யுத்த யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
சீனாவின் தந்திரமான நடவடிக்கைகள்
ஜாதகம் என்ன சொல்கிறது ?சீனா உலகின் ஒரு சாபக்கேடு
சீனாவின் பேராசை உலகின் நிம்மதியினை தொலைத்துக் கொண்டிருக்கிறது
சீனாவின் லக்னம் மகரம். மகர லக்னத்தின் அதிபதியான சனி எட்டில் மறைந்து தன் தேசம் மர்ம தேசம் என்பதை அழகாக சொல்கிறது,
எதற்காக சீனா மூர்க்க குணத்தினை உலகிற்கு காட்டுவதற்கு விரும்புகிறது,
சீனா பிறந்த மகரத்தின் பாதகாதிபதி விருச்சிக செவ்வாய்
விருச்சிகம் பாதக ஸ்தானம் என்பதால் அந்த பாதக ஸ்தானத்தின் பாதகாதிபதி யார் என்று பார்த்தால் அவர் கடக சந்திரன்.
சீனாவிற்கு கெடு புத்தி கொடுப்பவன் செவ்வாய்…செவ்வாய்க்கு துணை போகும் இன்னுமொரு கிரகம் சந்திரன்.
பாதகாதிபதி செவ்வாயும் பாதகாதிபதிக்கு பாதகாதபதி சந்திரனும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தால் மிக கெட்டவன். ஆக இவர்கள் இருவரும் 1 -7 ல் அமர்ந்து பரஸ்பர தொடர்பில் தீய சிந்தனையினை சீனாவிற்கு கொடுத்து வந்தால் எப்படி சீனாவிற்கு நல் புத்தி வரப்போகிறது,
திருந்தாத சீனா பாடம் கற்றுக் கொள்ளுமா ?
எல்லைகள் விரிந்திட ஆசைகளை தரும் குரு ராகுவின் பார்வையில் சிக்கி லக்னாதிபதியினை பார்வையிடுவதால் சீனா தன் எல்லைகளை விரிவுபடுத்த பேராசை கொண்டலைகிறது,
கடந்த 19 ஆண்டு கால சனியின் துணையால் கடுமையான உழைப்பினால் சீனா உயர்ந்தது மறுக்க முடியாது, 8ல் அமர்ந்த சனி 10 2 5 இடங்களையும் குரு 4 6 8 இடங்களையும் பார்வையிட்டதால் பொருளாதார வளர்ச்சியும் ராணுவ வளர்ச்சியும் கிடைத்தது,
சீனாவிற்கு செப்டம்பர் 2019 முதல் புதன் தெசை தொடங்கியுள்ளதால் வரும் 17 ஆண்டுகளுக்கு சீனா புதன் கட்டுபாட்டில்தான் இயங்கும்.
புதன் தெசையின் தொடக்கத்திலேயே கொரானாவினை சீனா உலகிற்கு கொடுத்து தன் விபரீத வேலையினை காட்ட சீனா துணிந்துள்ளதால் இந்த புதன் தெசையினை உலகினை பாடாய் படுத்த போகிறது என்பதை அறிய முடிகிறது,
மகர லக்னத்திற்கு புதன் 6ம் வீட்டிற்குரிய கிரகம். நோயினை அடையாளம் காட்டும் 6மிடத்தினை துணை கொண்டே சீனா கொரானா வைரஸை உலகிற்கு கொடுத்து யுத்தத்தினை தொடங்கியுள்ளது, புதன் 9ல் பத்திரை யோகத்தினை பெற்றதால் உலக நாடுகளை சீனா கொரானா வைரஸை பரவ விட்டு மிரட்டியதில் வெற்றியும் பெற்று விட்டது.
தெசா லக்னம் கன்னிக்கு எதிரி செவ்வாய் லக்னத்தினை பார்ப்பதால் சீனாவின் இந்த கொடூரமான கொரானாவிற்கு பதில் சொல்லுமா ?
தொடர்ந்து சீனாவின் தந்தரங்களை பார்ப்போம்
சத்தம் இன்றி முழக்கம் அடங்காத
யுத்தம் யாருக்காக விரிந்திடும் எல்லைகள்
நித்தம் தொல்லைகள் தருவதால் உறக்கம்
மொத்தம் தொலைந்து போனதே இறைவா
சீனாவின் ஜாதகம் மகரம் லக்னம். மகரத்தில் சந்திரன் மீனத்தில் ராகு கடகத்தில் செவ்வாய் சிம்மத்தில் சனி – கன்னியில் புதன் சூரியன் கேது – துலாத்தில் சுக்கிரன்