தோனி

பிரபலங்கள் யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

தோனி ஓய்வு சொன்னது பலித்தது – Predicted Dhonis Retirement Notable points 2

ஜீலை 2019ல் முகநூலில் வெளியிடப்பட்ட தோனி ஒய்வு பற்றிய பதிவின் மீள் பதிவு

www.gokulamastrolgy.com வெப்பில் வெளியிடப்பட்ட தோனி ஒய்வு பற்றிய மீள் பதிவ

இவர் 6.12.2020க்குள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவருக்கு சந்திர நடமாட்ட பலன்களை பார்க்கும்போது  15.6.2020 முதல் 15.9.2020க்குள் தனது ஓய்வினை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

2019 ம் அண்டு உலக கோப்பை முடிவிற்கு வந்ததது. இப்போது பலரது கேள்வியும் தோனியினை பற்றியதே.

எம். எஸ் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? அல்லது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவாரா?

அவருடைய பிறந்த ஜாதகத்தினை ஆய்விடுவோம்.

அவர் பிறந்தது 7.7.1981

பிறந்த நேரம் 11.15 பகல்

பிறந்த ஊர் ராஞ்சி

இவர் பிறந்த லக்னம் ராசி இரண்டுமே கன்னி.

தோனி

பத்தாம் வீட் டில் புதன் பஞ்ச மகா புருஷயோகத்தில் ஒன்றான பத்ர யோகத்தினை வெளிப்படுத்துகிறது.

கன்னியில் சனி அமர்ந்திருக்கிறார்.

கன்னிக்கு யோகத்தினை தரும் சனியின் பத்தாம் பார்வையாக லக்னாதிபதி புதனை பார்வையிடுவது அவர் கடும் உழைப்பினை தருபவர் என அடையாளம் காட்டுகிறது.

கன்னிக்கு கடும் பாதிப்பினை தரும் செவ்வாய் பத்தில் அமர்ந்து யோகர் சனியின் பார்வையினை பெறுவதால் அவயோகம் கெட்டு பாதிப்புகள் குறைகிறது.

கடகத்தில் அமர்ந்த சுக்கிரன் ராகு வலிமையான யோகத்தினை தருகிறார்கள். கடகத்தில் அமர்ந்த ராகு யோக ராகு ஆகும். அதுவும் பதினொன்று என்கிற போது வலிமை அதிகரிக்கிறது.

சுக்கிரன் வலுத்த யோகி பதினொன்றில் அதுவும் ராகுவுடன் அமர்ந்தது மிக வலிமையான யோகமாகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் அசுபர்கள் வலிமை குறைந்திருந்தால் அவர்களால் வாழ்க்கையின் உயரத்திற்கு எளிதாக வந்துவிட முடியும்.

 இந்த ஜாகதத்தில் செவ்வாய் வலிமை குறைந்தது யோகமாகிறது. சனியின் பார்வை பெற்றதால் சூர்யன் வலிமை குறைந்ததும் யோகமாகிறது.

சனியோடு இணைந்த சந்திரனும் வலிமை குறைந்து யோகத்திற்கு தடைகளை தரவில்லை.

யோகம் வரும் வழிக்கு தடைகளில்லாதபோது பதினொன்றில் இருக்கும் சுக்கிரன் ராகு வலிமையான யோகத்தினை வெளிப் படுத்துகிறார்கள்.

எனவேதான் விளையாட்டில் சாதனைகள் செய்து பணத்தினையும் சம்பாதிக்க முடிந்தது.  சரி இவருடைய உத்யோகம் விளையாட்டு ஓய்வின் பலன்களை பார்ப்போம்.

ராகு தெசை 2002ல் ஆரம்பித்தது. கடகத்தில் அமர்ந்த ராகு அளப்பறியா நன்மைகளை அள்ளி தெளிப்பார்.

சுக்கிரன் இணைவினை பெற்றதால் அவருடைய யோக வெளிப்பாடு அளவற்ற தன்மையில் இருந்ததில் வியப்பில்லை.

இவருக்கு ராகு தெசை 6.12.2020 வரை நடைபெற இருக்கிறது. அதுவரையில் பிரபலமான யோகமே என்பதில் சந்தேகமேயில்லை.

இவருக்கு ராகு தெசையில் யோகமான புக்திகள் நடைபெற வேண்டும். 19.5.2018 முதல் ராகு தெசையில் சந்திர புக்தி.

இந்த காலகட்டம் இவருக்கு பின்னடைவினை தரும் என்பதால் இவரால் பிரமாதமாக சோபிக்க முடியவில்லை. பலரது விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

அடுத்ததாக 18.11.2019 முதல் 6.12.2020 வரையில் ராகு தெசையில் செவ்வாய் புக்தி ஆரம்பமாக போகிறது.

இந்த காலகட்டம் இவருக்கு உதவி செய்யாது. கன்னி லக்னத்திற்கு பாபியான செவ்வாய் பத்தாமிடத்திற்கு விரையபாவம் ஏறியதால் விளையாட்டில் ஓய்வினை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பாவச்சக்கரத்தில் ராகுவிற்கு விரையாமேறியதால் ஓய்வினை சந்திக்க வைக்க நேரிடும்.

தோனி ஓய்வு சொன்னது பலித்தது – Predicted Dhonis Retirement Notable points 2

இவர் 6.12.2020க்குள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

தோனி

இவருக்கு சந்திர நடமாட்ட பலன்களை பார்க்கும்போது

15.6.2020 முதல் 15.9.2020க்குள் தனது ஓய்வினை அறிவிக்க வாய்ப்பிருக்கிறது.

Sri Mahalakshmi Upasagar

 

Cuddalore

 

ஜோதிடம் என்றும் பொய்ப்பதில்லை. ஜோதிடத்தினை சரியாக கணித்து விட்டால் சரியான பலனை சொல்லிவிடலாம்.

கன்னியில் பிறந்த இவருக்கு செவ்வாய் 3 – 8 ம் அதிபதி என்பதால்  நல்ல பலன்களை கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை.

அதுவும் செவ்வாய் கன்னிக்கு கலங்க வைக்கும் சோதனைகளையும் வேதனைகளையும் கொடுப்பார்

இவருடைய கன்னி லக்னத்திற்க 11ல் கடகத்தில் அமர்ந்த ராகு பிரபல யோகத்தினை தரக்கூடிய ராகுவாகும்.

ராகு  மேஷம் ரிஷபம் கடகம் மகரம் வீடுகளில் அமர்ந்தால் பிரபல யோகமாகும்.

மேற்கண்ட வீடுகளில் அமர்ந்த ராகு அதனை 11ம் இடமாக அமைந்தால் அதி அற்புத பிரபல யோகமாகும்

இதனால்தான் கடந்த 18 ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத மன்னனாக வலம் வந்தார்.

இன்னும் சரியாக சொல்லப் போனால் நம்முடைய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மிதுன லக்னத்தில் பிறந்த இவருக்கு 11ல் மேஷத்தில் யோக ராகு,

அவருக்கு யோக ராகு தெசை நடந்த போது முதலமைச்சர் பதவியினை வகித்தார்.

யோகங்களை திகட்டும் அளவிற்கு அனுபவித்தார்.  ராகு முடிந்து குரு வந்தது,.யோகங்கள் காணாமல் போயின

அப்படித்தான் தோனியின் ஜாதகத்தில் கன்னிக்கு 11ல் கடகத்தில் அமர்ந்த ராகு அதியோக பிரபல யோகத்தினை அவருக்கு தந்தது,

கன்னியில் பிறந்தவர்களுக்கு ராகு யோகக்காரன்தான் சந்தேகமேயில்லை. ஆனால் செவ்வாய் கன்னியில் பிறந்தவர்களுக்கு நம்பிக்கைக்கு உரியவரா?

நிச்சயமாக செவ்வாய் கன்னியில் பிறந்தவர்களை மிரட்டும் கிரகமாகவே பார்க்க வேண்டியிருக்கிறது,

ராகு தெசையானது 6.12.2020 வரை நடைபெறும் காலம் பொற்காலம்தான்.

ஆனால் ராகு தெசையில் செவ்வாய் புக்தி வருகின்ற போது செவ்வாய் இவரை மிரட்டும் என்பதில் சந்தேகமேயில்லை.

18.11.2019 ல் ஆரம்பமான ராகு செவ்வாய் புக்தியானது 6.12.2020 வரை நடக்கும்.

13.8.2020 ல் ஆரம்பமாகும் ராகு – செவ்வாய் – சுக்கிரன் 16.10.2020 வரை நடக்கும்.

இதன் பிறகு கோச்சாரம் பக்கம் வரும் போத

இன்றைய கிரகம் என்ன சொல்கிறது ?

கன்னியில் சந்திரன் குரு சனி அமர்ந்திருந்தாலும் கன்னி ராசிக்கு பத்தாம் வீடானது மிதுனம்.

கன்னிக்கு கோச்சாரம் பலன்களை பார்க்கும்போது மிதுனம் பத்தாம் பாவம். பத்தாம் பாவத்தின் விரைய பாவம் ரிஷப சுக்கிரன்

பத்தாம் பாவ விரையாதிபதியான சுக்கிரன் மிதுனத்தில் 31.8.2020 வரை அமர்ந்திருப்பதால் 31.8.2020க்குள் ஓய்வினை அறிவிக்க வேண்டிய நிலை.

காலம் ஒய்விற்கு நாள் குறித்ததால் ஒய்வினை அவர் அறிவித்து விட்டார்.

லக்னம் வாயிலாக செவ்வாய்  பின்னடைவான பலனை தருவதாலும் கோச்சார வாயிலாக சுக்கிரன் பின்னடைவான பலனை தருவதாலும் ஒய்வினை அறிவித்து விட்டார்.

தோனி ஓய்வு சொன்னது பலித்தது – Predicted Dhonis Retirement Notable points 2

இனி இவருக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் ?

கன்னி லக்னத்திற்கு குரு தெசை வரப் போகிறது,

ராகு போல் வாரி கொடுக்கும் கிரகமல்ல குரு

கன்னி லக்னத்திற்கு 4 -7 என பாவங்களுக்கு சொந்தக்காரரான குரு கேந்திராதிபத்ய தோஷத்தினை பெற்று பாதகமான பலன்களைத்தான் இவருக்கு கொடுப்பார்.

இவருடைய எதிர்காலத்தினை பின்னுமொரு பதிவில் பார்ப்போம்.

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.