green mountain with river in the middle

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

துலாம் உயரமா துயரமா ?   –  Tall or  Tragedy Libra planets 2

துலாம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்                      

லக்னத்தின் அதிபதி சுக்கிரன்

சுக்கிரன் நிர்வகிக்கும் வீடு 1  8

லக்னத்தின் 1ம் – 8ம்  வீட்டு அதிபதியான இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது  இவர்களுடைய 8ம் வீடு என்னும் முன் கர்மா இவர்களை கட்டிப் போட்டு முன் ஜென்ம விதிப்படியே இவர்களின் வாழ்க்கையினை அமைத்து கொடுப்பார்.

 எனவே தான் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் வாழ்ந்தால் உயரத்தில் வாழ்வார்கள். இல்லையென்றால் துயரத்தில் வாழ்வார்கள்.

எல்லம் கர்மா செய்யும் விளையாட்டு இவர்களுக்கு எந்தவித குழப்பமின்றி தெளிவான முடிவெடுப்பதில்தான் இருக்கிறது,

துலாம்

முன்கர்மாவினை அடையாளம் காட்டும் வீடாக 8மிடம் வருவதால் கர்மாவினை கழிப்பதற்கு கடும் சோதனைகளை செவ்வாய் கொடுப்பார்.

லக்னாதிபதி பலம் பெற்றால் சொகுசான வாழ்க்கை  விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் பின்னடைவான பலன்களைத்தான் தருவார்.

விரும்பிய வாழ்க்கை பயணத்தினை போராடித்தான் பெற முடியும் என்பதால் இவர்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

இவர்களுக்கு சுக்கிரன் ரிஷபம் மீனம்   வீடுகளில் அமர்ந்தால் வலிமை பெற்று நல்ல பலன்களை கொடுப்பார்.

செவ்வாய் நிர்வகிக்கும் வீடு  2 – 7

லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த 2மிட விருச்சிகத்தின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.

2மிடத்து அதிபதியாக சுக்கிரன் வருவதால்  பணம் ஈட்டுவதிலும் குடும்பத்தினை நடத்திச் செல்வதிலும் திறம்பட செயல்படுபவர்  என்றே குறிப்பிடலாம். 

இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் 7மிடம் என்னும் களத்திரத்தினையும் செவ்வாய் நிர்வகிப்பதால் இல்லற வாழ்வில் வேகமானவர்களாகவும்  எண்ணியதை அடைவதில் தடைகளை காண்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் செவ்வாய் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று  விடுகிறது

செவ்வாய்  சிம்மம்  கன்னி  சிம்மம் தனசு வீடுகளில் அமர்ந்திருந்தால்  கெடு  பலன்களை குறைத்துக் கொள்வார். நன்மைகளை செய்வார்.

குரு நிர்வகிக்கும் வீடுகள் 3 – 6

லக்னத்திற்கு 3 மற்றும் 6ம் அதிபதி குரு.

லக்னத்தின் 3 மற்றும் 6ம் பாவத்தின் அதிபதியாக வரும் குரு இவர்களுக்கு கடும் பாபி என்பதால்  தீமை  செய்பவர்.  3மிடமானது சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.

லக்னத்திற்கு 6 என்னும் சத்ரு ஸ்தானம். வழக்கு விவகாரங்களையும் உத்யோகம் படிப்பு தொழலில் போட்டிகளில் வெற்றிகளை சொல்லுமிடமாகவும் வருகிறது

 குரு இந்த லக்னத்தாருக்கு தீமை  செய்யக் கூடியவர் என்பதால் இவ்விஷயங்களில் எதிர்மறையான பலன்களை கொடுத்த விடுவார்.

குரு உதவி செய்ய ஆரம்பித்து விட்டால் சாதுர்யங்களை செயல்படுத்தி மற்றவர்களை திணற அடிப்பதில் வல்லவர்கள்.

துலாம்

இவர்களுக்கு குரு ரிஷபம்  மீனம்   வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன் குறைந்த நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்துவார்.

சனி நிர்வகிக்கும் வீடுகள் 4 – 5

லக்னத்திற்கு 4 மற்றும் 5ம் அதிபதி சனி.

கடும் உழைப்பனை இவர்களிடம் பெற்றுக் கொண்டு வீடு வாகனம் நிலம் என சுக போகங்களை அடையாளம் காட்டும் வீடான 4மிடத்தின் அதிபதியான சனி பலம் பெற்றால் யோகமே.

களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி குரு என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுத்தாலும் பாதகாதிபதி என்பதால் மனதில் நெருடல்  என்பது விலகாத மர்மமாகவே இவர்களது வாழ்வில் நீடிக்கும்.

 வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். மற்றவர்களை கவரும விதத்தில் பேசும் இவர்கள்  சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக சனி மேஷம் கடகம் சிம்மம்  தனசு மகரம்  வீடுகளில் அமர்ந்தால் நன்மையான பலன்களை தருகிறார்.  

லக்னத்திற்கு சனி 4ம் அல்லது 5ல்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது.

ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு

புதன் நிர்வகிக்கும் வீடுகள்   9– 12

லக்னத்திற்கு 9 மற்றும் 12ம் அதிபதி புதன்

பாக்கியாதிபதியாக வருபவர்  விரையாதிபதியாகவும் வருவதால் ஏராளமான சொத்துக்களை சேர்ப்பார். கிரகங்களின் சோதனைகளை எதிர்கொள்ளும்போது அவரே அந்த சொத்துக்களை அழித்தும் விடுவார்.

பெரும்பாலும் இந்த லக்னக்காரர்கள் தம் பெயரில் சொத்துக்களை வாங்குவதை விட பிறர் பெயரில் வாங்குவார்கள்.

இவர்களுக்கு புதன் ரிஷபம் கடகம் சிம்மம் துலாம் விருச்சிகம் வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன் குறைந்த நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்துவார்.

சந்திரன்  நிர்வகிக்கும் வீடுகள்  10

லக்னத்திற்கு  12ம் வீட்டு அதிபதி சந்திரன்

லக்னத்திற்கு 10 என்னும்  இடமானது தொழில் ஸ்தானம் ஆகும். இவர்களுக்கு தொழில் உத்யோகம் இவைகளை அடையாளம் இடமான கடகமானது வலு பெற்றால் யோகம் கிடைக்கும்.

பொதுவாக சந்திரன் விரைவாக இடமாறும் குணம் கொண்ட கிரகமென்பதால் உத்யோகம் தொழில் பற்றிய சிந்தனையில் சலனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இவர்களுக்கு சனி கடகம் துலாம் மகரம் கும்பம்   வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.

சூரியன்  நிர்வகிக்கும் வீடு  11

லக்னத்திற்கு  12ம் வீட்டு அதிபதி சூரியன்.

இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருவதால் கடுமையான தோஷத்தினை கொடுக்கக் கூடியவர்.

இவர்களுக்கு சூரியன் சிம்மம் விருச்சிகம் தனசு கும்பம்   வீடுகள்  நலம் தரும் வீடுகளாகும்

ராகு கேது

இந்த லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது   கன்னி சிம்மம் தனசு மீனம்   வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் சனி. இவர்கள் வலிமை பெற்றால்  வலுத்த யோகம் கிடைத்து விடும். பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு குரு மற்றும் சூரியனின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

 

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.