symmetrical photography of clouds covered blue sky

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

விருச்சிகம் விரட்டுமா மிரட்டுமா ?   –   Chase or Threaten Scorpio  planets 2

விருச்சிகம் விரட்டுமா மிரட்டுமா என்பதை கொள்வோம்              

லக்னத்தின் அதிபதி செவ்வாய்

செவ்வாய் நிர்வகிக்கும் வீடு 1  6

லக்னத்தின் 1ம் – 6ம்  வீட்டு அதிபதியான இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது  இவர்களுடைய 6ம் வீட்டின் குணமான போராட்டத்தில்  வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகத்தான் பெரும்பாலும் இருப்பார்கள்.  

லக்னாதிபதி பலம் பெற்றால் அரசின் பதவிகள் மக்கள் நல பணிகள் வழக்கு விவகாரங்கள் பஞசாயத்து போன்ற தொடர்புடைய பணிகளில் விரைவான முன்னேற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

  லக்னாதிபதி பலமிழந்தால் பின்னடைவான பலன்களைத்தான் தருவார்.

விரும்பிய வாழ்க்கை பயணத்தினை போராடித்தான் பெற முடியும் என்பதால் இவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

லக்னத்திற்கு செவ்வாய்  1ம்  வீடான விருச்சிகத்தில் ஆட்சி  பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் தருகிறது.

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி  விருச்சிக லக்னம்.

லக்னத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றதால் பிரபல யோகத்தனை பெற முடிந்தது,

குரு  நிர்வகிக்கும் வீடு  2 – 5

லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த 2மிட தனசுவின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.

2மிடத்து அதிபதியாக குரு வருவதால்  நேர்மையான வழியில் பணம் ஈட்டுவதிலும்  சீராக குடும்பத்தினை நடத்திச் செல்வதிலும் திறம்பட செயல்படுபவர்  என்றே குறிப்பிடலாம். 

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் 5மிடம் என்னும் புத்திர ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதியாக வருவதால் பாவ புண்ணியங்களுக்கு பயந்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.

குரு மென்மையானவர் என்பதால் மென்மையான குணம் இவர்களுக்கு இருக்கும். 

பிள்ளைகள் குரு பலமாக அமர்ந்தால் வெகு விரைவில் முன்னேற்றங்களை அடைவார்கள்.

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் செவ்வாய் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று  விடுகிறது

லக்னத்திற்கு  குரு  5ம்  வீடான மீனத்தில் ஆட்சி பெற்றால் அல்லது 9ல்   கடகத்தில் உச்சம்  பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் தருகிறது

சனி நிர்வகிக்கும் வீடுகள் 3 – 4

லக்னத்திற்கு 3 மற்றும் 4ம் அதிபதி சனி.

லக்னத்தின் 3 மற்றும் 4ம் பாவத்தின் அதிபதியாக வரும் சனி இவர்களுக்கு  பாபி என்பதால்  தீமை  செய்பவர்.  3மிடமானது சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.

லக்னத்திற்கு 4 வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுமையான சிந்தனை குணம் கொண்ட இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்யேருப்பார்கள்.

சின்ன விஷயங்களைக் கூட ரொம்ப யோசித்துதான் முடிவெடுப்பார்கள். திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் இதனை கண்டு மிரள்வர்கள்.

 லக்னத்திற்கு சனி  4ம்  வீடான கும்பத்தில்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச  யோகம் தருகிறது

சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 7 – 12

லக்னத்திற்கு 7 மற்றும் 12ம் அதிபதி சுக்கிரன்

களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி சுக்கிரன் என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுத்தாலும் விரையாதிபதி என்பதால் மனதில் இல்லறத்தினை பொருத்த மட்டில் தீராத ஆசைகள் அதிகமிருக்கும்.  

சுக்கிரன் விரையாதிபதி ஆதிபத்யம் பெறுவதால் களத்திரம் வழியே அதிக செலவினம் தவிர்க்க முடியாது.

லக்னத்திற்கு சுக்கிரன்  5ம்  வீடான மீனத்தில் உச்சம் பெற்றால் அல்லது 7ல்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது.

ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு

புதன் நிர்வகிக்கும் வீடுகள்   8– 11

லக்னத்திற்கு 8 மற்றும் 11ம் அதிபதி புதன்

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் கடுமையான கர்மா கிரகமாகும். எல்லா லக்னக்காரர்களும் 8 மற்றும் 11ம் அதிபதியானவர் முன் ஜென்ம கர்மா என்ன என்பதையும் கர்மாபடி என்ன இந்த ஜென்மத்தில் அனுபவகிக்க  வேண்டும் என்பதையும் கூறும் இடமாகும்.

விருச்சிக லக்னத்தாருக்கு மட்டுமே 8 -11 இரு கர்மா வீடும் புதனின் கட்டு பாட்டில் வரும். எனவே இவர்கள் புதன் வழி கர்மா கழிக்க முயல வேண்டும்

சந்திரன்  நிர்வகிக்கும் வீடு  9

லக்னத்திற்கு  9ம் வீட்டு அதிபதி சந்திரன்

பாக்கியாதிபதியாக வருபவர்  பாதகாதிபதியாகவும் வருவதால் ஏராளமான சொத்துக்களை சேர்ப்பார். கிரகங்களின் சோதனைகளை எதிர்கொள்ளும்போது அவரே அந்த சொத்துக்களை அழித்தும் விடுவார்.

விருச்சிகம்

பெரும்பாலும் இந்த லக்னக்காரர்கள் தம் பெயரில் சொத்துக்களை வாங்குவதை விட பிறர் பெயரில் வாங்குவார்கள். சிலரின் சொத்துக்கள் பிறரால் ஏமாற்றப்படவும் வாய்ப்பும் இருக்கிறது,

இவர்களுக்கு ஸ்திர லக்ன பாதகாதிபதியாக வருவதால் கடுமையான தோஷத்தினை கொடுக்கக் கூடியவர்.

சூரியன்  நிர்வகிக்கும் வீடு  10

லக்னத்திற்கு  10ம் வீட்டு அதிபதி சூரியன்.

லக்னத்திற்கு 10 என்னும்  இடமானது தொழில் ஸ்தானம் ஆகும். இவர்களுக்கு தொழில் உத்யோகம் இவைகளை அடையாளம் இடமான சிம்மமானது வலு பெற்றால் யோகம் கிடைக்கும்.

பொதுவாக அரசின் தொடர்பில் இருக்கும் அனைத்து விதமான பணிகளில் ஆர்வம் இருக்கும்.

விருச்சிகம் நுட்பமான திறன் கொண்ட லக்னமாகும்.

விருச்சிகம் விரட்டுமா மிரட்டுமா என்று பார்த்தால் இவர்கள் விட்டால் விரட்டுவார்கள்.

சற்று ஏமாந்தால் மிரட்டுவார்கள்

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சூரியன் குரு சந்திரன். இவர்கள் வலிமை பெற்றால்  வலுத்த யோகம் கிடைத்து விடும். பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு சுக்கிரன்  மற்றும் சுக்கிரன் சனியின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.