லக்ன யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
ரிஷபம் ஆளும் லக்னம் – Taurus Dominate Life Points 2
ரிஷபம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்
லக்னத்தின் அதிபதி சுக்கிரன்
சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 1 – 6
லக்னத்தின் 1 மற்றும் 6ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையும் தீமையும் கலந்தே செய்பவர். 1ம் ஆதிபத்யதில் நன்மையான பலன்களை தருவார். 6ம் ஆதிபத்த்தில் தீய பலன்களை தருபவர்.
லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெற்றாலும் பலவீனம் பெற்றாலும் நல்லவை தீயவை கலந்த பலன்களாகவே கிடைக்கும்.
லக்னத்தின் 1 மற்றும் 6ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.
லக்னத்திற்கு சுக்கிரன் ரிஷபம் வீட்டில் ஆட்சி பெற்றாலும் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 11ல் சுக்கிரன் பலம் பெறுவது நல்ல யோகமே.
சுக்கிரன் ரிஷபம் துலாம் மகரம் கும்பம் மீனம் வீடுகளில் அமர்ந்திருந்தால் நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்தார்.
செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 7 – 12
லக்னத்தின் 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய். 7மிடமான விருச்சிகம் இவர்களுடைய களத்திரம் பற்றிய செய்திகளை தெரிவிக்கக் கூடியது, ரிஷபம் லக்னத்தின்12ம் வீடானது விரையத்தினை அடையாளம் கட்டக் கூடியது,
இவர்களுடைய இல்லற வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,
செவ்வாய் ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார். செவ்வாய் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும் செய்வார்.
பொதுவாக செவ்வாய் மேஷம் விருச்சிகம் துலாம் தனசு மீனம் கடகம் மகரம் கும்பம் வீடுகளில் பலம் பெறகிறார்.
லக்னத்திற்கு செவ்வாய் விருச்சிகம் வீட்டில் ஆட்சி பெற்றால் அல்லது மகரத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசகயோகம் தருகிறது.
செவ்வாய் உச்சம் பெறும் வீடான மகரத்தில் நல்ல பலன்களை தெளிவாக கொடுக்கிறார். செவ்வாய் பத்தில் கும்பத்தில் திக்பலம் பெறுவதால் வலிமையான பலன்களை கொடுக்க தவறுவதில்லை.
புதன் நிர்வகிக்கும் வீடுகள் 2 – 5
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது, இதன் அதிபதி புதன்.
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5ம் வீடு என்னும் பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய முக்கியமான பங்களிப்பினை தருகிறது, இதன் அதிபதி புதன்.
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்ன 8க்கு 8மிடமான 2மிடமானது மாரகத்தினை தரும் இடமாகிறது, ரிஷப லக்னத்தின் மாரகாதிபதி புதனும் 8மிடத்திற்கு விரைய பாவ அதிபதியான செவ்வாயும் ஆவர்.
ஆனால் புதன் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை. அதற்கு பதிலாக 2 மற்றும் 7ம் வீடுகளில் அமர்ந்த தீய கிரகங்கள் அந்த மாரக பலனை எடுத்துக் கொண்டு மாரக தோஷத்தனை செய்துவிடும். குறிப்பாக செவ்வாய் 7 மற்றும் விரையபாவ அதிபதியாக வருவதால் செவ்வாய் மிக அதிகமான மாரக பலம் பெறுகிறார்.
லக்னத்திற்கு புதன் மிக மிக முக்கியமான நன்மை தரும் கிரகமாகும். புதன் கன்னி மிதுனம் சிம்மம் ரிஷபம் மகரம் கும்பம் வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.
லக்னத்திற்கு புதன் ரிஷபம் வீட்டில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்திரை யோகம் தருகிறது.
சந்திரன் நிர்வகிக்கும் வீடுகள் 3
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மன உறுதியினை கொடுக்கும் இடமான 3மிடம் வலுவாக இருக்க வேண்டும். இவர்களுக்கு 3மிடத்து அதிபதியாக சந்திரன் வருவதால் அடிக்கடி எண்ணங்களை மாற்றிக் கொள்பவராகவே இவர்கள் இருப்பார்கள்.
சந்திரன் இவர்களுக்கு கடகம் ரிஷபம் துலாம் தனசு மீனம் வீடுகளில் அமர்ந்திருந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.
சூரியன் நிர்வகிக்கும் வீடுகள் 4
லக்னத்தில் கேந்திர ஸ்தானமான 4ம் வீடானது மன நிம்மதி வாகனம் வீடு தாயார் என முக்கியமான பலன்களை தெரிவிக்கும் இடமானது வலிமையான இருந்தால் வாழக்கையில் மிக முக்கியமான பலன்களை பெற்று விடலாம்.
லக்னத்திற்கு கேந்திராபதியான சூரியன் சிம்மம் கன்னி மகரம் கும்பம் மீனம் ஆகிய இடங்களில் வலிமை பெற்று உதவிகளை தாராளமாக கொடுக்கக் கூடியவர்.
குரு நிர்வகிக்கும் வீடுகள் 8 11
லக்னத்திற்கு முன் கர்மாவினை அடையாளம் காட்டும் வீடுகளான 8 மற்றும் 11ம் வீடுகள் இரண்டுக்குமே குருவே அதிபதி என்பதால் ரிஷப லக்னக் காரர்களின் அதி பயங்கர எதிரி என்றே சொல்லலாம்.
முன்கர்மா கிரகம் குரு கர்மாவினை கழிப்பதற்காக வாழ்க்கையில் கடுமையான பாதைகளை கொடுத்து சோதனைகளையும் வேதனைகளையும் கொடுப்பார்.
குரு வலிமை பெற்றால் பின்னடைவான பலன்களை கொடுக்கும். குரு வலிமையிழந்து அமர்ந்தால் கெடு பலன்கள் குறைந்து விடும்.
குரு துலாம் தனசு மீனம் மேஷம் வீடுகளில் மென்மையான பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனி நிர்வகிக்கும் வீடுகள் 8 11
ரிஷபம் லக்னத்திற்கு 9 என்னும் பாக்கியத்தினையும் 10 என்னும் தொழிலினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. இவர் 9 – 10 இரு வீடுகளின் பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.
ஆனால் சனி இவர்களுக்கு ஸ்திர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே அந்த தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்.
பொதுவாக இரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகங்கள் இரு வேறு விதமாகத்தான் பலன்களை கொடுப்பார்கள். ஆனால் யோகமளிக்கும் அற்புதமான கிரகம் சனியேயாவார்.
ரிஷபம் லக்னத்திற்கு சனி ரிஷபம் துலாம் மகரம் கும்பம் கன்னி சிம்மம் மீனம் வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.
ரிஷபம் லக்னத்திற்கு சனி மகரம் கும்பம் வீட்டில் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது. ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களையும் பலவீனங்களையும் வென்றெடுத்து யோக பலன்களை கொடுப்பார்.
ரிஷபம் லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது கடகம் துலாம் மகரம் கும்பம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.
கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்
ரிஷபம் லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் சனி என்றாலும் சனி சுக்கிரன் இருவருமே இரு ஆதிபத்யம் பெற்றதால் நன்மைகள் செய்யும் போது தீய பலன்களும் இணைந்தே வரும்.
பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.
கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.
ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?
ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.
அதாவது ரிஷப லக்னத்தாருக்கு குருவின் தாக்கம் முக்கயமான இடங்களில் இருக்கக் கூடாது, இவர் குடும்பம் களத்திரம் தொழில் இங்கு வந்தமர்ந்தால் ஜாதகரின் நிலை பரிதாபம்தான்.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்