ஆன்மீக யோகங்கள்
Sri Mahalakshmi Upasagar
அற்புதமான ஆன்மீக கிரகங்கள்
அற்புதமான ஆன்மீக கிரகங்களை நாம் அறிந்து கொண்டால் ஆன்மீகத்தின் துணை கொண்டு இறைவனோடு பேசலாம்.
12 லக்னங்களுக்கும் அற்புதமான ஆன்மீகத்தினை அவர்களுக்கு வழங்கும் கிரகங்களை ஒருவர் அறிந்து கொண்டால் அந்த இறைவனை துதித்து வந்தால் நன்மைகளை எளிதாக பெறலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் நன்மை தரும் கிரகங்களும் இருக்கும்
ஒருவரின் ஜாதகத்தில் தொல்லை தரும் கிரகங்களும் இருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மீகம் தரும் கிரகங்களும் இருக்கும்
ஒருவருடைய ஜாதகத்தில் மூன்று விதமான கர்மாக்களை அவர் சந்திக்க வேண்டியிருக்கும்.
அதனில் கடுமையானது முன் கர்மாவானது அவருக்கு வர வேண்டிய நல்ல பலன்களை தடுத்துக் கொண்டே இருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் என்னும் 5மிடமும் பாக்கியம் என்னும் 9ம் இடமும் வலிமையான நிலையில் இருந்தால் அவர்களுக்கு இறைவனின் அருட் பார்வை கிடைத்து விடும்.
ஓருவருடைய பிறந்த லக்னத்திற்கு 5ம் இடத்து அதிபதியும் 9ம் இடத்து அதிபதியும் அற்புதமான ஆன்மீக கிரகங்களாகும்.
இது எப்படி என்கிறீர்களா ?
ஒவ்வொரு லக்னத்திற்கும் அற்புதமான ஆன்மீக கிரகங்கள் எவை எவை என்று பார்ப்போம்.
மேஷ லக்னம்
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5மிடத்தோன் சூரியன் அற்புதமான ஆன்மீக கிரகங்கமாகும். சூரியன் ஒருவருடை லக்னத்தில் உச்சமடையும். குரு 9ல் ஆட்சி பெற்று ஹம்ச யோகத்தனை தரும். மேஷ லக்னத்திற்கு சூரியன் குரு வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5மிடத்து அதிபதியான புதன் 9ம் இடத்து அதிபதியான சனி ஆகிய இருவரும் அற்புதமான ஆன்மீக கிரகங்கமாகும். ரிஷப லக்னத்திற்கு 5மிடத்தில் 5மிடத்து அதிபதியான புதன் உச்சமடைந்து பத்திரை யோகத்தினை தரும். 9ல் சனி அமர்ந்து சச யோகம் கிடைக்கிறது. ரிஷப லக்னத்திற்கு புதன் சனி வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்
மிதுன லக்னம்
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5மிடத்து அதிபதியான சுக்கிரன் 9ம் இடத்து அதிபதியான சனி அற்புதமான ஆன்மீக கிரகங்கமாகும். பாக்கியம் தரும் கிரகமான சனி 5ல் உச்சமடைந்து பிரமிப்பினை கொடுப்பார்.9ல் சனி அமர்ந்தால் சச யோகம் கிடைக்கிறது. 5ல் சுக்கிரன் அமர்ந்தால் மாளவ்யா யோகம் கிடைக்கும். மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் சனி வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
கடகம் லக்னம்
கடக லக்னத்தில் உதித்தோருக்கு கடக லக்ன பஞசமாதிபதி செவ்வாய் 5ல ருசக யோகமும் பாக்கியாதிபதியான குரு பிரகாசமாக கடகத்தில் உச்சமடைந்து ஹம்ச யோகத்தனை தருகிறார். பாக்கியத்தில் குருவே ஹம்ச யோகத்தனை தருகிறார். கடக லக்னத்திற்கு செவ்வாய் குரு வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
சிம்ம லக்னம்
சிம்ம லக்னத்திற்கு லக்னாதிபதியான சூரியன் பாக்கியம் சென்று மேஷத்தில் உச்சமடைகிறார். பாக்கியாதிபதியான செவ்வாய் பாக்கியத்திலேயே ருசக யோகத்தினை தருகிறார். சிம்ம லக்னத்திற்கு குரு செவ்வாய் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் தோன்றியவர்களுக்கு பாக்கியாதிபதியான சுக்கிரன் பாக்கியத்தில் மாளவ்யா யோகத்தினை தருகிறார் பூர்வ புண்ணியத்தில் சனி சச யோகத்தினை தருகிறார். கன்னி லக்னத்திற்கு சனி சுக்கிரன் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
துலாம் லக்னம்
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணியமெனுமிடத்தில் சனியே ஆட்சி பலம் பெற்று சச யோகம் தருகிறார்.பாக்கியத்தில் புதன் அமர்ந்தால் பத்திரை யோகம் கிடைக்கிறது. துலாம் லக்னத்திற்கு சனி வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
விருச்சிக லக்னம்
விருச்சிக லக்னத்தில் தோன்றியவர்கள் 5மிடத்தில் சுக்கிரன் உச்சமும் 9மிடத்தில் குரு உச்சமும் பெறும் பாக்கியசாலிகளாவார்கள். விருச்சிக லக்னத்திற்கு குரு வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
தனசு லக்னம்
தனசு லக்னத்தில் அவதரித்தோருக்கு தனசு லக்ன பாக்கியாதிபதியான சூரியன் பூர்வ புண்ணியத்தில் உச்சமடையும் அதிசயம் காணலாம். 5ம் மிடத்து அதிபதியான செவ்வாய் ருசக யோகத்தினை 5ல் தருகிறார் தனசு லக்னத்திற்கு செவ்வாய் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
மகர லக்னம்
மகர லக்னத்தில் உதித்தவர்களுக்கு பாக்கியாதிபதியான புதன் 9ல் உச்சம் பெற்று பத்திரை யோமும் 5 பூர்வ புண்ணியத்தில் சுக்கிரன் மாளவ்ய யோகம் தருகிறார். மகர லக்னத்திற்கு சுக்கிரன் புதன் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
கும்ப லக்னம்
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லக்னாதிபதியே பாக்கியம் சென்று அமர்ந்து சச யோகமும் பூர்வ புண்ணியத்தில் புதன் பத்திரை யோகமும் வெளிப் படுத்துகிறார்கள். கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்.
மீன லக்னம்
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வ புண்ணியத்தில் குரு அமர்ந்தாலும் லக்னத்தில் அமர்ந்தாலும் ஹம்ச யோகத்தினை கொடுக்கிறார். மீன லக்னத்திற்கு குரு செவ்வாய் வலிமை பெறும்போது ஆன்மீகம் செழிக்கும்
எனவே 12 லக்னத்தில் பிறந்த அனைவருக்கும் ஆன்மீக யோகம் என்பது வலுவாக இருக்கிறது
எவர்களுக்கு 5 மிடம் 9 மிடம் கெட்டு இருக்கிறதோ அவர்களுக்கு இறைவனின் அருள் கிடைப்பதற்கு சிரமம் காண வேண்டியிருக்கும்
வணங்கிட சூரியனுக்கு சிவனும் சந்திரனுக்கு கெளரியும் வேல் கொண்ட முருகனை செவ்வாயால் பாடிட பாற்கடல் நாதனை புதனுக்கு வணங்கிட குருவிற்கு தேடி வணங்கு பிரம்மனை ஆடம்பரமான இந்திரனை சுக்கிரனுக்கு வணங்கு சனிக்கு இயமனப்பா..ராகுவிற்கு மிருத்யுவும் கேதுவிற்கு சித்திர குப்பதனும் என தொழுதிட வளங்கள் சேரும்
ஆன்மீக யோகமானது ஒவ்வொரு லக்னத்திற்கும் தனிப்பட்ட குணங்களை கொண்டிருக்கும்.
இறைவழிபாட்டில் தடைகள் உள்ளவர்கள் 5மிடத்தோன் 9மிடத்தோன் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிடப்பட்ட அமைப்புகள் ஒவ்வொரு லக்னத்திற்கும் கிரகங்கள் எவ்வாறு வலிமை பெறுகிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது,. ஒவ்வொருவரின் லக்னத்திற்கு ஏற்றாற்போல் 5க்குரியவர் 9க்குரியவர்கள் பலமான இடத்தில் அமர்ந்திருக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒவ்வொரு லக்னத்திற்கும் 5 மற்றும் இடத்தில் பாப கிரகங்கள் அமர்ந்தால் அல்லது அந்த விடங்களை பாவ கிரகங்கள் பார்வையிட்டால் தெய்வ நம்பிக்கையானது குறைந்து போகும்.
ஆன்மீக அற்புதங்களை நிகழ்த்த முன் கர்மா கிரகங்கள் 5 அல்லது 9ம் வீடுகளை பார்வையிடுவதும் கூடாது,
எனவே ஒருவரின் ஜாதகத்தில் பலம் குறைந்த 5 மற்றும் 9ம் வீடு அதிபதிகளுக்கு உரிய பரிகார தெய்வங்களை அடையாளம் கண்டு வணங்கி வாருங்கள்
ஆன்மீகத்தில் அற்புதங்களை செய்யலாம்.