விருச்சிகம்

திருமண யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

திருமணம் மகிழ்ச்சி தருமா ?

ஓருவருடைய ஜாதகத்தில் திருமணம் மகிழ்ச்சி தருமா ? என்பதை திருமணத்தினை குறிக்கும் வீடுகளான 7ம் வீடு மற்றும் திருமணத்தினை குறிக்கும்  கிரகங்களான சுக்கிரன் செவ்வாய் பலத்தினை பார்வையிட வேண்டும்

இவர்கள் நலமுடன் அமைந்திருக்கிறார்களா என  ஆய்விட்டால்தான் திருமண வாழ்க்கை இணிக்குமா கசக்குமா என சொல்ல முடியும்.

எவரொருவருக்கும் முழுமையான திருமணம் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்றும் சொல்லிவிட முடியாது,

ஓருவருடைய ஜாதகத்தில் திருமணம் மகிழ்ச்சி யோகமானது  இணிக்கும் என்றோ கசக்கும்  என்றோ சொல்லிவிட முடியாது

விருந்து என்றாலே அறுசுவை இருக்க வேண்டும். மண வாழ்க்கையும் இப்படித்தான் அனைத்து விதமான சுவைகளுடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு லக்னமாக திருமண மகிழ்ச்சியின் பலம் மற்றும் பலவீனங்களை பார்ப்போம்.

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு 7ம் அதிபதி சுக்கிரன்  2 மற்றும் 7ம் வீடுகளுக்கு உரியவர் என்பதால் குடும்பத்தினை நேர்த்தியாக வைத்துக் கொள்வதில் சுக்கிரன் பங்கு அதிகமாகும். லக்னாதிபதியான செவ்வாய் சுக்கிரன் இருவருமே சம பலத்தில் இருப்பதால் விட்டு கொடுத்து போவார்கள்

ரிஷபம் லக்னம்

ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் துணை அதிக செலவினை செய்யக் கூடியவராகவும் ஆடம்பரமாக வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். சுக்கிரன் செவ்வாய் இருவருமே சம பலத்தில் இருப்பதால் விட்டு கொடுத்து போவார்கள்.

மிதுனம் லக்னம்

மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக குரு வருவுதுடன் பாதக ஸ்தானமாகவும் வருகிறது.  துணையினை நேசிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் துணையின் முழுமையான ஒத்துழைப்பினை பெறுவதில் சிரமம் காண்பார்கள்.  லக்னாதிபதியான புதன் 7மிட அதிபதியோடு அனுசரித்து போவார்கள்

கடகம் லக்னம்

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக சனி வருவதால் கடுமையான உழைக்கக் கூடிய துணை கிடைக்கும். சனி 8ம் வீட்டு கர்மா கிரகம் என்பதால் கர்மாவினை கழிப்பதற்காக கடக லக்னத்தாருக்கு துணையாக வருகிறார்கள். லக்னாதிபதியும் 7மிட அதிபதி சனியும் ஒத்து வோர்கள்

சிம்மம் லக்னம்

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக சனி வருவதால் கடுமையான உழைக்கக் கூடிய துணை கிடைக்கும். 6மிடத்து தொடர்பும் சனிக்கிருப்பதால் வாழ்க்கை பயணத்தில் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். துணையின் ஒத்துழைப்பிற்கு சிரமம் காண்பார்கள்

கன்னி லக்னம்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக குரு  வருவதால் நல்ல சுகவாசியான துணைதான் ஆடம்பரம் வசதி வாகனம் விரும்புவராக இருப்பார். லக்ன அதிபதி புதன் மற்றும் துணையின்  லக்ன அதிபதி குரு சம பலத்தில் இருப்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து போவார்கள்

துலாம் லக்னம் 

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக செவ்வாய்  வருவதால்  2 மற்றும் 7ம் வீடுகளுக்கு உரியவர் என்பதால் குடும்பத்தினை நேர்த்தியாக வைத்துக் கொள்வதில் செவ்வாய் பங்கு அதிகமாகும். லக்னாதிபதியான  சுக்கிரன் செவ்வாய் இருவருமே சம பலத்தில் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து போவார்கள்.

திருமணம்

விருச்சிக லக்னம் 

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  7ம் வீட்டு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். இவர்களுக்கு அமையும் துணை அதிக செலவினை செய்யக் கூடியவராகவும் ஆடம்பரமாக வாழக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். செவ்வாய் சுக்கிரன்  இருவருமே சம பலத்தில் இருப்பதால் விட்டு கொடுத்து போவார்கள்.

தனசு லக்னம் 

தனசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக புதன் வருகிறா◌ார்  தனசு லக்னத்தின் 7ம் வீடு  பாதக ஸ்தானமாகவும் வருகிறது.  துணையோடு பட்டும்படாமல் வாழ்பவர்களாக இருப்பார்கள்.துணையின் முழுமையான ஒத்துழைப்பினை பெறுவதில் சிரமம் காண்பார்கள்.  

மகரம் லக்னம் 

மகரம்  லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக சந்திரன் வருவதால் லக்னாதிபதியான சனிக்கு சந்திரனின் ஒத்துழைப்பு கிடைப்பதில் சிரமம் தெரிகிறது. துணையின் சாதுர்யத்தில் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் துணையினை காட்டிலும் அதிக பொறுப்பு குடும்பத்தில் வைக்க நேரிடும்

கும்பம் லக்னம் 

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக சூரியன் புகழினை விரும்பும் துணை கிடைக்கும்.  துணையின் ஒத்துழைப்பினை பெறுவதில்  சிரமம் காண்பார்கள் இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் உழைக்கவே பிறந்தவர்கள் என்றே கூறலாம்.

மீனம் லக்னம் 

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7மிடத்து அதிபதியாக புதன்   வருவதால் நல்ல அறிவார்த்தமான துணை கிடைக்கும். மீன லக்ன அதிபதி குரு வோடு 7ம் அதிபதியான புதன்  ஒத்து போவதில்  சிரமம் இருக்கும். சில முரண்பாடுகளை சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்.

 

திருமணம் மகிழ்ச்சி சொர்க்கத்திலா

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்வார்கள். ஆனால் திருமண வாழ்க்கையினை இணிப்பாக கொடுப்பதற்கு கிரகங்கள் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

ஒருவருடைய 7ம் வீடு தீய கிரகங்களால் ஆக்ரமிப்பு செய்யப்பட்டிருக்கக் கூடாது, குறிப்பாக 7ம் வீட்டில்  லக்னத்திற்கு 6 8 12ம் வீட்டு அதிபதிகள் 7மிடத்தில் இருக்கக் கூடாது, 7ம் வீட்டில் சனி செவ்வாய் கேது ராகு கிரகங்கள் இருப்பதும் திருமண உறவில் பதட்டம் தரக் கூடியதாகும்.

ஆண்களுக்கு திருமண மகிழ்ச்சி தரும் சுக்கிரன்

ஆண்களுடைய ஜாதகத்தில் ஜாதகத்தில் சுக்கிரன் ஆண்களின் திருமண வாழ்க்கையின் யோகத்தினை காட்டக் கூடியதாகும்.  ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் தொடர்பினை பெறக் கூடாது, சுக்கிரன் நீச்சம் பெற்றிருக்கக் கூடாது,  சுக்கிரன் பகை வீடு அமரக் கூடாது,

ஆண்களுடைய ஜாதகத்தில் ஜாதகத்தில் சுக்கிரன் தீய கிரகங்களின் சேர்க்கையினைப் பெற்றிருந்தாலும் பலம் குறைந்த அமைப்பாகும்.   குறிப்பாக சுக்கிரன் ராகு கேது சனி செவ்வாய் இணைவினை பெற்றிருந்தாலும் பார்வையினை பெற்றிருந்தாலும் பலவீனமான அமைப்பேயாகும்.

ஆண்களுடைய ஜாதகத்தில் சுக்கிரன் 6 8 12 அதிபதிகளின் சேர்க்கையினைப் பெற்றிருந்தாலும் திருமண வாழ்கையில் பிரச்னைகளை கொடுக்கும்.

பெண்களுக்கு திருமண மகிழ்ச்சி தரும் செவ்வாய்

பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் திருமண வாழ்க்கையின் யோகத்தினை காட்டக் கூடியதாகும்.  பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தீய கிரகங்களின் தொடர்பினை பெறக் கூடாது, செவ்வாய் நீச்சம் பெற்றிருக்கக் கூடாது, செவ்வாய் பகை வீடு அமரக் கூடாது,

பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் தீய கிரகங்களின் சேர்க்கையினைப் பெற்றிருந்தாலும் பலம் குறைந்த அமைப்பாகும்.   குறிப்பாக செவ்வாய் ராகு கேது சனி செவ்வாய் இணைவினை பெற்றிருந்தாலும் பார்வையினை பெற்றிருந்தாலும் பலவீனமான அமைப்பேயாகும்.

பெண்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் 6 8 12 அதிபதிகளின் சேர்க்கையினைப் பெற்றிருந்தாலும் திருமண வாழ்கையில் பிரச்னைகளை கொடுக்கும்.https://www.gokulamastrology.com

கவனிக்க வேண்டிய முக்கியமான திருமணம் மகிழ்ச்சியின் எதிரி

சரம் லக்னத்தின் பாதகாதிபதி 11ம் அதியாவார்

ஸ்திர லக்னத்தின் பாதகாதிபதி 9ம் அதிபதியாவார்

உபய லக்னத்தின் பாதகாதிபதி 7ம் அதிபதியாவார்

ஒருவரின் 7ம் வீடானது சரமா அல்லது ஸ்திரமா அல்லது உபயமா என ஆராய்ந்து  அந்த வீட்டுக்குரிய பாதகாதிபதி யார் என்பதை கணிக்க வேண்டும்.  அந்த 7மிடத்து பாதகாதிபதி இல்லற வாழ்க்கையினை குழப்பிவிட்ட கலங்க வைப்பார்.

ஒருவரின் திருமணம் இணிக்குமா கசக்குமா என்பதை இப்படியாக பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.