லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

மேஷம் ஆச்சர்யமான லக்னம் – Aries Amazing Yogam  5

மேஷ லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்

மேஷ லக்னத்தின் அதிபதி செவ்வாய்

லக்னத்தின் 1 மற்றும் 8ம் பாவத்தின் அதிபதியாக வரும் செவ்வாய் நன்மையும் தீமையும் கலந்தே செய்பவர்.

1ம் ஆதிபத்யதில் நன்மையான பலன்களை தருவார். 8ம் ஆதிபத்த்தில் தீய பலன்களை தருபவர்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் பலம் பெற்றாலும் பலவீனம் பெற்றாலும் நல்லவை தீயவை கலந்த பலன்களாகவே கிடைக்கும். 

பொதுவாக செவ்வாய் மேஷம் விருச்சிகம் சொந்த வீடுகளில் பலம் பெறகிறார்.

  மேஷ லக்னத்திற்கு  மறைவிட வீடுகளான மிதுனம் கன்னியில் நல்ல பலன்களை கொடுக்கிறார். செவ்வாய் உச்சம் பெறும் வீடான மகரத்தில் நல்ல பலன்களை தெளிவாக கொடுக்கிறார்.

மேஷ லக்னத்திற்கு செவ்வாய் மேஷத்தில்   ஆட்சி பெற்றாலும் மகரத்தில்  உச்சம் பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் தருகிறது

மேஷ லக்னத்தின் 2 மற்றும் 7ம் அதிபதி சுக்கிரன். மேஷ லக்னத்தினைப் பொருத்த மட்டில் சுக்கிரனே மிக முக்கியமான கிரகமாகும்.

இவர்களின் வாழ்க்கையின் போக்கினையே மாற்றும் வல்லமை படைத்தவராக சுக்கிரன் இருக்கிறார். 

சுக்கிரன் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார்.  சுக்கிரன் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும்  செய்வார்.

அற்பதம்

லக்னத்தின் 2 மற்றும் 7ம் பாவத்தின் அதிபதியாக வரும் சுக்கிரன் நன்மையை தரும் கிரகமாகும்.

 மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் துலாம் வீட்டில்   ஆட்சி பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது. ஆனால் 7ல் சுக்கிரன் பலம் பெறுவது நலமான அமைப்பல்ல.

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் வீடு என்னும் குடும்பம் மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7ம் வீடு என்னும் கணவன் மனைவி உறவென்னும்  மிக முக்கியமான பங்களிப்பினை தருகிறது,

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சர லக்ன மாரகாதிபதி சுக்கிரனே ஆவார். ஆனால் இவர் பெரும்பாலும் மாரகத்தினை தருவதில்லை. அதற்கு பதிலாக 2 மற்றும்  7ம் வீடுகளில் அமர்ந்த தீய கிரகங்கள் அந்த மாரக பலனை எடுத்துக் கொண்டு மாரக தோஷத்தனை செய்துவிடும்.

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் பலம் பெறாமல் மிதமான பலத்தில்  இருப்பது விசேடம். ரிஷபம் கடகம் தனசு மீனம்  வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3ம் வீடு மற்றும் 6ம் வீடு ஆகிய இரண்டு வீடுகளின் அதிபதி புதன். இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பின்னடைவான பலன்களை தரக் கூடியவர் புதன்.

இவர்களுக்கு புதன் எந்தவிதத்திலும் உதவி நினைக்காதவர். மேஷ லக்னத்தின்  பலன்  தரும் அட்சய பாத்திரமான சுக்கிரனையே தன் வீட்டில் நீச்சம் செய்யவைத்து அழ வைப்பவர்.

மேஷ லக்னத்திற்கு புதன் எங்கிருந்தாலும் எதாவது ஒரு பிரச்னை தந்து விடுவார். குறிப்பாக இவர் 2 என்னும் குடும்பத்தில் அமர்ந்தாலும் 7 என்னும் களத்திர பாவத்தில்  அமர்ந்தாலும் 10 என்னும் தொழிலில்  அமர்ந்தாலும் மொத்தமாக பாதித்து விடுவார்.

மேஷ லக்னத்திற்கு புதன் மிதுனம் கன்னி விருச்சிகம்  ஆகிய இடங்களில் அமர்ந்தால் மிதமான பலன்களை வெளிப்படுத்தக் கூடியவர்.

மேஷம் ஆச்சர்யமான லக்னம்

மேஷ லக்னத்திற்கு 4மிடத்தின் அதிபதியான சந்திரன் ரொம்ப ரொம்ப ப்ரண்லியான ஆபத்துக்கு ஒடி வரக் கூடிய கிரகமாகும்.  இவர் எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்யக் கூடியவர்.

மேஷ லக்னத்திற்கு யோகர் வீடுகளான சிம்மம் தனசு ரிஷபம்  தன் சொந்த வீடான கடகம் ஆகிய இடங்களில் வலிமை பெற்று உதவிகளை தாராளமாக கொடுக்கக் கூடியவர்.

மேஷ லக்னத்திற்கு பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியான சூரியன் அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்.

மேஷ லக்னத்திற்கு யோகர் வீடுகளான சிம்மம் தனசு ஆகிய இடங்களில் வலிமை பெற்று உதவிகளை தாராளமாக கொடுக்கக் கூடியவர்.

மேஷ லக்னத்திற்கு பாக்கியத்தின் உரிமையாளரான குரு விரையமென்னும் 12ம் வீட்டின் சொந்தக்காரராக இருப்பதால் இரு வீட்டு பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.

மேஷ லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானதிபதியான குரு அற்புதமான யோகமளிக்கும் கிரகமாகும்.

குரு வலிமையடைந்தால் 9 – 12 இரு வீடுகளும் பலம் பெற்றுவிடும். குரு வலிமையடைந்தால்  ஜாதகருக்கு சொத்துக்கள் பெருமளவில் சேரும். ஆனால் பெரும் செலவாளியாக இருக்க நேரிடும். சிலசமயம் சொத்துக்கள் கரைந்து போகவும் வாய்ப்பிருக்கும்.

மேஷம்

பொதுவாக இரு ஆதிபத்ய கிரகங்கள் வலிமையடைந்தால் அந்த கிரகமானது சொந்தமாகும் இரண்டு வீட்டு பலன்களையும் கலந்தே கொடுப்பார்.

மேஷ லக்னத்திற்கு யோகர் வீடுகளான சிம்மம் தனசு மற்றும் உச்சமடையும் இடமான கடகம்  ஆகிய இடங்களில் வலிமை பெற்று உதவிகளை அள்ளிக்  கொடுக்கக் கூடியவர்.

மேஷ லக்னத்திற்கு குரு தனசு வீட்டில்   ஆட்சி பெற்றாலும் கடகத்தில்  உச்சம் பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகம் தருகிறது

மேஷ லக்னத்திற்கு 10 என்னும் தொழிலையும் 11 என்னும் லாபத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. இவர் 10 – 11 இரு வீடுகளின் பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.

ஆனால் சனி இவர்களுக்கு சர லக்ன பாதகாதிபதியாக வருகிறார். எனவே  தொழிலை உத்யோகத்தினை வளம் பெற வைக்கும் சனியே அந்த தொழில் உத்யோகத்தினை வைத்தே பாதகத்தினையும் செய்ய துணிவார்.

பொதுவாக இரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகங்கள் இரு வேறு விதமாகத்தான் பலன்களை கொடுப்பார்கள்.

மேஷ லக்னத்திற்கு சனி பலம் பெறாமல் இருப்பது விசேடம். விருச்சிகம் மிதுனம் கன்னி மீனம் வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.

மேஷ லக்னத்திற்கு சனி மகர வீட்டில்   ஆட்சி பெற்றாலும் துலாத்தில்  உச்சம் பெற்றாலும்  பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது

மேஷ லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது  மேஷம் கடகம் துலாம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.

கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்

மேஷ லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் எதுவும் இல்லை.  செவ்வாய் புதன் சனி மூவரும்  6 வீடுகள் பலன்களை பலமிழக்க செய்து விடுகிறார்கள்.

குரு சுக்கிரன் தனது பங்கிற்கு 4 வீடு பலன்களை பலம் பெறுவதை பொருத்தே பலன்கள்.

இறுதியாக சூரியன் சந்திரன் 2 வீட்டு அதிபதிகளும் பலன்களை கொடுப்பார்கள். ஆனால் சந்திரனுக்கு !0 வருடமும் சூரியனுக்கு 6 வருடமும் என மொத்ததமெ 16 வருடங்கள்தாம். ஆனால் இவர்கள் பலம் பெற வேண்டும்.

மேஷம் ஆச்சர்யமான லக்னம்

பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.

கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.