தொழிலை

தொழில் யோகங்கள்

Sri Mahalakshmi Upasagar

தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்கள்  – Perfect attacking Planet – Points 12

தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்கள் பத்தாம் வீட்டின் எதிரிகளாவார்கள்.  ஒருவரின் தொழிலாகட்டும் உத்யோகமாகட்டும் எவையெனினும் பத்தாம் வீடு தாக்குதலுக்கு உள்ளானால் தொழில் உத்யோகம் வழியில் பிரச்னைகளை சந்தித்தே தீர வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் பத்தாம் வீடு பலமான அமைப்பில் இருந்தால் தொழிலில் எந்த வித பிரச்னையுமின்றி தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்கள் வென்றெடுக்கலாம்.

பத்தில் ஒரு பாவியேனும் இருந்தால் நல்லது என பழமொழி இருக்கிறது

பத்தாமிடம் வலுவாக இருப்பதை எதை வைத்து  கண்டு பிடிப்பது,

தொழில்

லக்னத்திலிருந்து பத்தாம் வீடு தொழில் உத்யோகத்தினை அடையாளம் காட்டும் வீடாகும். ஒருவரின் லக்னத்திற்கு  பத்தாம் வீட்டினைச் சுற்றி எதிரிகள் குவிந்திருப்பார்கள்.

சிலரது ஜாதகத்தில் எதிரிகள் பலம் குன்றி இருப்பார்கள். சிலரது ஜாதகத்தில் எதிரிகள் பலமிகுந்து இருப்பார்கள். பத்தாமிடத்தினை சூழ்ந்திருக்கும் எதிரிகளின் பலத்தினைப் பொருத்தே ஒருவருடைய தொழிள் வளமையும் வளர்ச்சியும் இருக்கும்.

தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களை வென்றெடுக்கும் உபாயம் அறிந்தால் தான் பரிகாரங்கள் மூலம் தப்பிக்கலாம்.

மேஷம் முதல் கடகம் வரை  எதிரி கிரகங்கள்

மேஷம் லக்னம்

மேஷ லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சனி வருகிறார். சனியே பதினொன்றாம் வீட்டு அதிபதியாகவும் வருவதால் சர லக்ன பாதகாதிபதி சனி தொழிலில் பிரச்னைகளை எளிதாக கொடுத்து விடுவார். தொழில் எதிரிகளாக புதன் சூரியன் செவ்வாய் வருகிறார்கள். இந்த எதிரிகளில் செவ்வாய் சூரியன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான செவ்வாய் சூரியன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம். 

ரிஷபம் லக்னம்

ரிஷப லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சனி வருகிறார். சனியே ஒன்பதாம் வீட்டு அதிபதியாகவும் வருவதால் ஸ்திர லக்ன பாதகாதிபதி சனி தொழிலில் உத்யோகத்தில்  பிரச்னைகளை எளிதாக கொடுத்து விடுவார். தொழில் உத்யோக எதிரிகளாக சந்திரன் புதன் சுக்கிரன் வருகிறார்கள். இந்த எதிரிகளில் சுக்கிரன் புதன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான சுக்கிரன் புதன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

மிதுனம் லக்னம்

மிதுன லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக குரு வருகிறார். குருவே 7ம்  வீட்டு அதிபதியாகவும் வருவதால் உபய லக்ன பாதகாதிபதி குரு தொழிலில் பிரச்னைகளை எளிதாக கொடுத்து விடுவார். தொழில் எதிரிகளாக சூரியன் சுக்கிரன் புதன் வருகிறார்கள். இந்த எதிரிகளில் சுக்கிரன் புதன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான செவ்வாய் சுக்கிரன் புதன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

கடகம் லக்னம்

கடக லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக செவ்வாய் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வந்து பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக புதன் செவ்வாய் சனி வருகிறார்கள். இந்த எதிரிகளில் செவ்வாய் சனி ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான செவ்வாய் சனி பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

சிம்மம்  முதல்  விருச்சிகம் வரை  எதிரி கிரகங்கள்

சிம்மம் லக்னம்

சிம்ம லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சுக்கிரன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வந்து பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக சுக்கிரன் சனி குரு வருகிறார்கள். இந்த எதிரிகளில்  குரு சனியே ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான குரு சனி பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

கன்னி லக்னம்

கன்னி லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக புதன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் செவ்வாய் சனி குரு பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் சனி குரு ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான சனி குரு பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

துலாம் லக்னம்

துலாம் லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சந்திரன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் குரு சனி  சுக்கிரன் பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் சனி சுக்கிரன்   ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான சனி சுக்கிரன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

விருச்சிகம் லக்னம்

விருச்சிக லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சூரியன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் சனி குரு செவ்வாய் பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் செவ்வாய் குரு ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான செவ்வாய் குரு பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

தனசு முதல் மீனம் வரை  எதிரி கிரகங்கள்

தனசு லக்னம்

தனசு லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக புதன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் சனி செவ்வாய் குரு பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் செவ்வாய் குரு ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான செவ்வாய் குரு பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

மகரம் லக்னம்

மகரம்  லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக சுக்கிரன் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் குரு சுக்கிரன் சூரியன் பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில்  சுக்கிரன் சூரியன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான சுக்கிரன் சூரியன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

கும்பம் லக்னம்

கும்ப லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக செவ்வாய் வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும்  செவ்வாய் புதன் சந்திரன் பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் சந்திரன் புதன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான சந்திரன் புதன் பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

மீனம் லக்னம்

மீன லக்னமெனில் பத்தாமிடத்து அதிபதியாக குரு வருகிறார். பத்தாம் வீட்டுக்கு  தொழில் எதிரிகளாக வரும் புதன் சுக்கிரன் சந்திரன் பிரச்னைகளை கொடுக்கக் கூடியவர்களாக வருகிறார்கள். இந்த எதிரிகளில் புதன் சந்திரன் ஆபத்தானவர்கள். தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களான புதன் சந்திரன்  பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிந்து உரிய பரிகாரங்களை செய்வதால் தாக்கும் வீர்யத்தனை சற்று குறைக்கலாம்.

 கிரக பரிகாரங்கள்

தொழிலை துல்லியமாக தாக்கும் கிரகங்களை கண்டறிந்து எளிய பரிகாரங்களை செய்து தொழில் உத்யோக வளமையினை காண முயற்சி  செய்யுங்கள்

பத்தாம் வீட்டினை பாதிக்கும் கிரகங்கள் ஜாதகத்தில் பலமாக அமர்ந்திருந்தால் கடுமையான சோதனைகளையும் வேதனைகளையும் கொடுத்துவிடுவார்.

கிரகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ள  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://gokulamastrology.com/shop/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.