லக்ன யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar
தனசு காக்குமா தாக்குமா? –Promising Sagittarius Planets 2
தனசு லக்னம் பற்றி தெரிந்து கொள்வோம்
லக்னத்தின் அதிபதி குரு
தனசு காக்குமா தாக்குமா என சொல்வது ஏனென்றால் கலியுக லக்னமாகும். உலகின் முக்கியமான நிகழ்வுகளுக்கு இந்த லக்னமும் ஒரு காரணமாகும்.
குரு நிர்வகிக்கும் வீடு 1 4
லக்னத்தின் 1ம் – 4ம் வீட்டு அதிபதியான இவருக்கு இரு வீடு உரிமையென்பதால் லக்னத்தின் முன்னேற்றமானது இவர்களுடைய 4ம் வீட்டின் குணங்களை கொண்டவர்கள்.
இவர்கள் வீடு வாகனம் என சொத்துக்களை சேர்ப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். கடுமையான சிந்தனை குணம் கொண்ட இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்யேருப்பார்கள்.
குரு மென்மையானவர் என்பதால் மென்மையான குணம் இவர்களுக்கு இருக்கும். வாழ்க்கையினை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என சதா நேரமும் சிந்தனையில் இருப்பவர்கள்
லக்னாதிபதி பலம் பெற்றால் ஆன்மீகம் வங்கி பணம் நிர்வாகம் கல்வி போன்ற தொடர்புடைய பணிகளில் விரைவான முன்னேற்றம் கிடைக்கும்.
லக்னாதிபதி பலமிழந்தால் பின்னடைவான பலன்களைத்தான் தருவார்.
லக்னத்திற்கு குரு 1ம் மற்றும் 4ம் வீடுகளில் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் தருகிறது.சி
சனி நிர்வகிக்கும் வீடு 2 – 3
லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பண வருவாய் குடும்பம் என முக்கியமான பலன்களை கொடுக்கும் இடமான இந்த 2மிட மகரத்தின் உதவியால் வாழ்க்கையில் திருப்பங்களை காண முடியும்.
2மிடத்து அதிபதியாக சனி வருவதால் கடுமையான உழைப்பால் பணம் ஈட்டுவதிலும் கடும் முயற்சியில் குடும்பத்தினை நடத்திச் செல்வதிலும் திறம்பட செயல்படுபவர் என்றே குறிப்பிடலாம்.
இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் 3மிடம் என்னும் சாதுர்யம் வெற்றிக்கான பாதைகளை கண்டறிதல் வியூகம் வகுத்தல் இவைகளை குறிக்கும்.
சின்ன விஷயங்களைக் கூட ரொம்ப யோசித்துதான் முடிவெடுப்பார்கள். திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். மற்றவர்கள் இதனை கண்டு மிரள்வர்கள்.
இந்த லக்னத்தாருக்கு 2மிடம் மாரக ஸ்தானம் என்பதால் சனி சற்று கடுமையான பலன்களையே இவரிடமிருந்து எதிர்பார்க்க முடியும். ஆனாலும் இரு வீட்டு அதிபதி என்பதால் இந்த வீடுகளில் அமரும் தீய கிரகங்கள் மாரக பலத்தினை பெற்று விடுகிறது;
செவ்வாய் நிர்வகிக்கும் வீடுகள் 5 – 12
லக்னத்திற்கு 7 மற்றும் 12ம் அதிபதி செவ்வாய்
பூர்வபுண்ணியத்தினை அடையாளம் காட்டும் இடமான மேஷம் மிக முக்கியமான ஆன்மீகம் விளக்கம் தருமிடமாகும். பிள்ளைகள் பற்றிய தெளிவான காட்டுதல்களையும் குறிக்குமிடமாகும்.
செவ்வாய் இறை வழிபாட்டினையும் 12ம் இடம் முக்தியினையும் சுட்டிக் காட்டுவதால் இவர்களுக்கு இயற்கையாகவே ஆன்மீகம் கை வந்த கலையாகும்.
இந்த லக்னக்கார்களின் பிள்ளைகள் தொடர்பான கல்வி செலவினங்கள் அதிகமேற்படும். பொதுவாக பிள்ளைகள் திருமணம் கல்வி மேற்படிப்பு என செலவிடவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.
லக்னத்திற்கு 5ம் வீடான மேஷத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றால் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான ருசக யோகம் கிடைக்கிறது
சுக்கிரன் நிர்வகிக்கும் வீடுகள் 6– 11
லக்னத்திற்கு 6 மற்றும் 11ம் அதிபதி சுக்கிரன்
இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் கடுமையான கர்மா கிரகமாகும். எல்லா லக்னக்காரர்களும் 8 மற்றும் 11ம் அதிபதியானவர் முன் ஜென்ம கர்மா என்ன என்பதையும் கர்மாபடி என்ன இந்த ஜென்மத்தில் அனுபவகிக்க வேண்டும் என்பதையும் கூறும் இடமாகும்.
தனசு லக்னத்தாருக்கு மட்டுமே 11 எனும் கர்மா வீடும் சுக்கிரனின் கட்டு பாட்டில் வரும். எனவே இவர்கள் சுக்கிரன் வழி கர்மா கழிக்க கடும் சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சுக்கிரன் எங்கு நின்றாலும் அந்த வீட்டு கர்மாவினை கழிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுவிடும்.
தனசு காக்குமா தாக்குமா?
புதன் நிர்வகிக்கும் வீடுகள் 7 – 10
லக்னத்திற்கு 7 மற்றும் 10ம் அதிபதி புதன்
களத்திரம் என்னும் 7மிடத்தின் அதிபதி புதன் என்பதால் நல்ல திருமண வாழ்க்கையினை கொடுக்கும்.
துணையை நேசிப்பவராகவும் காதல் மணத்தில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்கள்.
பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக புதன் வருவதால் கல்வி பணிகள் கல்வி வணிகம் கணக்கர்கள் போன்ற பணிகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
புதன் கேந்திரம் பார்த்து நின்றால் கேந்திராதிபத்ய தோஷத்தினை தந்து விடுவார்.
இவர்களுக்கு உபய லக்ன பாதகாதிபதியாக வருவதால் கடுமையான தோஷத்தினை கொடுக்கக் கூடியவர். இல்லற வாழ்வில் சோதனைகளும் இருக்கும்.
லக்னத்திற்கு 7ம் வீடான மிதுனத்தில் ஆட்சி பெற்றால் அல்லது 7ல் உச்சம் பஞசமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்திரை யோகம் தருகிறது.
ஜாதகத்தில் இருக்கும் மற்ற தோஷங்களை அகற்றும் வல்லமை இந்த யோகத்திற்கு உண்டு
சந்திரன் நிர்வகிக்கும் வீடு 8
லக்னத்திற்கு 8ம் வீட்டு அதிபதி சந்திரன்
சந்திரன் முன் கர்மா வீடான 8ம் இடத்திற்கும் சொந்தமாக வருவதால் இவர்களுடைய தாயார் வழி முன் கர்மா படி தீர்க்க வேண்டிய கர்மாவிற்காக இவர்களது தாயாக வந்து சேர்வர்கள்.
இவர்களுக்கு குடும்ப வழி கர்மாவும் இணைந்தே இருக்கும். இந்த லக்னக்காரர்கள் குடும்ப பொறுப்பு மொத்தமும் தன் கையில் எடுத்துக் கொள்வதையும் பார்க்க முடியும்.
.
சூரியன் நிர்வகிக்கும் வீடு 9
லக்னத்திற்கு 9ம் வீட்டு அதிபதி சூரியன்.
பாக்கியாதிபதியாக வருபவர் பாதகாதிபதியாகவும் வருவதால் ஏராளமான சொத்துக்களை சேர்ப்பார்.
பெரும்பாலும் இந்த லக்னக்காரர்கள் வங்கி சேமிப்பு அரசு பத்திரங்களில் அதிக அளவில் முதலீட்டினை செய்து பெரும் பணம் வைத்திருப்பார்கள்.
பொதுவாக அரசின் தொடர்பில் இருக்கும் அனைத்து விதமான பணிகளில் ஆர்வம் இருக்கும்.j
தனசு காக்குமா தாக்குமா?
கனிக்க வேண்டிய சூட்சுமங்கள்
இந்த லக்னத்திற்கு தெளிவாக உதவி செய்யக் கூடிய கிரகங்கள் சூரியன் செவ்வாய் .
இவர்கள் வலிமை பெற்றால் வலுத்த யோகம் கிடைத்து விடும். அரசு வங்கி பணியில் பெரிய பதவி அல்லது பெரும் தொழிலதிபராக வலம் வரலாம்.
பின் எப்படித்தான் சிலர் நல்ல யோக பலன்களை பெற்று வளமுடன் வாழ்க்கிறார்கள்.
கெட்டவன் கெட்டிடும் ராஜயோகம் தரும் விபரீத ராஜயோகம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களெல்லாம் ராஜாதான்.
ஒரு ஜாதகத்தில் யோகம் என்பது என்ன தெரியுமா?
ஒரு கிரகம் உச்சம் பெற்று தரும் பலனைக் காட்டிலும் ஒரு கிரகமானது ஜாதகரின் லக்ன எதிரி என்றாகிவிட்ட பின் அவருடைய முரட்டு தாக்குதல் ஏற்படாமல் இருந்தால் அது யோக ஜாதகம் எனலாம்.
அதாவது இந்த லக்னத்தாருக்கு சுக்கிரன் மற்றும் சுக்கிரன் சனியின் தாக்கம் முக்கியமான இடங்களில் இருக்கக் கூடாது,.
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும்.
தனசு காக்குமா தாக்குமா?
ஒரு நல்லவனைக் கண்டு பயமில்லை. எதிரியை கண்டுதான் பயம் கொள்ள வேண்டும். அப்படித்தான் ஜாதகத்தில் தீய கிரகங்கள் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையில் உள்ளதா என ஆராய்ந்து பாருங்கள்
மேலும் எங்களின் ஜோதிட சேவைகளை பற்றி அறிய கிளிக் செய்யவும்