லக்ன யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
மிதுனம் சிறப்பான லக்னம் – Grateful Gemini Points 2
மிதுனம் லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்
மிதுனம் லக்னத்தின் அதிபதி புதன்
புதன் நிர்வகிக்கும் வீடுகள் 1 – 4
லக்னத்தின் 1 மற்றும் 4ம் பாவத்தின் அதிபதியாக வரும் புதன் நன்மையும் செய்பவர். கேந்திரங்களில் கேந்திராதிபத்ய தொஷத்தினை கொடுக்காமலிருந்தால் நன்மையினை செய்ய தயங்குவதில்லை.
வீடு வாகனம் நிலம் என வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை கொடுக்கும் வல்லமை படைத்தாகும் புதன்.
லக்னத்திற்கு புதன் மிதுனம் அல்லது கன்னியில் ஆட்சி – உச்சம் பெற்றாலும் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்திரை யோகம் கிடைக்கிறது.
புதன் மேஷம் ரிஷபம் சிம்மம் துலாம் கும்பம் வீடுகளில் அமர்ந்திருந்தால் நல்லவிதமான பலன்களை வெளிப்படுத்துவார்.
சந்திரன் நிர்வகிக்கும் வீடுகள் 2
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பண வருவாய் குடும்பம் என முக்கயமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த கடகத்தின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.
2மிடத்து அதிபதியாக சந்திரன் வருவதால் குடும்பத்தில் சந்திரன் வளர்வதைப்போலவும் சந்திரன் தேய்வதை போலவும் மகிழ்ச்சியும் இன்பமும் கலந்தே இருக்கும்.
பண வருவாய் வாக்கு போன்ற இனங்களிலும் மேற்குறிப்பிட்ட பலன்களே.
இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.
சந்திரன் இவர்களுக்கு கடகம் கன்னி துலாம் கும்பம் மீனம் வீடுகளில் அமர்ந்திருந்தால் கெடு பலன்களை குறைத்துக் கொள்வார்.
சூரியன் நிர்வகிக்கும் வீடுகள் 4
இந்த லக்னத்திற்கு 3மிடமான சிம்மம் மனோததர்யம் சாதுர்யம் வாழ்வியலின் நுணுக்கம் இவைகளை கற்றுக் கொடுக்கும் இடமாகும். இந்த இடம் வலிமையாக இருந்தால் வாழக்கையில் மிக முக்கியமான பலன்களை பெற்று விடலாம்.
சூரியன் மேஷம் விருச்சிகம் சிம்மம் மகரம் ஆகிய இடங்களில் வலிமை பெற்று உதவிகளை தாராளமாக கொடுக்கக் கூடியவர்.
சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 5 – 12
லக்னத்திற்கு 5 மற்றும் 12ம் அதிபதி சுக்கிரன். 5மிடமான துலாம் இவர்களுடைய குழந்தைகள் பற்றிய செய்திகளை தெரிவிக்கக் கூடியது, இந்த லக்னத்தின் 12ம் வீடானது விரையத்தினை அடையாளம் கட்டக் கூடியது,
இவர்களுடைய குழந்தைகளின் வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கக் கூடிய சுக்கிரன் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,
சுக்கிரன் இந்த லக்னத்தில் பிறந்தவர்களை வாழ வைக்கவும் வைப்பார். சுக்கிரன் முடிவெடுத்து விட்டால் ஜாதகரை கீழே வீழ வைக்கவும் செய்வார்.
பொதுவாக சுக்கரன் ரிஷபம் துலாம் விருச்சிகம் மகரம் கும்பம் வீடுகளில் அமர்ந்தால் நன்மையான பலன்களை தருகிறார்.
லக்னத்திற்கு சுக்கிரன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்றால் அல்லது மீனத்தில் உச்சம் பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான மாளவ்ய யோகம் தருகிறது.
சுக்கரனைப் பொருத்த மட்டில் இந்த லக்னத்தாருக்கு வலிமையான யோகத்தனை தரக்கூடியவர் என்றால் மிகையில்லை.
செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 6 – 11
லக்னத்தின் 6 மற்றும் 11ம் அதிபதி செவ்வாய். 6மிடமான விருச்சிகம் இவர்களுடைய ரோகம் வழக்கு பற்றிய செய்திகளை தெரிவிக்கக் கூடியது, இந்த லக்னத்தின் 11ம் வீடானது முன்கர்மாவினை அடையாளம் கட்டக் கூடியது,
இவர்களுடைய முன் ஜென்ம பாவங்கள் கழிக்கப்பட வேண்டிய கர்மாக்களை தீர்மானிக்கக் கூடிய செவ்வாய் மிக மிக முக்கியமான பங்களிப்பினை இந்த லக்னத்தாருக்கு கொடுக்கிறது,
பொதுவாக செவ்வாய் மேஷம் விருச்சிகம் சிம்மம் மகரம் ரிஷபம் வீடுகளில் பலம் பெறகிறார்.
குரு நிர்வகிக்கும் வீடுகள் 7 10
இந்த லக்னத்திற்கு களத்திரம் தொழில் என வாழ்வின் மிக முக்கியமான விவரங்களை அடையாளம் காட்டும் வீடுகளான 7 மற்றும் 10ம் வீடுகள் இரண்டுக்குமே குருவே அதிபதி என்பதால் ரிஷப லக்னக் காரர்களின் பார்வை முழுவதும் இவர்களிடமே இருக்கும்.
இவர்களுக்கு குரு 7மிடம் என்னும் மாரக ஸ்தானத்தின் அதிபதி என்பதால் இவர்களிடம் குரு சற்று கடுமையாகவே நடந்து கொள்வார்.
இவரை நண்பன் என்று நெருங்கவும் முடியாது, பகைவன் என்று விலகவும் முடியாது, அப்படித்தான் களத்திரம் தொழில் இவைகளில் குருவின் ஆதிக்கம் இருக்கும்
குரு வலிமை பெற்றால் பின்னடைவான பலன்களை கொடுக்கும். குரு வலிமையிழந்து அமர்ந்தால் கெடு பலன்கள் குறைந்து விடும்.
குரு ரிஷபம் துலாம் மகரம் கும்பம் விருச்சிகம் சிம்மம் வீடுகளில் மென்மையான பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனி நிர்வகிக்கும் வீடுகள் 8 9
லக்னத்திற்கு 8 என்னும் ஆயுளையும் 9 என்னும் பாக்கியத்தினையும் கொடுக்கும் மிக முக்கியமான கிரகம் சனி. இவர் 8 – 9 இரு வீடுகளின் பலன்களையும் கொடுக்கக் கூடியவர்.
பொதுவாக இரு வீட்டு ஆதிபத்யம் கொண்ட கிரகங்கள் இரு வேறு விதமாகத்தான் பலன்களை கொடுப்பார்கள். ஆனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு யோகமளிக்கும் அற்புதமான கிரகம் சனியேயாவார்.
பாக்கியாதிபதியாக வரும் சனி சொத்துக்களை வாங்கி குவிக்க வைப்பார். இவர்களுக்கு சுக்கிரனுக்கு அடுத்த சனி பெரிய அளவில் நன்மைகளை தருவார்.
இவர்களுக்கு சனி மேஷம் ரிஷபம் சிம்மம் கன்னி கும்பம் மீனம் வீடுகள் நலம் தரும் வீடுகளாகும்.
ரிஷபம் லக்னத்திற்கு சனி கும்பம் வீட்டில் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச யோகம் தருகிறது. ஜாதகத்தில் காணப்படும் தோஷங்களையும் பலவீனங்களையும் வென்றெடுத்து யோக பலன்களை கொடுப்பார்.
இந்த லக்னத்திற்கு ராகு கேது ஆகிய கிரகங்களானது மேஷம் விருச்சிகம் சிம்மம் மீனம் வீடுகளில் அமர்ந்தால் நல்ல பலன்களை கொடுக்க தயங்குவதில்லை.
கவனிக்க வேண்டிய சூட்சுமங்கள்
இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சுக்கிரன் சனி என்றாலும் சனி சுக்கிரன் இருவருமே இரு ஆதிபத்யம் பெற்றதால் நன்மைகள் செய்யும் போது தீய பலன்களும் இணைந்தே வரும்.
பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.
கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.
ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?
ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.
அதாவது இந்த லக்னத்தாருக்கு குருவின் தாக்கம் முக்கயமான இடங்களில் இருக்கக் கூடாது, இவர் களத்திரம் தொழில் இங்கு வந்தமர்ந்தால் ஜாதகரின் நிலையினை வெகுவாக பாதித்துவிடும்.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.
மிதுனத்தின் கேந்திராதிபதிகள் புதன் குரு இருவருமே கேந்திரங்களில் கேந்திராதிபத்ய தோஷத்தினை பெறக் கூடியவர்கள். எனவே இவர்கள் சனி சுக்கிரனைத்தான் நம்ப வேண்டும்.
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்https://gokulamastrology.com/shop/