Virus

கொரானா ஏன்

Sri Mahalakshmi Upasagar

 கொரானா மிரட்டுகிறதா ? Will corona Targeted ? Points 5 

மிரட்டும்  ராகுவும் கொரானாவும் உலகினை அச்சத்தில் கொண்டு சென்றதற்கு  யார் காரணம் என்று ஜோதிட ரீதியாக ஆராயந்தால் கண்ணை மூடிக்கொண்டு ராகு என்று சொல்லிவிடலாம்.

கேதுவும் ராகுவும் இணைந்து விளையாடி எப்படி உலகினை மிரட்டினார்கள் என்று இப்போது பார்ப்போம்.

ராகு எப்போதெல்லாம் மிதுனத்திற்கு வருகிறாரோ அப்போதெல்லாம் உலகில் எதாவது ஒரு பிரச்னை வந்து விடுகிறது

கலியுக லக்னம் என்று சொல்லப்படக்கூடிய தனசுவிற்கு அப்போது கேது வந்து கடுமையான பிரச்னைகளை கொடுப்பார்.

கேது தனசு ராகு மிதுனம் உலகின் பெரும்பாலான பிரச்னைகளுக்கு காரணமாகும்.

ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்று விதமான லக்னங்கள்.

ஆக்கல் லக்னங்கள் மேஷம் கடகம் துலாம் மகரகம்

காத்தல் லக்னங்கள் ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம்

அழித்தல் லக்னங்கள் மிதுனம் கன்னி தனசு மீனம்

அழித்தல் லக்னங்கள்  மிதுனம் கன்னி தனசு மீனம் ஆகிய நான்கு வீடுகளில் ராகு கேது வந்தமர்ந்து செவ்வாய் சுக்கிரன் சனி தொடர்பில்  உலகின் விபரீதங்கள் மிரட்டும்.

ராகு மிதுனம் கேது தனசு என்ற நிலையில் சனியின் தொடர்பு அல்லது செவ்வாயின் தொடர்பினை பெற்றால் நிலமை விபரீதம் என்று சொல்லிவிடலாம்.

கேதுவும் ராகுவும்  விளையாடிய விளையாட்டினைப் பார்ப்போம்.

ராகு மிதுனத்திற்கு வந்த பின் உலகின் நிம்மதி குறைந்து பலவிதமான பதட்டங்கள் காணப்படுகிறது.

ராகு மிதுனத்தில் நடமாடும் காலமான 22.9.2020 வரை  கொரானாவின் தீவிரம் உலகில் இருக்கத்தான் செய்யும்.

23.9.2020 ராகு மிதுனத்தினை விட்டு ரிஷபத்திற்கு வந்து விட்டால் ராகுவின் வீர்யமானது குறைந்து போகும். கொரானாவின் பாதிப்பும் குறையும்.

23.9.2020  முதல் ராகு மிதுனத்தனை விட்டு விலகிய பின் உலக நாடுகளில் கொரானாவின் தீவிரமானது குறைய தொடங்கும். கொரானா மெல்ல கட்டுக்குள் வர துவங்கும். ஆனால் கொரானாவானது முற்றிலும் அகலாது.

ராகு மிதுனத்தினை விட்டு அகன்றாலும் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு இருப்பதால் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் வரை பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

அதற்கு காரணம் மிருகசீரிடம் நட்த்திரமானது ரிஷபத்தில் இரண்டு பாதமும் மிதுனத்தில் இரண்டு பாதங்களும் இருக்கின்றன. மிதுனமானது அழித்தல் லக்னமாகும். செவ்வாய் அழித்தல் கிரகமாகும்.

எனவே ராகு மிதுனத்தில் செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிடத்தில் நடமாடும் வரையில் கொரானா தீவிரம் காட்டும். 

மிதுனத்தினை விட்டு ராகு அகன்றாலும் ரிஷபத்தில் இருக்கும் மிருகசீரிடத்தின் இரண்டு பாதங்களில் ராகு நடமாடிக் கொண்டிருப்பார்.

ராகு ரிஷபத்திலிருக்கும் போது செவ்வாய் நட்சத்திரமான மிருகசீரிடம் விட்டு 26.1.2021ல் நகர்ந்து ரோகிணிக்கு செல்வார்.

எனவே 26.1.2021க்கு பின்னரே இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரானா  உலகினை விட்டு முழுவதுமாக அகலும்.

26.1.2021க்கு பின்னர் கொரானாவானது தனது வீர்யம் குறைந்து மெல்ல காணாமல் போகும். ஆனால் மெல்ல மெல்லதான் இந்த நிகழ்வினை காண முடியும்

சுக்கிரனை விரட்டும் செவ்வாய்

சுக்கிரன் செவ்வாய் இரண்டு கிரகங்களும் பூமிக்கருகில் சூரியனை சுற்றி வரும் கிரகங்களாகும்.  சுக்கிரன் பலமிகுந்த கிரகமாகும் செவ்வாய் வீர்யமிக்க கிரகமாகும். சுக்கிரனை  செவ்வாய் பார்க்கும் வண்ணம் கிரக அமைவிடங்கள் ஏற்படும்போத உலகில்  விபரீத நிகழ்வுகள் ஏற்படுகிறது

செவ்வாய் சுக்கிரன் தொடர்பானது எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ராகு தனது கூட்டாளி கேதுவோடு சேர்ந்து கொண்டு சுக்கிரன் செவ்வாயின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டால்   உலகில் விபரீதங்களை அரங்கேற்றும்.

கொரானா

மிதுன ராகு தனசு கேது இவர்களை சனி செவ்வாய் பார்வையிட்டாலும் உலகில் கடுமையான நிகழ்வுகள் ஏற்படுகிறது,

குறிப்பாக போர் பதற்றம் பூகம்பம் ஏற்பட்டு அழிவு மழையினால் பெரு வெள்ளம் போன்ற பேரிடர்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது,

உலகில் பலநாடுகளில் போர் பதற்றமானது இருக்கிறது, உலகம் முழுவதும் கொரானா தாக்கம் இருக்கிறது, சில நாடுகளில் மழை வெள்ளம் அதிகரித்து மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது,

சில நாடுகளில் பூகம்பங்கள் ஏற்பட்டு அழிவினை தந்து கொண்டிருக்கிறது,

16.12.2019ல் செவ்வாய் துலாத்திலிருக்கும் போது மகரத்தில்  சுக்கிரன் நடமாடிக் கொண்டிருந்தார். சுக்கிரனை 4ம் பார்வையாக செவ்வாய் துலாத்திலிருந்து பார்வையிடும்போது ராகு கேதுவின் தொடர்பில் உலகில் கொரானா பிரச்னை தொடங்கியது .

9.1.2020ல் செவ்வாய் விருச்சிகத்திலிருக்கும் போது கும்பத்தில்  சுக்கிரன் நடமாடிக் கொண்டிருந்தார். விருச்சிக செவ்வாய் சுக்கிரனை  பார்வையிடும்போது ராகு கேதுவின் தொடர்பில் கொரானா தீவிரமானது அதிகமாகியது.

8.2.2020ல் செவ்வாய் தனசுவில் அமர்ந்து இருந்தார்.  மீனத்தில் சுக்கிரன் நடமாடிக் கொண்டிருந்தார். மீன சுக்கிரனை  செவ்வாய் பார்வையிடும்போது ராகு கேதுவின் தொடர்பில் கொரானா அதி தீவிரமாக மாறியது,

23.3.2020ல் செவ்வாய் மகரத்தில் அமர்ந்து இருந்தார் மேஷ சுக்கிரன் நடமாடிக் கொண்டிருந்தார். மேஷ சுக்கிரனை செவ்வாய் பார்வையிடும்போது ராகு கேதுவின் தொடர்பின்போது ராகு கேதுவின் தொடர்பில் கொரானா மிக அதி தீவிரமாக மாறியது

5.5.2020ல் செவ்வாய் கும்பத்தில் அமர்ந்து இருந்தார். ரிஷபத்தில் சுக்கிரன் நடமாடிக் கொண்டிருந்தார். ரிஷப சுக்கிரனை செவ்வாய் பார்வையிடும்போது ராகு கேதுவின் தொடர்பில் கொரானா மேலும் கடுமையாக மாறியது.

இதன் பின்னனில் ராகு மிதுனத்தில் கடுமையாகவே நடந்து கொண்டு வருகிறார். அதற்கு பின்னிருந்து செவ்வாய் சுக்கிரன் தொடர்பானது கொரானாவின் தீவிரத்ததால் உலக மக்களை பாடாய் படுத்துகிறது

செவ்வாய் மீனத்திலிருக்கும்போது சுக்கிரன் செவ்வாய் தொடர்பானது இல்லை. ஆனால் ராகு கேது செவ்வாய் கூட்டணியில் கொரானா உலக மக்களை வெகுவாக மிரட்டிக் கொண்டிருக்கிறது

ஆனால் 1.8.2020 அன்று சுக்கிரன் மிதுனத்திற்கு இடம் மாறுவார்.

சுக்கிரன் ராகு சேர்க்கையானது மிதுனத்தில் இருக்கும் போது மீனத்திலிருந்து செவ்வாயின் பார்வையினை இருவரும் பெறுவார்கள்.  இது கொரானாவின் தாக்கத்தினை அதிகப்படுத்தும் அமைப்பாகும்.

மீனத்தில் செவ்வாய் அமர்ந்து மிதுனதத்தில்  அமர்ந்திருக்கும்  சுக்கிரன் ராகுவினை பார்வையிடும் கால கட்டமானது 1.8.2020 முதல் 16.8.2020 வரையில்   கொரானா தாக்கமானது மிக மிக கடுமையாக இருக்கும்.

17.8.2020 அன்று செவ்வாய் மீனத்தலிருந்து இடமாறி மேஷத்திற்கு வந்த செவ்வாயின் பார்வையானது சுக்கிரன் ராகுவிற்கு விழாது, அதன்  பின் செவ்வாய் சுக்கிரன் ராகு தொடர்பானது துண்டிக்கப்படுவதால் 18.8.2020க்கு பின் உலகில் கொரானா பாதிப்பானது குறைவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கும்.

23.9.2020க்கு பின் அதாவது ராகு மிதுனத்தினை விட்டு விலகிய பின் கொரானா தாக்கத்தில் முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும்.

26.1.2021க்கு பின்  அதாவது ராகு ரிஷபத்தில் இருக்கும் போது மிருகசீரிடம் நட்சத்திரலிருந்து நகர்ந்து ரோகிணிக்கு சென்று விடுவார். அப்போது உலகில்  கொரானா தாக்கம் குறையும்.

 யார் காரணம் 

கொரானா தாக்கத்திற்கு முக்கியமான காரணங்கள்

  • ராகு
  • கேது
  • செவ்வாய்
  • சுக்கிரன்
  • சனி

இந்த கிரகங்களின்  தொடர்பில் எவராலும் கட்டுபடுத்த முடியாத நிகழ்வுகள் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது

மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Shophttps://gokulamastrology.com/shop/ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.