வாஸ்து யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
ஒரு வீடானது வாஸ்து பலத்துடன் இருப்பதற்கு கிரகங்களின் உதவி தேவை. ஒரு வீட்டினை காக்கும் திக்குகள் நான்கு அவை
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு
ஒரு வீட்டினை காக்கும் கோணங்கள் நான்கு அவை
தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கு வடகிழக்கு
நான்கு திக்குககளை காக்கும் கிரகங்கள்
கிழக்கு சூரியன்
தெற்கு செவ்வாய்
மேற்கு சனி
வடக்கு புதன்
நான்கு கோணங்களை காக்கும் கிரகங்கள்.
தென்கிழக்கு சுக்கிரன்
தென்மேற்கு ராகு
வடமேற்கு சந்திரன்
வடகிழக்கு குரு
கேது வீட்டின் பிரம்ம பாகமென்னும் ஆகாய பாகத்தினை காக்கிறது
இப்போது உங்களுடைய ஜாதகத்தினை கையில் வைத்துக் கொண்டு கவனித்து பாருங்கள்.
நீங்கள் மேஷ லக்னமெனில் சரலக்னத்தின் பாதகாதிபதியான சனியின் திக்கான மேற்கு திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் ரிஷப லக்னமெனில் ஸ்திர லக்னத்தின் பாதகாதிபதியான சனியின் திக்கான மேற்கு திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் மிதுன லக்னமெனில் உபய லக்னத்தின் பாதகாதிபதியான குருவின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் கடக லக்னமெனில் சர லக்னத்தின் பாதகாதிபதியான சுக்கிரன் கோணம் விழும் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் சிம்ம லக்னமெனில் ஸ்திர லக்னத்தின் பாதகாதிபதியான செவ்வாயின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் கன்னி லக்னமெனில் உபய லக்னத்தின் பாதகாதிபதியான குருவின் கோணம் விழும் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் துலாம் லக்னமெனில் சர லக்னத்தின் பாதகாதிபதியான சூரியனின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்.
நீங்கள் விருச்சிக லக்னமெனில் ஸ்திர லக்னத்தின் பாதகாதிபதியான சந்திரன் கோணம் விழும் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் தனசு லக்னமெனில் உபய லக்னத்தின் பாதகாதிபதியான புதனின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் மகரம் லக்னமெனில் சர லக்னத்தின் பாதகாதிபதியான செவ்வாயின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் கும்பம் லக்னமெனில் ஸ்திர லக்னத்தின் பாதகாதிபதியான சுக்கிரனின் கோணம் விழும் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
நீங்கள் தனசு லக்னமெனில் உபய லக்னத்தின் பாதகாதிபதியான புதனின் திக்கில் வாசல் வீட்டிற்கு வைத்தால் பாதகமான பலன்தானே தருவார்
எனவே உங்களுடைய வீ ட்டிற்கு எந்த திசையில் வாசல் வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து யோகமான பலன்கள் கிடைக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடுத்த பதிவில் உங்கள் வீட்டில் எந்த திக்கில் கர்மா மறைந்திருக்கிறது என்பதை பார்ப்போம்.
தொடர் வினை யறிந்து வென்றிடவே
இடர் கண்டறிந்த களைந்திட காணவே
அடர் வணஇருளில் தடுமாறி தவித்திட
படர் கொடியென கிரகங்கள் உதவுமே
வாஸ்துபடி வீட்டினை வடிவமைத்து விட்டு பலன் கிடைக்கவில்லையே என ஆராய்ந்து கொண்டிருப்பதை விடுத்து ஒரு வீட்டிற்கு பாதகம் செய்யும் கிரக திக்குகளை கண்டறிந்து அந்த பகுதிகளை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்