துலாம்

லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

முன் ஜென்மம்   ரிஷப திருமணம்  Marriage Taurus  Controlling Marriage Past karma 11

களத்திரம் என்பதை எப்படி புரிந்து கொள்வது ரிஷபத்தில் பிறந்தவர் ஆண் ரிஷபம் எனில் களத்திரம் மனைவி ஆகும்.  ரிஷபத்தில் பிறந்தவர் பெண் எனில் களத்திரம் ஆண் ஆகும்.

முன் ஜென்மம் திருமணம் என்பது விசித்திரமானது. ஒருவரின் களத்திரம் முன் ஜென்ம தொடர்பினை அடையாளம் காட்டுகிறது, அது எப்படி என்கிறீர்களா ?

லக்னத்திற்கு நேர் எதிர் வீடாக களத்திரம் வருகிறது, வாழ்க்கையின் ஒரு பாதி இவருக்கும் மறு பாதி களத்திரத்திற்கும் உரியதாகிறது,

ரிஷபம்

ரிஷபத்தின் முன் ஜென்ம வீடான தீய முன் கர்மா வீடான 11மிடமானது களத்திரமான ரிஷபத்திற்கு 5மிடம் என்னும் சுப முன்கர்மா வீடாகிறது,

‘எனவே தான் இவருக்கு அவர் . அவருக்கு இவர் என்று வாழ்க்கை தீர்மானமாகிறது,

ஒருவருடைய ஜாதகத்தில் எதிர்கால வாழ்க்கையினை தீர்மானிக்கும் வீடுகளாக நாம் குறிப்பிடுவது நான்கு வீடுகளைத்தான்.

அந்த நான்கு வீடுகள்

லக்ன  பாவம்      லக்னத்திலிருந்து   1ம் வீடு

சுகம் தரும்  பாவம்      லக்னத்திலிருந்து   4ம் வீடு

களத்திர பாவம்      லக்னத்திலிருந்து 7ம் வீடு

தொழில் பாவம்    லக்னத்திலிருந்து  10ம் வீடு

கேந்திர வீடுகளான 1 4 7 10 இவை நான்கும் ஒன்றோடு ஒன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் தொடர்பினை கொண்டவையாகும்.

ஒவ்வொரு வீடும் ஒன்றுக் கொன்று கேந்திரங்களாக வரும் என்பதால் அந்த வீடுகள் பிண்ணி பிணைந்தே பலன்களை வெளிப்படுத்தும்.

எதாவது ஒரு வீடு பாதிப்படைந்தால் பாதிப்படைந்த வீடானது மற்ற வீடுகளை பாதித்து விடும்.

இன்றைய பதிவில் களத்திர பாவத்தினை நாம் ஆராய்வோம்

ரிஷப லக்னத்திற்கு களத்திர பாவம் விருச்சிகம்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிரன்

களத்திர லக்னத்தின் அதிபதி  செவ்வாய்

லக்னம்  எதிர் கொள்வது களத்திரம்

சுக்கிரன் எதிர் கொள்வது செவ்வாய்

இரண்டுமே தீயக் கோள்களாகும்

சுக்கிரன் சனியின் பேச்சினை கெட்பவர்

செவ்வாய் குருவின் பேச்சினை கேட்பவர்

சனிக்கு செவ்வாயை பிடிக்காது

குருவிற்கு சுக்கிரனை பிடிக்காது

பொதுவான குணம் எப்படி இருக்கும்

செவ்வாயின் சொந்த வீடு விருச்சிகம் பெண் தன்மை கொண்டதாகும்

சுக்கிரனின் சொந்த வீடு  ரிஷபம்  பெண் தன்மை கொண்டதாகும்

ரிஷபம் அதிபதி சுக்கிரன் ஆண் தன்மை கொண்ட கிரகம்

விருச்சிகம் அதிபதி செவ்வாய்   பெண் தன்மை கொண்ட கிரகம்

ரிஷபம் பெண் வீடு சுக்கிரன் ஆண் கிரகம்

விருச்சிகம் பெண் வீடு அதிபதி செவ்வாய் பெண் கிரகம் 

விருச்சிகம் பெண் பெண் என்று பெண்ணின் அம்சம் பலமாகிறது

ரிஷபம் பெண் ஆண் என்று கலப்பு அம்சமாகிறது அம்சம் பலமாகிறது

விருச்சிகம் பெண் தன்மையும்  ரிஷபம்  ஆணும் பெண்ணும் கலந்த தன்மையும் இருப்பதால் ரிஷபம் விருச்சிகத்தினைக் காட்டிலும் ஆளுமை அதிகமிருக்கும்.

எதிர்பால் கொண்ட கிரகங்களின் திருமண வாழ்க்கை தடைகளை சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும்.

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு  விருச்சிக லக்னக் காரர்களை விட அதிக கோபமும் மூர்க்கத்தனமும் இருக்கும் .

ஆனால் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கியாதிபதியான சனி நன்மையினை தருபவராகும்.

எனவே இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் சனியின் உதவியோடு வாழ்க்கை பயணத்தினை நடத்துவார்கள்

ஆனால் இவர்களின் களத்திரமோ குருவின் உதவி கொண்டு ரிஷபத்தினை மடக்குவார்கள்.

சபாஷ் சரியான போட்டி

முன் ஜென்மம்   ரிஷபம் திருமணம்   Taurus  Controlling Marriage Past karma 11

 

களத்திரத்தினால் கிடைக்கும் உதவிகள்

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11மிடத்து அதிபதியான குரு வருகிறார்.

ஆனால்  குரு ரிஷபத்திற்கு 8 11ம் வீட்டுக்குரியவராகி கடும் முன் கர்மா தோஷத்தினை தருவார்.

குருவினால் இவர்களுக்கு கடும் இன்னல்கள் தடைகள் தாமதங்கள் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்னைகள்.

எப்படி சமாளிப்பது

இங்குதான் கிரகங்கள் தங்கள் விளையாட்டினை காட்டுகிறது,

ரிஷபத்தின் களத்திரமான விருச்சிகத்திற்கு குரு யோகர் என்பதால் குருவின் உதவியால்  இவர்களுக்கு மிகப்பெரிய உதவியினை களத்திரம் மூலம் பெற முடிகிறது,

களத்திரத்தினால் கிடைக்கும் எதிர்ப்புகள்

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு களத்திரத்தினை எதிர்கொள்வது சுக்கிரனின்  உதவியால்தான். ஆனால் இவர்களின் களத்திரமோ குருவின் உதவியால்தான் இதனை சமாளிக்கிறார்கள்.

இது எப்படி இருக்கிறது தெரியுமா ?,

தேவ குருவிற்கும் அசுர குருவிற்கும் போட்டி

எனவேதான் இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் மனைவி முட்டி மோதிக் கொள்வது விளையாட்டாகவே இருக்கும்.

சுக்கிரன் செவ்வாய் இருவருமே பலசாலிகள்தான். ஆனால் ஒருவரையொருவர் பார்த்து மனதிற்குள் பயத்தினை மறைத்து வைத்திருப்பதை மறுக்க முடியாது,

 

முன் ஜென்மம்   ரிஷபம் திருமணம்   Taurus  Controlling Marriage Past karma 11

 

களத்திரமும் முன் ஜென்ம பந்தமும்

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முன் கர்மா கிரகமாக   8 – 11ம் வீட்டு அதிபதியான குரு வருகிறார்.

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு களத்திர வீடான  விருச்சிகத்திற்கு  2-  5ம் பாவமாக சுப கர்மாவாக குரு  வருகிறார்.

ரிஷபம்

அதாவது ரிஷபத்திற்கு தீய முன் கர்மா கிரகம்  குரு

அதே  குரு  விருச்சிகத்திற்கு சுப முன் கர்மா கிரகமமாகும்

எனவே இவர்களுக்கு களத்திரமானது முன் கர்மா படி முன் ஜென்மத்தில் செய்த பிழைகளை திருத்திக் கொள்ள இந்த ஜென்மத்தில் துணையாக இவர்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் எனலாம்.

.

களத்திரமும்  கை ஒங்குமா ?

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  மாரக ஸ்தானமாக 2 7 ஆகிய வீடுகளில்  7 வீட்டின் அதிபதிகள் செவ்வாய்.  செவ்வாய் இவர்களுக்கு தொல்லைகள் கொடுப்பதற்கு வழியுண்டு,

செவ்வாய் பலம் பெற்றால் களத்திரத்தின்  ஆதிக்கம் அதிகமுண்டு, சுக்கிரன் பலமிழந்தால் மனைவியின் ஆதிக்கம் குறையும்.

லக்னாதிபதியான சுக்கிரன் பலம் பெற்ற களத்திரம் அதிபதி செவ்வாய் பலம் இழந்தால் இவர்கள் திருமண வாழ்க்கையில் கை ஒங்கியிருக்கும்.

மாறாக சுக்கிரன் பலம் இழந்து களத்திரம் அதிபதி செவ்வாய் பலம் பெற்றால் இவர்கள் திருமண வாழ்க்கையில் களத்திரத்தின் கை ஒங்கியிருக்கும்

 

கிரகங்களின் ஒற்றுமைகள்

இவர்களின் லக்ன அதிபதியான சுக்கிரனுக்கு  களத்திர அதிபதி செவ்வாய் சமம் என்பதால் அதிக அளவில் மன வேறுபாடுகள் வருவதற்கில்லை.

இவர்களின் களத்திர அதிபதியான செவ்வாய்க்கு உதவிகளை செய்யும் குரு ரிஷபத்திற்கு  கடும் பாபியாகிறார்.

ஆனால் சுக்கிரன் செவ்வாய் பரஸ்பர தொடர்பில் குரு தீமைகளை செய்வதை குறைத்துக் கொண்ட இவர்களது திருமண வாழ்க்கையினை இணிக்க செய்கிறார்.

முன் ஜென்மம்   ரிஷப திருமணம்  Marriage Taurus  Controlling Marriage Past karma 11

 

முன் கர்மா பந்தமானது தொடர்கிறது

ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு களத்திரம் எப்படி அமையும் என்பதற்கான பொதுவா ஆய்வே.

ரிஷபம் விருச்சிகம் என்ற இரு வீட்டு இணைவானது முன் ஜென்ம நினைவுகளை தொடர்கதையாக்கி இவர்களை மகிழ்விக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது உண்மைதான். கணவன் லக்ன அதிபதியும் மனைவி லக்ன அதிபதியும் நட்பு நிலையில் இருந்தால் திருமணம் வாழ்க்கை மகிழ்ச்சிதான்

ஒரு நல்ல கிரகததினைக் கண்டு பயமில்லை. எதிரி கிரகததினைக் கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.

அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள்  ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்

 மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.