ஜோதிடம்

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

கன்னி கடல் அலையென ஆர்பரிக்குமா ?  –   Unstoppable sea wave of Virgo Planet 2

கன்னி லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்                       

லக்னத்தின் அதிபதி புதன்

புதன் நிர்வகிக்கும் வீடு 1  10

லக்னத்தின் 1ம் வீட்டு அதிபதியான இவருக்கு ஒரே வீடுதான் உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுக்கு எந்தவித குழப்பமின்றி தெளிவான முடிவெடுப்பதில்தான் இருக்கிறது,

லக்னாதிபதி பலம் பெற்றால் கல்வியில் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் பின்னடைவான பலன்களைத்தான் தருவார்.

பத்தாமிடத்து அதிபதியாகவும் வருவதால் படிப்பதற்கும் பணியில் ஈடுபடுவதற்கும் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் படிப்பிற்கேற்ற உத்யோகம் இவர்களுக்கு கிடைத்து விடும்.

விரும்பிய வாழ்க்கை பயணத்தினை எளிதாக தேர்ந்தெடுத்துவிடுவார்கள். பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள்.

இவர்களுக்கு  புதன் ரிஷபம் துலாம் தனசு மீனம் மிதுனம் கன்னி மகரம்  வீடுகளில் அமர்ந்தால் வலிமை பெற்று நல்ல பலன்களை கொடுப்பார்.

கன்னி

சுக்கிரன் நிர்வகிக்கும் வீடு  2 – 9

லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த 2மிட துலாத்தின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.

2மிடத்து அதிபதியாக சுக்கிரன் வருவதால்  பணம் ஈட்டுவதிலும் குடும்பத்தினை நடத்திச் செல்வதிலும் திறம்பட செயல்படுபவர்  என்றே குறிப்பிடலாம். 

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்  வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மற்றவர்களை கவரும விதத்தில் பேசும் இவர்கள்  சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.  

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் சுக்கிரன் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று  விடுகிறது

சுக்கிரன் ரிஷபம் துலாம் தனசு மீனம் மிதுனம்  மகரம்   வீடுகளில் அமர்ந்திருந்தால்    மிகுதியான  நல்ல  நன்மைகளை செய்வார்.

லக்னத்திற்கு சுக்கிரன் 7ம்   வீட்டில் உச்சம் அல்லது 9ல்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  மாளவ்ய யோகம் தருகிறது.

 

செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 3 – 8

லக்னத்தின் 3 மற்றும் 8ம் பாவத்தின் அதிபதியாக வரும் செவ்வாய் இவர்களுக்கு கடும் பாபி என்பதால்  தீமை  செய்பவர். 

முன்கர்மாவினை அடையாளம் காட்டும் வீடாக 8மிடம் வருவதால் கர்மாவினை கழிப்பதற்கு கடும் சோதனைகளை செவ்வாய் கொடுப்பார்.

3மிடமானது சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும். 

செவ்வாய் பாதகத்தினை செய்யக் கூடியவர் என்பதால இவ்விஷயங்களில் எதிர்மறையான பலன்களை கொடுத்த விடுவார்.

செவ்வாய் உதவி செய்ய ஆரம்பித்து விட்டால் சாதுர்யங்களை செயல்படுத்தி மற்றவர்களை திணற அடிப்பதில் வல்லவர்கள்.

இவர்கள் செவ்வாய் மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் கும்பம்  வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன் குறைந்து  பலன்களை வெளிப்படுத்துவார்.

குரு நிர்வகிக்கும் வீடுகள் 4 – 7

லக்னத்திற்கு 4 மற்றும் 7ம் அதிபதி குரு.

வீடு வாகனம் நிலம் என சுக போகங்களை அடையாளம் காட்டும் வீடான 4மிடத்தின் அதிபதியான குரு மற்றெந்த லக்னக்காரர்களைக் காட்டிலும் இவர்களுக்கு வசதி வாய்ப்பினை கொடுத்து விடுவார்.

களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி குரு என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுத்தாலும் பாதகாதிபதி என்பதால் மனதில் நெருடல்  என்பது விலகாத மர்மமாகவே இவர்களது வாழ்வில் நீடிக்கும்.

ஆனால் குரு 7ம் வீடென்னும் ஸ்திர லக்ன பாதகாதிபதயாகவும் வருவதால் சொத்து சுகம் இவர்களுக்கு பயன்படாது மற்றவர்களால் அனுபவிக்க நேரிடும். சிலசமயம்  சொத்துக்களால் பிரச்னையும் கலந்தே இருக்கும்.

பொதுவாக குரு ரிஷபம் மிதுனம் தனசு கடகம்  வீடுகளில் அமர்ந்தால் நன்மையான பலன்களை தருகிறார்.  

லக்னத்திற்கு குரு 4ம்   அல்லது 7ல்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  ஹம்ச யோகம் தருகிறது.

கன்னி

ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு

எப்போதுமே பலம் இருக்கும் இடத்தில் பலவீனமும் இருக்கும். குருவினை பொருத்த மட்டில்  இந்த லக்னத்தாருக்கு வலிமையான பலனை தரக்கூடியவர். கேந்திராதிபத்ய தோஷமின்றி அமர்ந்தால் யோகமாக மாறும்..

சனி நிர்வகிக்கும் வீடுகள் 5 – 6

லக்னத்தின்  5 மற்றும் 6ம் அதிபதி சனி.

இவர்களுடைய குழந்தைகளின்  வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,

லக்னத்திற்கு 6 என்னும் சத்ரு ஸ்தானம். வழக்கு விவகாரங்களையும் உத்யோகம் படிப்பு தொழலில் போட்டிகளில் வெற்றிகளை சொல்லுமிடமாகவும் வருகிறது

பொதுவாக சனி மேஷம் விருச்சிகம் சிம்மம்  கும்பம் வீடுகளில் பலம் பெறகிறார்.   நல்ல யோக பலன்களை வெளிப்படுத்துவார்.

லக்னத்திற்கு சனி 5ம்  வீட்டில்    ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  சச யோகம் தருகிறது.

சந்திரன்  நிர்வகிக்கும் வீடுகள்  11

லக்னத்திற்கு 11 என்னும்  இடமானது லாப ஸ்தானம் ஆகும். கன்னி லக்ன அதிபதியான புதனுக்கு இயற்கை பாபி என்பதால் இந்த 11மிடமானது இவர்களுக்கு எந்தவிதத்திலும் உதவாது,

ஆனால் முன்கர்மாவினை அடையாளம் காட்டும் வீடென்பதால் மிக முக்கியமான வாழ்க்கை கட்டங்களை உணர்த்தும் இடமாகும்.

இவர்களுக்கு சந்திரன் ரிஷபம்  துலாம் மிதுனம் கடகம் தனசு மகரம்    வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.

சூரியன்  நிர்வகிக்கும் வீடுகள்  12

லக்னத்திற்கு 12 என்னும்  இடமானது விரைய ஸ்தானம் ஆகும். கன்னி லக்ன அதிபதியான புதனுக்கு எப்போதுமே சூரியனோடு இணைந்த நடமாட்டம் என்பதால் பொதுவாகவே அதிக செலவினை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.  .

இவர்களுக்கு சூரியன் மேஷம் விருச்சிகம் சிம்மம் கடகம் துலாம்  கும்பம்   வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்

ராகு கேது

இந்த லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் விருச்சிகம்  கும்பம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் சனி. இவர்கள் வலிமை பெற்றால்  வலுத்த யோகம் கிடைத்து விடும். பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு செவ்வாய் மற்றும் சந்திரனின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.