த அளவிற்கு தொல்லைகள் இருந்திருக்காதல்லவா.. குரு பெயர்ச்சி வரை கவனமா குரு ப்ரீதி செய்து வாருங்கள்.
தனசு கணவன் மனைவி சிரிப்பெங்கே ?
ஒங்க மனசே சரியில்லைன்னு பாக்கும்போதெ தெரியுது, 7ல் சுக்கிரன் உட்கார்ந்தா அது எப்படிப்பா கணவன் மனைவி சிரிச்சு பேச முடியும்.
அதெல்லாம் பழைய கதைன்னு நினைப்பீங்க…செப்டம்பர் வரட்டும் ஒங்க முகத்துல சிரிப்பை பாக்க முடியும்..
வைகுண்ட வாசன் ரங்கனை நினைச்சா மனச லேசாகுமே
மகரம் செலவுல மாட்டிக்கிட்டாங்க..
ம் எல்லாம் நல்லா இருந்தாலும் நிம்மதியை தானே கெடுத்துக்கறது எப்படின்னு உங்களிடம்தான் கேக்கனும்.
சும்மான்னு இல்லாம எதையாவது யோசிச்சு செலவு பன்றது எல்லாம் தண்டம்ன்ன மத்தவங்க சொல்றது,.
அட சும்மா இருந்து பாருங்க..நன்மை தானா நடக்கும்
கும்பம் கோபம் எப்போது போகும்
நாக்குல வார்த்தை விளையாடுது,..முகத்துல கோபம் கொப்பளிக்குது,.ஏங்க ஏங்க…முடியலங்க…கோபத்தை கட்டு படுத்துங்க…செவ்வாய் மேஷத்துக்கு போனா ஆளே மாறிடுவீங்க…அமைதியா அடக்கமா…அட நீங்களா அதுன்னு சொல்ற மாதிரித்தான்…ம்..
மீனம் பயங்கர சிந்தனை
உத்யோகத்தில் தொழிலில் தப்பு தப்பா சிந்தனை வந்து போகுது, வேலையை விட்டுட்டு வேற வேலைக்கு போகலாமான்னு சிலருக்கு யோசனை…
தொழில்ல இருந்தா..வேற தொழில் செஞசு பாக்கலாம்னு யோசனை…அய்யா…கொஞசம் நிதானம் தேவை…
எந்த புது முயற்சியும் இப்ப வாணாம்…குரு பெயர்ச்சிக்கு அப்பால…உங்க நெனைப்பையும் அப்பால தூக்கி வச்சுடுவீங்க.
பரிகாரங்கள் உதவுமா ?
பரிகாரங்கள் நமக்கு மறைமுகமாக உதவிகளை செய்கிறது, ஒருவருக்கு குரு பலமிழந்தால்…குருவிற்கு உரிய பரிகாரங்களை செய்ய சொல்கிறோம். குருவின் தலமான திரு செந்தூரில் குரு பலம் பெற்றவர்கள் இருப்பார்கள்.
அவர்களோடு இணைந்து இறை சிந்தைனை வெளிப்பட்டால் அவர்களிமிருந்து அதிர்வலைகளை பெற்று அதனால் பாதிப்பிலுள்ளோர் குரு அதிவரைகளை சீர் செய்து விட முடியும்.
ஒருவரின் பலவீனமான கிரக அதிர்வலைகளள ரிபபேர் செய்வது போலத்தான் கிரக பரிகாரங்கள்.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்