body of water between green leaf trees

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

சிம்மம் சீறுமா அடங்குமா ?  – Perfect   Master  life of Leo  planets 2

சிம்மம் சீறுமா அடங்குமா பற்றி  தெரிந்து கொள்வோம்                     

லக்னத்தின் அதிபதி சூரியன்

சூரியன் நிர்வகிக்கும் வீடு 1

லக்னத்தின் 1ம் வீட்டு அதிபதியான இவருக்கு ஒரே வீடுதான் உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுக்கு எந்தவித குழப்பமின்றி தெளிவான முடிவெடுப்பதில்தான் இருக்கிறது,

லக்னாதிபதி பலம் பெற்றால் அரசு உதவியில் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் மந்தமான முன்னேற்றம்.

பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள்.

இவர்களுக்கு  சூரியன் மேஷம் மிதுனம் சிம்மம் தனசு  வீடுகளில் அமர்ந்தால் வலிமை பெற்று நல்ல பலன்களை கொடுப்பார்.

புதன் நிர்வகிக்கும் வீடு  2 – 11

லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த கன்னியின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.

சிம்மம்

2மிடத்து அதிபதியாக புதன் வருவதால் கல்விக்கான  லக்னம் என்றே குறிப்பிடலாம். 

இவர்கள் பொது அறிவினை கொண்வர்களாக அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளவர்களாகவும் சொந்த முயற்சியில் பொருள் ஈட்டுபவர்களாகவும் இருப்பார்கள்.  

பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் புதன் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று  விடுகிறது

பதினொன்றாம் வீடு லாப ஸ்தானம் என்றாலும் முன் கர்மா விவரங்களையும் தரக் கூடிய இடமாகும். முன் ஜென்மத்தில் கல்வியில் விட்ட குறையை நிவர்த்திக்க பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.

 புதன் மேஷம் மிதுனம் கன்னி ரிஷபம் சிம்மம் தனசு வீடுகளில் அமர்ந்திருந்தால்  கெடு  பலன்களை குறைத்துக் கொள்வார். நன்மைகளை செய்வார்.

சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 3 – 10

லக்னத்தின் 3 மற்றும் 10ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் இவர்களுக்கு தீமை  செய்பவர்.

இந்த லக்னத்தாருக்கு  கடும் பாபியான இவர் கடுமையான நெருக்கடிகளை உத்யோகம் தொழிலில் காண்பிக்க தவறுவதில்லை.  

3மிடமானது சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.  

சுக்கிரன் பத்தும் சொந்தம் பெற்றதால்  தொழிலில் உத்யோகத்தில் இவர்கள் சாதுர்யங்களை செயல்படுத்தி மற்றவர்களை திணற அடிப்பதில் வல்லவர்கள்.

சுக்கிரன் மேஷம் மிதுனம் கடகம் துலாம் தனசு மீனம்   வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன் குறைந்த நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்துவார்.

சிம்மம் சீறுமா அடங்குமா ?  – Perfect   Master  life of Leo  planets 2

செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 4 – 9

லக்னத்திற்கு 4 மற்றும் 9ம் அதிபதி செவ்வாய்.

வீடு வாகனம் நிலம் என சுக போகங்களை அடையாளம் காட்டும் வீடான 4மிடத்தின் அதிபதியான செவ்வாய் மற்றெந்த லக்னக்காரர்களைக் காட்டிலும் இவர்களுக்கு வசதி வாய்ப்பினை கொடுத்து அழகு பார்க்கிறார்.

ஆனால் செவ்வாய் 9ம் வீடென்னும் ஸ்திர லக்ன பாதகாதிபதயாகவும் வருவதால் சொத்து சுகம் இவர்களுக்கு பயன்படாது மற்றவர்களால் அனுபவிக்க நேரிடும்.

பொதுவாக செவ்வாய் மேஷம் விருச்கிகம் ரிஷபம் மிதுனம் தனசு மகரம்  வீடுகளில் அமர்ந்தால் நன்மையான பலன்களை தருகிறார்.  

லக்னத்திற்கு செவ்வாய் 4ம்  வீட்டில் அல்லது 10ல்   ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  ருசக யோகம் தருகிறது.

ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு

செவ்வாயினை பொருத்த மட்டில்  இந்த லக்னத்தாருக்கு வலிமையான யோகத்தனை தரக்கூடியவர்.

கேந்திர கோணதிபதியான செவ்வாய் யோகங்களை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகும்.

குரு நிர்வகிக்கும் வீடுகள் 5 – 8

லக்னத்தின்  5 மற்றும் 10ம் அதிபதி செவ்வாய். இந்த லக்னத்திற்கு கேந்திர

இவர்களுடைய குழந்தைகளின்  வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய சுக்கிரன்  மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,

சிம்மம்

இவர்களுடைய முன் ஜென்ம பாவங்கள் கழிக்கப்பட வேண்டிய கர்மாக்களை தீர்மானிக்கக் கூடிய குரு மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,

பொதுவாக குரு மேஷம் விருச்சிகம் தனசு மீனம் மிதுனம் கடகம் வீடுகளில் பலம் பெறகிறார்.   நல்ல யோக பலன்களை வெளிப்படுத்துவார்.

எப்போதுமே பலம் இருக்கும் இடத்தில் பலவீனமும் இருக்கும். செவ்வாய் கேந்திரங்களில் கேந்திராதிபத்ய தோஷத்தினை தந்து சிரமம் கொடுத்து விடுவார்.

லக்னத்திற்கு குரு 5ம்  வீட்டில்    ஆட்சி பெற்றால்   பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  ஹம்ச யோகம் தருகிறது.

சனி நிர்வகிக்கும் வீடுகள்  6  7

லக்னத்திற்கு 6 என்னும் சத்ரு ஸ்தானம் 7 என்னும் களத்திரத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. இவர் 6 – 7 இரு வீடுகளின் பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.

பொதுவாக இரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகங்கள் இரு வேறு விதமாகத்தான் பலன்களை கொடுப்பார்கள்.

ஆனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மாரக தோஷத்தினையும் கொடுக்கும் பலத்தினையும் சனி பெற்றாலும் இந்த 7ம் வீட்டில் அமரும் தீய கிரகங்கள் கெடு பலனை செய்ய வலிமை பெறுகிறது.

இவர்களுக்கு சனி மேஷம் மிதுனம் கடகம் துலாம் மகரம் கும்பம்   வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.

லக்னத்திற்கு சனி  கும்பம் வீட்டில்   ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது.

ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களையும் பலவீனங்களையும் வென்றெடுத்து யோக பலன்களை கொடுப்பார்.

ராகு கேது

இந்த லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் விருச்சிகம் ரிஷபம் மிதுனம் கன்னி மகரம்  வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

சிம்மம் சீறுமா அடங்குமா ?  – Perfect   Master  life of Leo  planets 2

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் குரு செவ்வாய். இவர்கள் வலிமை பெற்றால் மந்திரி யோகம் கிடைத்து விடும். பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு சனி மற்றும் சுக்கிரனின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.