Virus

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

கடகம்  வெற்றிகளை குவிக்குமா ? –   Can Cancer succeed Notable  planets 2

 

கடகம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்

லக்னத்தின் அதிபதி சந்திரன்

சந்திரன் நிர்வகிக்கும் வீடுகள் 1

லக்னத்தின் 1ம் வீட்டு அதிபதியான இவருக்கு ஒரே வீடுதான் உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுக்கு எந்தவித குழப்பமின்றி தெளிவான முடிவெடுப்பதில்தான் இருக்கிறது,

லக்னாதிபதி பலம் பெற்றால் விரைவான முன்னேற்றம். லக்னாதிபதி பலமிழந்தால் மந்தமான முன்னேற்றம். பொதுவில் இந்த லக்னக்காரர்கள் சோடை போக மாட்டார்கள்.

இவர்களுக்கு சந்திரன் ரிஷபம் துலாம் கடகம் மீனம் வீடுகளில் அமர்ந்தால் வலிமை பெற்று நல்ல பலன்களை கொடுப்பார்.

சூரியன் நிர்வகிக்கும் வீடு  2

லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த சிம்மத்தின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.

கடகம்

2மிடத்து அதிபதியாக சூரியன் வருவதால் அரசு மற்றும் அரசியல் லக்னம் என்றே குறிப்பிடலாம்.  இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ அரசினோடு எந்தவிதத்திலாவது தொடர்பினை வைத்துக் கொள்ள நேரிடும். 

நாட்டின் அரசியல் பிரமுகர்கள் பலர் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள்தான் என்பது உண்மையாகும். அதற்கு காரணம் 10மிடமாக செவ்வாய் வீடு வருவதும் ஆட்சி அதிகாரத்தினை பிடிப்பதற்கு செவ்வாய் பலமான உதவிகளை செய்து விடுகிறார்

பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.

இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.

சூரியன் மேஷம் விருச்சிகம் ரிஷபம் சிம்மம் மீனம் வீடுகளில் அமர்ந்திருந்தால்  கெடு  பலன்களை குறைத்துக் கொள்வார். நன்மைகளை செய்வார்.

புதன் நிர்வகிக்கும் வீடுகள் 3 – 12

லக்னத்தின் 3 மற்றும் 12ம் பாவத்தின் அதிபதியாக வரும் புதன் இவர்களுக்கு தீமை  செய்பவர். இந்த லக்னத்தாருக்கு  கடும் பாபியான இவர் கடுமையான செலவினை கண்டபடி செய்ய வைப்பார்.

3மிடமானது சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும். ஆனால் புதன் விரையாதிபத்யம் பெற்றதால் இவர்களுடைய திட்டங்கள் இவர்களுக்கு பலனளிக்காது

புதன் மிதுனம் கன்னி ரிஷபம் தனச கும்பம்  வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன் குறைந்த நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்துவார்.

சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 4 – 11

லக்னத்திற்கு 4 மற்றும் 11ம் அதிபதி சுக்கிரன்.

வீடு வாகனம் நிலம் என சுக போகங்களை அடையாளம் காட்டும் வீடான 4மிடத்தின் அதிபதியான சுக்கிரன் மற்றெந்த லக்னக்காரர்களைக் காட்டிலும் இவர்களுக்கு வசதி வாய்ப்பினை கொடுத்து அழகு பார்க்கிறார்.

ஆனால் சுக்கிரன் 11ம் வீடென்னும் சர லக்ன பாதகாதிபதயாகவும் வருவதால் சொத்து சுகம் இவர்களுக்கு பயன்படாது மற்றவர்களால் அனுபவிக்க நேரிடும்.

பொதுவாக சுக்கரன் மிதுனம் கன்னி துலாம் மீனம் விருச்கிகம் கும்பம் வீடுகளில் அமர்ந்தால் நன்மையான பலன்களை தருகிறார்.  

லக்னத்திற்கு சுக்கிரன் 4ம்  வீட்டில்  ஆட்சி பெற்றால் அல்லது மீனத்தில் உச்சம் பெற்றால்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  மாளவ்ய யோகம் தருகிறது.

ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு

சுக்கிரனைப் பொருத்த மட்டில்  இந்த லக்னத்தாருக்கு வலிமையான யோகத்தனை தரக்கூடியவர்  இல்லை.

செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 5 – 10

லக்னத்தின்  5 மற்றும் 10ம் அதிபதி செவ்வாய். இந்த லக்னத்திற்கு கேந்திர

கோணதிபதியான செவ்வாய் யோகங்களை அள்ளித்தரும் அட்சய பாத்திரமாகும்.

இவர்களுடைய குழந்தைகளின்  வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய சுக்கிரன்  மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,

பத்தாமிடத்தின் அதிபதியாக வருவதால் தொழில் உத்யோகத்தினை அடையாளம் காட்டும் மிக முக்கியமான வீடாகவும் செவ்வாய் உரிமை பெற்றதால் உயர்ந்த அல்லது செல்வாக்கான மனிதர்களாக இவர்களை இந்த லக்னம் உயர்த்திக் காட்டுகிறது,

பொதுவாக செவ்வாய் மேஷம் விருச்சிகம் சிம்மம் மீனம் கன்னி  ரிஷபம் வீடுகளில் பலம் பெறகிறார்.   நல்ல யோக பலன்களை வெளிப்படுத்துவார்.

எப்போதுமே பலம் இருக்கும் இடத்தில் பலவீனமும் இருக்கும். செவ்வாய் கேந்திரங்களில் கேந்திராதிபத்ய தோஷத்தினை தந்து சிரமம் கொடுத்து விடுவார்.

குரு நிர்வகிக்கும் வீடுகள்  6 9

இந்த லக்னத்திற்கு  பாக்கியம் வாழ்க்கை எதிர்கொள்ளல் என வாழ்வின் மிக முக்கியமான விவரங்களை அடையாளம் காட்டும் வீடுகளான 6 மற்றும் 9ம் வீடுகள் இரண்டுக்குமே குருவே அதிபதி என்பதால் இந்த லக்னக் காரர்களின் பார்வை முழுவதும் இவர்களிடமே இருக்கும்.

கடகம்

இவர்களுக்கு குரு 9மிடம் பாக்கியம் சிறப்பாக அமைந்தவர்கள் அரசியலில் மிக உன்னதமான நிலைக்கு வந்திருக்கிறார்கள். பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்த லக்னத்ததாருக்கு பெரும் இடமிருக்கிறது,

குரு வலிமை பெற்றால் நல்ல பலன்களை கொடுக்கும். ஆனால் 6மிடமும் வலு பெற்று எதிரிகள் கையில் பலம் சென்றுவிடும்.

பாக்கியாதிபதியாக வரும் குரு சொத்துக்களை வாங்கி குவிக்க வைப்பார். இவர்களுக்கு யோகத்தனை தருவதில் இவரே முன் வந்து நிற்பார்.

குரு  மேஷம் விருச்சிகம் கடகம் தனசு மீனம் சிம்மம் துலாம் வீடுகளில் மென்மையான பலன்களை கொடுக்கக்கூடியவர்.

லக்னத்திற்கு குரு கடகத்தில்  வீட்டில் உச்சம்  பெற்றால் அல்லது மீனத்தில் ஆட்சி  பெற்றால்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான  ஹம்ச யோகம் தருகிறது.

சனி நிர்வகிக்கும் வீடுகள்  7 8

லக்னத்திற்கு 8 என்னும் ஆயுளையும் 7 என்னும் களத்திரத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. இவர் 7 – 8 இரு வீடுகளின் பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.

பொதுவாக இரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகங்கள் இரு வேறு விதமாகத்தான் பலன்களை கொடுப்பார்கள். ஆனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  கர்மா கிரகம் சனியேயாவார்.

இவர்களுடைய முன் ஜென்ம பாவங்கள் கழிக்கப்பட வேண்டிய கர்மாக்களை தீர்மானிக்கக் கூடிய சனி மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது

இவர்களுக்கு சனி மேஷம் மிதுனம் தனசு கும்பம்   வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.

லக்னத்திற்கு சனி  மகரம் வீட்டில்   ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது. ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களையும் பலவீனங்களையும் வென்றெடுத்து யோக பலன்களை கொடுப்பார்.

இந்த லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  ரிஷபம் மிதுனம் தனசு  வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் குரு செவ்வாய். இவர்கள் வலிமை பெற்றால் மந்திரி யோகம் கிடைத்து விடும். பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?

ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.

அதாவது இந்த லக்னத்தாருக்கு சனி மற்றும் சுக்கிரனின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

 

ஒரு நல்லவனைக்  கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.